search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicle collision"

    • திருமங்கலம் அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியானார்.
    • இருசக்கர வாகனத்தில் வேலைக்காக பாப்பநாயக்கன்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ராம்முன்னி நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது37). இவரது மனைவி சங்கரேஸ்வரி.

    துரைராஜ் தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வேலைக்காக பாப்பநாயக்கன்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல்(45) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், துரைராஜ் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் துரைராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலே பலியானார்.

    இச்சம்பவம் குறித்து துரைராஜ் மனைவி சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் மீது டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
    • போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பொங்கலூர் ஆர். புதுப்பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகன் சுரேஷ் (வயது 33 ). இவரும் ராமம்பாளையத்தைச் சேர்ந்த வீரன் என்பவரது மகன் ரமேஷ் (32). இவர்கள் இரண்டு பேரும் நேற்று இரவு பொங்கலூர் வந்துவிட்டு ராமம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பவர் ஹவுஸ் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் காயமடைந்த ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரோட்டோரமாக ஒருவர் இறந்து கிடந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் பிரிவு அருகே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து யார் அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டுள்ளனர் .அவரது வாகனத்தில் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் பொருட்கள் இருந்ததால் கட்டிட தொழிலாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • விருத்தாசலம் அருகே வாகனம் மோதி பள்ளி காவலாளி பலியானார்.
    • வண்டியை ஓட்டி வந்த ஓட்டுநர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 60). இவர் குப்பநத்தம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும்போது நெய்வே லியில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவர் மீது மோதிய டாட்டா ஏசி வாகனம் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது, வண்டியை ஓட்டி வந்த ஓட்டுநர் வண்டியை அங்கே யே விட்டுவிட்டு தப்பி ஓடினார். தகவலின் பேரில் அங்கு வந்த விருத்தாசலம் போலீ சார் ராஜலிங்கம் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தா சலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பித்தனர்.இது குறித்து விருத்தா சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

    ×