search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்டத்தில் மழை நீடிப்பு   சேலம், ஓமலூரில் கன மழை   அதிக பட்சமாக 67.4 மி.மீ. பதிவு
    X

    மாவட்டத்தில் மழை நீடிப்பு சேலம், ஓமலூரில் கன மழை அதிக பட்சமாக 67.4 மி.மீ. பதிவு

    • கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது .

    கன மழை

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் கன மழை பெய்தது. சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து ஆறாக ஓடியது.

    சேலத்தில் திடீரென பெய்த இந்த கன மழையால் பெரமனூர் நாராயண பிள்ளை தெரு, பச்சப்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம் நாராயணநகர் உள்பட பல பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இேத போல சேலம் மாவட்டம் ஓமலூர், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளில் எ ங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    442.7 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 67.4 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 63, ஆத்தூர் 58.2, எடப்பாடி 53, சங்ககிரி 51, பெத்த நாயக்கன்பாளையம் 28.5, தம்மம்பட்டி 25.4, கரியகோவில் 22, கெங்கவல்லி 20, வீரகனூர் 18, ஏற்காடு 11, காடையாம்பட்டி 10, மேட்டூர் 9.2, ஆனைமடுவு 6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 442.7 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×