search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே சுத்தமல்லி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்- கலெக்டர் கார்த்திகேயன் பங்கேற்பு

    • தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவி மேனகா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுடலை முத்து முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாள ராக கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் சுத்தமல்லி கிராமத்தை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    நெகிழி இல்லா நெல்லையை உருவாக்கும் விதமாக பாலித்தீன் கவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, கடைகளுக்கு செல்லும்ேபாது துணிப்பை எடுத்துச் செல்ல வேண்டும். அனைத்து வீடுகளிலும் உறிஞ்சி குழிகளை அமைக்க வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து சேகரிப்பாள ர்களிடம் வழங்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து துணி பையை பயன்படுத்துவோம். நெகிழியை தவிர்ப்போம் என்று உறுதிமொழி எடுக்க ப்பட்டது. அதன்பின்னர் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் கார்த்திகேயன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். மேலும் தூய்மை இந்தியா திட்டம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திய பின், கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் சுரேஷ், மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, கிராம பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் அனிதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராமையன்பட்டி

    பாளை யூனியன் ராமை யன்பட்டி பஞ்சாயத்து கம்மாளன்குளத்தில் பஞ்சாயத்து தலைவர் டேவிட் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் துணைத்தலைவர் செல்வக்கு மார், 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராமத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, குடிநீர், சுகாதாரத்தை பேணி காப்பது, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்துவது என்பத உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரி அமைக்கும் பணியை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×