என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
- வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை ஜெயக்குமார், துணைத் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் முருகன் வரவேற்றார். யுவராஜ், ஹஜீராரசூல், சவுந்தர்ராஜன், புவியரசி இளங்கோ, ரோஸ் பழனி, மகாலட்சுமி முருகன், சுமித்ராநவின், வரதம்மாள்ராமலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் வளர்ச்சி திட்டம் தயாரித்தல், குடிநீர் வினியோகம், தூய்மையான கிராமமாக உருவாக்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






