search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vacation"

    • திருப்பூர் பின்னலாடை துறையை சார்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • தீபாவளி அன்று திருப்பூர் பஜார்களில் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை துறையை சார்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பின்னலாடை சார்ந்த உப தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என திருப்பூர் நகரத்தில் ஏராளமானோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்கு வேலைக்கு வருவோர், பனியன் துணிகளை எடுத்துச்செல்லும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் என திருப்பூர் நகரில் உள்ள அனைத்து சாலைகளுமே எப்போதும் வாகனப் போக்குவரத்து இருந்தபடியே இருக்கும்.

    குறிப்பாக அவிநாசி சாலை, பி.என் சாலை, ஊத்துக்குளி சாலை மூன்றும் இணையும் குமரன் சாலை எப்போதும் பரபரப்பாகவும், வாகன நெரிசலோடும் காணப்படும். முக்கிய வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால் மக்கள் கூட்டமும் இருக்கும். திருப்பூரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைக்கும் சாலையாக குமரன் சாலை இருப்பதால் இரவு நேரம் சில மணி நேரம் மட்டும் வாகனப் போக்குவரத்து இன்றி காணப்படும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் விடுமுறை விடப்பட்டதால் திருப்பூர் நகரில் தற்போது சற்று போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுகிறது. பனியன் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறையால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லாம வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் பஜார்களில் ஹாயாக உலா வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். தீபாவளி அன்று திருப்பூர் பஜார்களில் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது மாலை நேரங்களில் பஜார்களில் குவிந்து வருகின்றனர்.மேலும் மாநகராட்சி பூங்கா மற்றும் பொழுது போக்கு மையங்களில் குவிந்து வருகின்றனர்.

    வருகிற திங்கட்கிழமை முதல் பனியன் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என்பதால் அதன்பிறகு திருப்பூர் மீண்டும் சுறுசுறுப்பாகும்.

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது. சுமார் 2.5 லட்சம் விசைத்தறிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

    வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

    அதேபோல், தீபாவளி, பொங்கல் மற்றும் கோவில் திருவிழாவுக்கு வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த வாரம் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். ஆண்டு முழுவதும் ஓய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கும் விசைத்தறிகள், தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றதால் ஓய்வெடுத்து வருகின்றன.

    இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில்,சொந்த ஊர் சென்றுள்ள தொழிலாளர்கள் திரும்பி வந்த பிறகுதான் விசைத்தறிகளை இயக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    தீபாவளி பண்டிகையின் போது தீக்காய விபத்துகளை தடுக்க மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மாவட்டத்தில் தயாராக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தியது.இதற்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு டாக்டர், 3 செவிலியர், ஊழியர் அடங்கிய பிரத்யேக குழு பண்டிகைக்கு முதல் நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை தயார் நிலையில் இருந்தது.

    தீக்காயம் ஏற்பட்டால் சிகிச்சையளிக்க தேவையான ஏற்பாடுகளுடன் மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ்களும் தயார்படுத்தப்பட்டன. இருப்பினும், குறிப்பிட்டு சொல்லும்படியான தீ விபத்து எதுவும் நடக்கவில்லை.சிறிய அளவிலான தொடர் சிகிச்சை அளிக்க அவசியமில்லாத வகையிலான தீ விபத்துகளே நடந்துள்ளது. இதனால் மருத்துவம், தீயணைப்பு அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ் அலுவலர், பணியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

    இது குறித்து திருப்பூர் மருத்துவ கல்லுாரி முதல்வர் முருகேசன் கூறுகையில், தீபாவளி நாளில் நான்கு ஆண், ஒரு பெண், ஒரு குழந்தை உட்பட 6 பேர், பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தனர். அவர்களுக்கு சிகிச்சையளித்து, மருந்து, மாத்திரைகளை வழங்கி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெறும் வகையிலோ, உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் அளவில் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றார்.

    திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் காங்கேயபூபதி கூறுகையில், தக்க ஏற்பாடுகளுடன் தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.மாவட்டத்தில் பல்லடத்தில் 2,திருப்பூர் வடக்கு பகுதியில் 2 என மொத்தம் 4 சிறிய விபத்துக்கள் நடந்தது. உடனடியாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. காயம், சேதம் எதுவுமில்லை என்றார்.

    கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக பல்லடம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கோவை, திருச்சி, திருப்பூர், மதுரை, கொச்சி, உடுமலை, பொள்ளாச்சி, அவிநாசி செல்லும் மாநில நெடுஞ்சாலைகளும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகின்றன.

    இதனால் பல்லடத்தில் எப்போதும், கட்டுக்கடங்காத வாகன நெரிசல் ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களால் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை திக்குமுக்காடியது. அண்ணா நகர் முதல் தாராபுரம் ரோடு பிரிவு வரை வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து சென்றன.

    ஆனால் தீபாவளி நாளன்றும், தற்போதும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை குறைந்த அளவு வாகனங்களால் வெறிச்சோடி காணப்படுகிறது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற பெரும்பாலானவர்கள் இன்னும் 3 நாட்களில் திரும்ப வாய்ப்பு உள்ளதால் வரும் நாட்களில் மீண்டும் பழையபடி போக்குவரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    • கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரிகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
    • முதல் 2 தவணை தடுப்பூசிகளை ஒப்பிடும்போது பூஸ்டர் தடுப்பூசி குறைந்த அளவு பயனாளிகளே செலுத்திக் கொண்டுள்ளனா்.

    கோவை:

    கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. ெகாரோனா நோய்த் தொற்று தொடா்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொது மக்களிடையே முதல் 2 தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதற்கு இருந்த ஆா்வம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இல்லை. முதல் 2 தவணை தடுப்பூசிகளை ஒப்பிடும்போது பூஸ்டர் தடுப்பூசி குறைந்த அளவு பயனாளிகளே செலுத்திக் கொண்டுள்ளனா்.

    இந்நிலையில் கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரிகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்திருந்தாா். இதனைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியினை சுகாதாரத் துறையினா் தொடங்கியுள்ளனா்.

    இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 32 லட்சத்து 33 ஆயிரத்து 171 போ், 2-வது தவணை தடுப்பூசி 27 லட்சத்து 77 ஆயிரத்து 7 போ் செலுத்திக் கொண்டுள்ளனா். ஆனால், பூஸ்டர் தடுப்பூசியை 2 லட்சத்து 11 ஆயிரத்து 561 போ் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனா்.

    தொடக்கத்தில் கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததால் மக்கள் போதிய அளவில் ஆா்வம் காட்டாமல் இருந்தனா். தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.

    இருந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் போதிய இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர தொழிற்சாலைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பூங்காவுக்கு வருபவர்களின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பூங்காவின் அருகே தனியாக இடம் ஒதுக்கப்பட்டது.
    • சுய உதவி குழுக்களிடம் வாகனம் நிறுத்துவதற்கான கட்டண விவரம் உள்ளிட்ட பலவற்றை கேட்டு அறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவு மணிமண்டப பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தளமாக விளங்கி வருகிறது. இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழும் அனைத்து வித மான விளையாட்டுபொரு ட்களும் உள்ளன. இதனால் மணிமண்டபம் பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்படும்.

    இந்த நிலையில் பூங்கா வுக்கு வருபவர்களின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பூங்காவின் அருகே தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுக்களால் இந்த வாகன நிறுத்தம் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுய உதவி குழுக்களிடம் வாகனம் நிறுத்துவதற்கான கட்டண விவரம் உள்ளிட்ட பலவ ற்றை கேட்டு அறிந்தார்.

    இந்த பார்க்கிங்கில் இருச க்கர வாகனம் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படுகிறது. கட்டணமாக ரூ.5 மட்டும் வசூலிக்கப்படுகிறது. மேலும் கண்காணிப்பு கேமரா விரைவில் பொருத்தப்பட உள்ளது. இதுபோல் பல்வேறு வசதிகள் உள்ளன.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார்மணிக ண்டன், ஊரக வாழ்வா தார இயக்க திட்ட இயக்கு னர் லோகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள்சிவா, சரவணன் சீனிவாசன், சுவாமிநாதன், நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்ச ந்திரன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறை காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #Specialbus

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறை காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

    சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு 150 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் விடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

    மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம் செல்வதற்கு 50 பஸ்களும், கோவளத்திற்கு 3 பஸ்களும், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 21 பஸ்களும், மாம்மல்லபுரம்- 7 பஸ்களும் விடப்பட்டுள்ளது.

    பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு 8, திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு -8, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 3 சிறப்பு பஸ்கள் வீதம் விடுமுறை நாட்களில் விடப்படுகின்றன.

    இந்த சிறப்பு பஸ்கள் 21 ஜி, 27 எல், 25 ஜி, 11 எச், 12 ஜி, 45 பி, 102, 13, 6டி, 2ஏ, 27பி, 22 பி, 27எச், 40ஏ, 29ஏ, 500, 517, பி18, ஜி18, ஈ18, 70வி, 99, வி51, 517கட், 109கட், 515, 588, 514, 547, 580, 159, 50, 72சி, 29இ, 59 ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. #Specialbus

    சக மாணவர் தற்கொலைக்கு நீதி கேட்டு போராடியதன் விளைவாக கல்லூரிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள் எழுமாத்தூர் கலை கல்லூரியை முற்றுகையிட்டனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் மலையடிவாரத்தில் அரசு கலை கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் படித்து வந்த நடுப்பாளையத்தை சேர்ந்த மாணவர் தினேஷ் குமார் (30). திடீரென தற்கொலை செய்து கொண்டார். மாணவர் சக மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் கடந்த 3 மாதத்துக்கு முன் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் இதேபோல் ஏற்பட்ட தகராறில் 2-வது தடவையாக மாணவர் தினேஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் மாணவர் தினேஷ் 2 தினங்களுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சஸ்பெண்டு செய்யப்பட்டதால் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இதையொட்டி மாணவ- மாணவிகள் தினேஷ்குமார் தற்கொலைக்கு காரணமான கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரின்ஸ்பாலை கைது செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டம் காரணமாக இன்று முதல் 5 நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கல்லூரி மூடப்பட்டதை கண்டித்தும் பிரின்ஸ்பாலை கைதுசெய்ய கோரியும் கல்லூரி முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

    மேலும் கல்லூரிக்கு போக பஸ்சில் இருந்து இறங்கி 2 கி.மீட்டர் தூரம் நடத்துதான் போக வேண்டும் ஆகவே பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரியும் மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    டெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு புதுவை முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #Narayanasamy

    புதுச்சேரி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும், வாஜ்பாய் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

    மேலும் புதுவையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் அரசு விடுமுறையும் அறிவித்துள்ளார். அதே போல் புதுவை அரசு சார்பில் வாஜ்பாய் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


     

    இந்த நிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வாஜ்பாய் இறுதிச்சடங்கில் பங்கேற்க இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    ×