search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "victims"

    தூத்துக்குடியில் ‘காலா’ படம் வெளியான தியேட்டரில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு ரஜினி ரசிகர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வந்தபோது ரஜினி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்வது சரியல்ல என்று கூறும் ரஜினியின் ‘காலா’ படத்தில் போராட்ட காட்சிகள் இடம் பெற்றிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது

    இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படம் இன்று வெளியானது. தூத்துக்குடியில் ‘காலா’ படம் காசிக்கடை பஜாரில் உள்ள பாலகிருஷ்ணா தியேட்டரில் திரையிடப்பட்டது. காலை 9 மணிக்கு ரசிகர்களுக்கான பிரத்யேக காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதற்காக ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் காலையிலேயே அந்த தியேட்டரின் முன் திரண்டனர்.

    பின்பு 8.30 மணியளவில் ரசிகர்கள் அனைவரும் தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டனர். படம் திரையிடுவதற்கு முன்பாகவே தியேட்டருக்குள் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் திடீரென எழுந்து நின்றனர். ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரையின் அருகில் நிற்க, மற்றவர்கள் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் முன் எழுந்து நின்றனர். பின்பு அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இதையடுத்து ‘காலா’ படம் திரையிடப்பட்டது. அதனை ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் 31-ந் தேதி தூத்துக்குடி செல்கிறார்.
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டில் உணர்வுப்பூர்வமாக பங்கேற்று சென்னை திரும்பியுள்ளார்.

    வெளிநாட்டில் இருந்து உடனடியாக சென்னை திரும்ப முடியாத சூழலில், கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கும், படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் வருகின்ற 31-ந் தேதி நேரில் சந்தித்து தனது வருத்தத்தையும், துக்கத்தையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த தொகையை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஐகோர்ட் மதுரை கிளை அரசுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், இழப்பீடு தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

    படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
    சில தினங்களுக்கு முன்பு எங்கள் நாட்டில் (ஆப்கானிஸ்தான்) நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிப்பதாக ஐதராபாத் பவுலர் ரஷித்கான் கூறியுள்ளார். #RashidKhan
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் ஐதராபாத் நிர்ணயித்த 175 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் 8.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்களுடன் நல்ல நிலையிலேயே இருந்தது. ஆனால் நிதிஷ் ராணா (22 ரன்) ரன்-அவுட் ஆனதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. மேலும் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 3 முன்னணி விக்கெட்டுகளை சாய்க்க, கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுக்க முடிந்தது.

    10 பந்தில் 34 ரன், 3 விக்கெட், 2 கேட்ச் என்று ஆல்-ரவுண்டராக ஜொலித்து அட்டகாசப்படுத்திய ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் 19 வயதான ரஷித்கான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். அவர் கூறுகையில், ‘சில தினங்களுக்கு முன்பு எங்கள் நாட்டில் (ஆப்கானிஸ்தான்) கிரிக்கெட் ஆட்டம் நடந்து கொண்டிருந்த போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிக்கிறேன். என்னிடம் இருந்து இத்தகைய செயல்பாடு மிகவும் தேவையாக இருந்தது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறைகளிலும் 100 சதவீத திறமையை வெளிப்படுத்தவே எப்போதும் முயற்சிக்கிறேன். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் எனது பங்களிப்பை அளிக்க முடியாமல் போகும் போது, அடுத்து எனது கவனம் பீல்டிங் மீது இருக்கும்’ என்றார்.  #RashidKhan

    தூத்துக்குடியில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கிய அரசு நிவாரண தொகையை வாங்க பலியானோர் குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் போராட்டம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையை சேர்ந்த தொழிலாளி தமிழரசனும் (வயது 45) ஒருவர் ஆவார். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் அதிகாரிகள் குறுக்குச்சாலையில் உள்ள தமிழரசன் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த குடும்பத்தினரிடம், உங்களது குடும்பத்துக்கு அரசு அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரண தொகை வந்துள்ளது. மேலும் உங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    நிவாரண தொகையை தாசில்தார் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். ஆனால் தமிழரசன் குடும்பத்தினர், அரசு அறிவித்த நிவாரண தொகை எங்களுக்கு வேண்டாம். அதை நாங்கள் வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு இருந்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து தமிழரசன் குடும்பத்தினர் கூறுகையில், எங்களுக்கு அரசு நிவாரண உதவி உள்பட எந்த ஒரு உதவியும் தேவையில்லை. அதற்கு பதிலாக ஸ்டெர்லைட் ஆலையை மூடினாலே போதும். அதுவே அரசு எங்களுக்கு செய்யும் பெரும் உதவி என்றனர்.

    இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், தமிழரசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிவாரண உதவியாக ரூ.3 லட்சத்தை வழங்கினார். ஆனால் அதனையும் அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர்.

    ×