search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village Council Meeting"

    • சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது .
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியம் ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட உரல் பட்டி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது . இதில் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் ,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் , அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கிராமசேவை கூட்டத்தில் பொது மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
    • ஊராட்சி தலைவர் மாரிமுத்து உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியம் சின்னவீரன்பட்டி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கிராம சபை ஊராட்சியின் தணிக்கை அறிக்கை,சுத்தமான குடிநீர் வினியோகத்துக்கான உறுதிமொழி , கிராம வளர்ச்சி திட்டம் ,அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் வீரத்தாள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நாகவேணி, சரஸ்வதி, ஈஸ்வரன், மாலினி, மாரியம்மாள், ரஞ்சித் குமார்,சுக்குலான் , தட்சிணாமூர்த்தி ,ஊராட்சி தலைவர் மாரிமுத்து உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாத்தூர் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வி
    • ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மாத்தூர் ஊராட்சியில் மே தினத்தையெட்டி கிராம சபைக் கூட்டம் தலைவர் லட்சுமி பாபு தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர் கமலக்கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் பேசியதாவது:-

    நமது ஊராட்சிக்கு செய்யாற்று குடிநீர் கொண்டு வர கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இடையில் கூடுதல் செலவாக 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கபட்டது.

    ஆனால் இவ்வளவு நிதி ஒதுக்கியும் மாத்தூருக்கு குடிநீர் மட்டும் வரவில்லை. என, கேள்வி எழுப்பினர்.

    இங்கு கிராம சபை கூட்டத்திற்கு வந்திருக்கும் அதிகாரியே பதில் சொல்லலாமே.

    மேலும் காலம் தாழ்த்தாமல் செய்யாற்று குடிநீரை மாத்தூருக்கு கொண்டு வர போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    செய்யாற்று குடிநீர் கொண்டு வந்ததற்காக மாங்கால் கூட்ரோட்டில் கட்டப்பட்டுள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டியும், மாத்தூரில் அமைக்கப்பட்டுள்ள தரைதள நீர்தேக்க தொட்டியும் வீணாகித் தான் கிடக்கிறது.

    கடந்த முறை நடந்த கிராம சபைக் கூட்டத்திலும் செய்யாற்று குடிநீர் திட்டத்தைப் பற்றியே முன் வைத்தோம் ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

    அதிகாரிகளான நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என, சரமரியான கேள்வியை எழுப்பினர். இதனால் கிராம சபையில் பதட்டமான சூழ் நிலை ஏற்பட்டது.

    கிணற்றேரி, மாத்தேரி, சித்தேரி ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர் இவைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    இதற்கான தீர்மானமும் கிராம சபையில் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில், ஊராட்சி முன்னாள் பொறுப்பாளர்களான பன்னீர் செல்வம், தேவராஜ், செல்வம், வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள் லட்சுமி, புனிதா, விஜயலட்சுமி, சுரேஷ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

    • கடலி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கடலி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, வட்டார கல்விக் குழு தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் வரவேற்றார்.

    அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மேலும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன், செல்வி ராமசரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன் மற்றும் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவி மேனகா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுடலை முத்து முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாள ராக கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் சுத்தமல்லி கிராமத்தை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    நெகிழி இல்லா நெல்லையை உருவாக்கும் விதமாக பாலித்தீன் கவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, கடைகளுக்கு செல்லும்ேபாது துணிப்பை எடுத்துச் செல்ல வேண்டும். அனைத்து வீடுகளிலும் உறிஞ்சி குழிகளை அமைக்க வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து சேகரிப்பாள ர்களிடம் வழங்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து துணி பையை பயன்படுத்துவோம். நெகிழியை தவிர்ப்போம் என்று உறுதிமொழி எடுக்க ப்பட்டது. அதன்பின்னர் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் கார்த்திகேயன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். மேலும் தூய்மை இந்தியா திட்டம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திய பின், கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் சுரேஷ், மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, கிராம பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் அனிதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராமையன்பட்டி

    பாளை யூனியன் ராமை யன்பட்டி பஞ்சாயத்து கம்மாளன்குளத்தில் பஞ்சாயத்து தலைவர் டேவிட் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் துணைத்தலைவர் செல்வக்கு மார், 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராமத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, குடிநீர், சுகாதாரத்தை பேணி காப்பது, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்துவது என்பத உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரி அமைக்கும் பணியை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை ஜெயக்குமார், துணைத் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் முருகன் வரவேற்றார். யுவராஜ், ஹஜீராரசூல், சவுந்தர்ராஜன், புவியரசி இளங்கோ, ரோஸ் பழனி, மகாலட்சுமி முருகன், சுமித்ராநவின், வரதம்மாள்ராமலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வளர்ச்சி திட்டம் தயாரித்தல், குடிநீர் வினியோகம், தூய்மையான கிராமமாக உருவாக்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மே தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1-ந்தேதி தொழிலாளர் தினத்தன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணிகள் குறித்து விவாதிக் கப்படவுள்ளது.

    இந்த கூட்டங்களில் அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராமசபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அனைவரும் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த கைனூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கைனூர் பஞ்சாயத்து தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஏரி மற்றும் குளங்களில் உள்ள நீர் நிலைகளை சுத்தப்படுத்தி நீரை சேமிக்க வேண்டும், குடிநீர் வீணாவதை தவிர்க்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கிராம சபை கூட்டத்தில் கைனூர் ஊராட்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் நரேஷ், பஞ்சாயத்து செயலாளர் கமலக்கண்ணன், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, கீதா, புவனேஸ்வரி, மீனாட்சி, சங்கர் கணபதி, புருஷோத்தனி, விமலா, துரைசாமி மற்றும் 150 க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் கலந்து கொண்டனர்.

    • பூங்குன்றனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று மகிபாலன்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கால்நடை மருத்துவ உதவியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர், எஸ்.புதூர் ஒன்றியங்களில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட கலெக்டர் உத்தரவிற்கிணங்க அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

    கிருங்கா கோட்டை ஊராட்சியில் இருந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு வீட்டு வரியின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வாராப்பூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    காரையூர் கிராமத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ''அனைவருக்கும் வீடு" என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கண்டவராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர், தெரு விளக்கு, தரமான சாலை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

    கொன்னத்தான் பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் பருவமழை காலங்களில் வரத்து கால்வாய் மூலம் வரும் அதிகப்படியான உபரி நீர் வீணாக செல்வதை தடுக்கும் விதமாக கண்மாய்க்கு குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    துவார் கிராமத்தை சுற்றியுள்ள 11-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் புதிதாக மடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    செல்லியம்பட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊரணி, குளங்கள் மராமத்து பணிகள் செய்து சுற்றுச்சுவர் எழுப்பப்பட வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மகிபாலன்பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் கணியன் பூங்குன்றனா ருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அமைக்கப்பட்ட வரலாற்று நினைவுத்தூனை உடனடியாக திறந்திட வேண்டும். பூங்குன்ற னாருக்கு இப்பகுதியில் மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கிராம சபை கூட்டங்களில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்வழி நாகராஜன், கிருங்கா கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், கொன்னத்தான் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டியன், துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், காரையூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி மதியழகன், கண்டவராயன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி சசிகுமார், செல்லியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், செயலாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுயநிதி குழுக்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் செவிலியர்கள்,கால்நடை மருத்துவ உதவியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நாளை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன்வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலகதண்ணீர் தினத்தை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட் சிகளிலும் முற்பகல் 1 மணிக்கு சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொ ருள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவி னம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், பாரத் நெட் இணையதள வசதி உள்பட வளர்ச்சிப்பணிகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் விவாதிக்க வேண்டும்.

    கிராம சபைக் கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையா ளர்களாக கலந்து கொள்ள வேண்டும். இதற்காக ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்து உத்தர விடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • மகளிர் திட்ட குழுவிற்கு சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    • முடிவில் மகளிர் திட்ட பாலகொலா வட்டார ஓருங்கிணைப்பானர் நித்யா நன்றி கூறினார்.

        ஊட்டி,

    நீலகிரியில் மகளிர் திட்டத்தின் பொறு ப்பாளர்களை உறுப்பினர்களாக கொண்டு, பாலகொலா ஊராட்சியின் 2023-2024ம் ஆண்டுக்கான கிராம அளவிலான முன்னேற்றத்திட்டங்கள் குறித்த விரிவான கணெக்கெடுப்பு நடத்திட முடிவுச்செய்ய ப்பட்டுள்ளது.

    இதற்காக அடுத்து வரவுள்ள பாலகொலா ஊராட்சியின் கிராமசபை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று நடைமுறைப்ப டுத்திட வேண்டி, 5 பேர் கொண்ட சிறப்பு குழு அமைப்பதற்கான சிறப்பு கிராமசபை கூட்டம் பாலகொலா ஊராட்சியில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு பாலகொலா ஊராட்சி தலைவர் கலையரசி முத்து தலைமை தாங்கினார். துணை த்தலைவர் மஞ்சை மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அலுவலர்களாக ஊட்டி ஊராட்சி கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சிந்துஜா, வனத்துறை அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    இக்கூட்டத்தில் வளர்ச்சி பணிக்கான கணக்கெடுப்பு பணியாளர்களாக மகளிர் திட்டத்தை சேர்ந்த மாரியம்மா தலைமையில், சிவரஞ்சனி, கிருஷ்ணவேணி, நவமணி, ரன்ஜினி ஆகி யோரைக்கொண்ட மகளிர் திட்ட குழுவிற்கு சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இக் குழுவினர் அனைத்து கிராமங்க ளுக்கும் சென்று அந்தந்த கிராமத்திற்கு தேவையான வளர்ச்சித்திட்டங்களின் தேவைகள் குறித்து கணக்கெடுத்து, கிராமசபைகளில் ஒப்புதல் பெற்று நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று முடிவு ச்செய்யப்பட்டது. பாலகொலா ஊராட்சி செயலாளர் கார்த்திக், வரவேற்றார். மகளிர் திட்ட பாலகொலா வட்டார ஓருங்கிணைப்பானர் நித்யா நன்றி கூறினார்.

    • கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. மகாத்மா தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம், டெங்கு காய்ச்சல் தடுப்பு, தூய்மை பாரத இயக்கம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சி பொது செலவினம், ஜல் ஜீவன் இயக்கம், சாலை விரிவாக்கம் ஆகிய வளர்ச்சி பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார், ஊர் முக்கியஸ்தர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா, ஊராட்சி உறுப்பினர்கள் பொன்னையா, மகாலட்சுமி, சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    ×