என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டங்கள் நடந்த காட்சி.
பூங்குன்றனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்
- பூங்குன்றனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று மகிபாலன்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கால்நடை மருத்துவ உதவியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர், எஸ்.புதூர் ஒன்றியங்களில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட கலெக்டர் உத்தரவிற்கிணங்க அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
கிருங்கா கோட்டை ஊராட்சியில் இருந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு வீட்டு வரியின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாராப்பூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
காரையூர் கிராமத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ''அனைவருக்கும் வீடு" என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கண்டவராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர், தெரு விளக்கு, தரமான சாலை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.
கொன்னத்தான் பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் பருவமழை காலங்களில் வரத்து கால்வாய் மூலம் வரும் அதிகப்படியான உபரி நீர் வீணாக செல்வதை தடுக்கும் விதமாக கண்மாய்க்கு குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
துவார் கிராமத்தை சுற்றியுள்ள 11-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் புதிதாக மடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செல்லியம்பட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊரணி, குளங்கள் மராமத்து பணிகள் செய்து சுற்றுச்சுவர் எழுப்பப்பட வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மகிபாலன்பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் கணியன் பூங்குன்றனா ருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அமைக்கப்பட்ட வரலாற்று நினைவுத்தூனை உடனடியாக திறந்திட வேண்டும். பூங்குன்ற னாருக்கு இப்பகுதியில் மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கிராம சபை கூட்டங்களில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்வழி நாகராஜன், கிருங்கா கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், கொன்னத்தான் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டியன், துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், காரையூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி மதியழகன், கண்டவராயன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி சசிகுமார், செல்லியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், செயலாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுயநிதி குழுக்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் செவிலியர்கள்,கால்நடை மருத்துவ உதவியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






