search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Budget"

    • பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1500 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
    • அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி கூடியது. அன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.

    இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) பட்ஜெட் தாக்கலுக்காக சட்டசபை மீண்டும் கூடியது. சபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு திருக்குறள் வாசித்து சபையை தொடங்கி வைத்தார்.

    சபாநாயகர் அப்பாவு பேசுகையில், 2023-24-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் வரிசையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் முன் வரிசையில் வந்து நிதி நிலை அறிக்கையை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    இதையடுத்து 2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    தமிழகத்தில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்ற பெருமையுடன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக பாதுகாப்புக்கும் அரசு முக்கியத்துவம் தருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    உக்ரைன் போர், உலக அளவிலான பொருளாதார சிக்கல் நடப்பு நிதியாண்டிலும் தொடர்கிறது. என்றாலும் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

    மத்திய அரசை விட தமிழக அரசு நிதி பற்றாக்குறையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்திருக்கிறோம்.

    கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு, பெரு வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காரணமாக தொடர்ந்து நிதிநெருக்கடி ஏற்பட்டது. என்றாலும் நாம் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சொத்து வரி வருவாய் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    என்றாலும் தமிழகத்தில் அனைத்து சமூக நல திட்டங்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வளர்ச்சி பெறுவதற்கு உறுதி செய்திருக்கிறோம். தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதை அனைத்து துறைகளிலும் உறுதி செய்திருக்கிறோம்.

    டாக்டர் அம்பேத்கர் படைப்புகள் அனைத்தும் தமிழ்மொழியில் மொழி பெயர்க்கப்படும். தமிழகத்தில் விரைவில் சர்வதேச தமிழ் கணினி மாநாடு நடத்தப்படும். சென்னை சங்கமம் நிகழ்ச்சி மேலும் 8 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் 25 இடங்களில் நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். தஞ்சையில் சோழர்கால அருங்காட்சியகம் உருவாக்கப்படும்.

    தமிழகத்தில் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்காக ரூ.233 கோடி செலவில் 3,959 வீடுகள் கட்டி கொடுக்கப்படும். 591 வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இலவச பயணத்துக்கு அனுமதி வழங்கப்படும். 211 தொழிற்சாலைகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    வடசென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய நவீன பன்னோக்கு பிரிவு செவிலியர் விடுதி போன்றவை ரூ.147 கோடி செலவில் கட்டப்படும். கிண்டியில் கருணாநிதி பெயரில் புதிய பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும்.

    மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும்.

    பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1500 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மருத்துவ துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழக ராணுவ வீரர்களுக்கான கருணைத்தொகை இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.40 லட்சமாக அதிகரித்து வழங்கப்படும்.

    அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தக கண்காட்சி நடத்தப்படும். ஐ.ஏ.எஸ். தேர்விற்கு படிக்கும் 1000 பேருக்கு நிதியுதவித் தொகை வழங்கப்படும். பள்ளி கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    மதுரையில் பிரமாண்டமாக அனைத்து நவீன வசதிகளுடன் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இது கலைஞர் நூலகம் என்று அழைக்கப்படும். இந்த நூலகம் வருகிற ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

    சென்னை அம்பத்தூரில் இளைஞர்கள் நலனுக்காக மாநில திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும்.

    அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பாளையம்கோட்டை சித்த மருத்துவம் கல்லூரிக்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.110 கோடி செலவில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடியில் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
    • கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக அதிகரிப்பு .

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-

    ராணுவத்தில் உயிர் தியாகம் செய்யும் படை வீரர்கள் குடும்பத்திற்கான நிதியுதவி ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தூய்மை பணிகளுக்கு நவீன இயந்திரம் வாங்கப்படும்.

    ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும். இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.

    மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிடர் நல விடுதிகள் ரூ.100 கோடியில் கட்டப்படும். ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கீடு.

    அயோத்தி தாசர் பண்டிதர் பெயரில் ஆதிதிராவிடர் குடியிருப்பு அமைக்க ரூ.3,511 கோடி நிதி ஒதுக்கீடு.

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடியில் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்

    வடசென்னை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.147 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2.20 லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். பொது விநியோகத் திட்டத்திற்கு ரூ.10,500 கோடி நிதி ஒதுக்கீடு.

    மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ.320 கோடி ஒதுக்கீடு. மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் அதிகரிப்பு.

    மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிப்பு. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக அதிகரிப்பு .

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வெள்ளத்தடுப்பு பணியை மேற்கொள்ள ரூ.434 கோடி நிதி ஒதுக்கீடு.

    கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கீடு

    217 செயற்கை பவள பாறைகள் அமைக்கப்படும். கடல் அரிப்பு, கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடியில் நெய்தல் மீட்பு இயக்கம்.

    மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும். ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோபி வட்டாரத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்.

    10,000 கிலோமீட்டர் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும். தெருநாய்கள் இனவிருத்தி கட்டுப்பாட்டிற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூ.7500 வழங்கப்படும்.
    • அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தக திருவிழா நடத்தப்படும். சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

    பள்ளிக்கல்வியில் மாணவ சேர்க்கை உயர்ந்துள்ளது. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். நாட்டுப்புற கலைகள் மற்றும் கலைஞர்களை பாதுகாக்க 11 கோடி ஒதுக்கீடு.

    உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரிக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு. சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் சிஎம்டிஏ மூலம் சென்னையில் அமைக்கப்படும்.

    54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும். தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு. அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

    நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு. ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூ.7500 வழங்கப்படும்.

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி நிதி ஒதுக்கீடு. உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு. ரூ.25 கோடியில் ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படும்.

    இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 711 தொழில் நிறுவனங்களில் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் செயல்படுத்தப்படும்.
    • வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம்.

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். சரியாக 10 மணிக்கு பட்ஜெட் தொடங்கிய நலையில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சி வெற்றி நடைபோட்டு வருகிறது. இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம்.

    மொழிப்போர் தியாகி தாளமுத்து, நடராஜருக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்.

    தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும். அம்பேத்கரின் நூல்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்.

    கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும். 711 தொழில் நிறுவனங்களில் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் செயல்படுத்தப்படும்.

    இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் ரூ.223 கோடி செலவில் கட்டப்படும். சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் தஞ்சையில் சோழர் அருங்காட்சியம் அமைக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் 25 பகுதிகளில் நாட்டுப்புற பயிற்சி மையம் அமைக்கப்படும். வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • தமிழக பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.
    • சபாநாயகர் அப்பாவு அமளியில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தினார்.

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    சரியாக 10 மணிக்கு பட்ஜெட் தொடங்கிய நலையில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    சபாநாயகர் அப்பாவு அமளியில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தினார். மேலும், அவர்கள் கூறும் கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்.
    • பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்.

    சென்னை:

    2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-

    * வரும் நிதியாண்டில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும். உரிமைத் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அண்ணா பிறந்தநாளான செப்.15-ந்தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    * நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு.

    * சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்.

    * வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்.

    * பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்.

    * பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

    * சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்.

    • தமிழக பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்படுகிறது.
    • குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

    தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரமும் அதில் இடம் பெற்றிருக்கும். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுமார் 2 மணி நேரம் இந்த பட்ஜெட் உரையை வாசிப்பார். அதன்பிறகு சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவடையும். இதன்பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.

    இந்தக் கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    • தமிழக பட்ஜெட் நாளை காலை தாக்கல் செய்யப்படுகிறது.
    • குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

    தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரமும் அதில் இடம் பெற்றிருக்கும். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுமார் 2 மணி நேரம் இந்த பட்ஜெட் உரையை வாசிப்பார். அதன்பிறகு நாளைய சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவடையும். இதன்பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும்.

    இந்த கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும். அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    சட்டசபையில் நாளை பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

    சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் பட்ஜெட் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தெரியவரும். சுமார் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியினர் இடையே கடும் விவாதம் ஏற்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் அவ்வப்போது பேசுவார்கள். நிறைவு நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரிவாக பதில் அளிப்பார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சட்டசபையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவரும் அவையில் பேச வாய்ப்பு உள்ளது.

    இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெற்ற வெற்றி சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசியல் ரீதியாக எதிரொலிக்கும்.

    அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல், அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளிடையே ஏற்பட்டு உள்ள உரசல் என பல்வேறு விவகாரங்களும் சட்டசபையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, நீட் தேர்வு, பேனா நினைச்சின்னம், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதால் சட்டசபையில் அனல்பறக்கும் விவாதம் நடைபெறும்.

    சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை உள்ளது. இந்த இருக்கை இடம் மாற்றப்படுமா? அல்லது அதே இடத்தில்தான் இருவரும் அமருவார்களா? என்பதும் நாளை தெரியவரும்.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் அரசுக்கு திருப்பி அனுப்பியதால் அந்த மசோதா மீண்டும் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

    • சென்னை லலித் கலா அகாடமியில் புகைப்பட கண்காட்சியை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார்.
    • ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின்னரே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார்.

    சென்னை:

    தமிழக பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை லலித் கலா அகாடமியில் புகைப்பட கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக சபாநாயகர் அப்பாவு இந்தக் கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சமூகத்தில் பல மாற்றங்கள், சீர்திருத்தங்கள், வளர்ச்சிக்கு ஒரேயொரு புகைப்படமே காரணமாக இருந்துள்ளன.

    100 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட அப்படிப்பட்ட புகைப்படங்களை இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருப்பது பாராட்டுக்கு உரியது. நான் எப்போதும் பத்திரிகையாளர்களுடன் தான் இருப்பேன். புகைப்பட கலைஞர்கள் ஒரு புகைப்படத்தை எடுத்து மறுநாள் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் என்கிற பணியை செய்கிற அதே வேளையில், அதை பத்திரிகையில் பார்ப்பதற்கு ஆவலாக காத்திருப்போம். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. அடுத்த நொடியே நேரலையாக ஒளிபரப்பாகிறது. இதெல்லாம் புகைப்படத்துறையின் பரிணாம வளர்ச்சி தான்.

    உலகத்தில் எந்த மூலையில் நடக்கும் சம்பவங்கள் ஆனாலும் உடனடியாக பார்க்கக்கூடிய விஞ்ஞான வளர்ச்சி பாராட்டுக்குரியது.

    ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின்பு தான் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்பது குறித்து தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டார்.

    ஐராவதம் மகாதேவன் நூல்கள் அரசுடமையாக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #TNAssembly #Edappadipalaniswami
    சென்னை:

    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சர். பி.டி. தியாகராஜர் பிறந்த நாள் விழா மற்றும் ஜராவதம் மகாதேவனின் நூல்கள் அரசுடைமையாக்குவது தொடர்பான கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:-

    வெள்ளுடை வேந்தர் சர். பி.டி. தியாகராஜருக்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 27ஆம் நாள் சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஏற்கனவே அரசு சார்பில் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

    ஐராவதம் மகாதேவன் அவர்களது நூல்களை அரசுடைமையாக்க ஏற்கனவே என்னால் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #TNAssembly #Edappadipalaniswami
    பொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #DMKWalkout #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, பொங்கல் பரிசுக்கான நிதி தொடர்பாக அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    வெளிநடப்பு செய்த பின்னர், திமுக எம்எல்ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பொன்முடி எம்எல்ஏ கூறியதாவது:-



    ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்கியது தொடர்பான நிதி கணக்கில் தவறு உள்ளது. மொத்தம் உள்ள 2.01 கோடி ரேசன் கார்டுகளுக்கும் தலா 1.000 ரூபாய் வழங்கினால்கூட, 2010 கோடி ரூபாய் தான் ஆகும்.

    இதற்காக பட்ஜெட்டில் ரூ.1,985 கோடி ஒதுக்கிய நிலையில், துணை பட்ஜெட்டில் பொங்கல் பரிசுக்காக ரூ.2019.11 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு குறித்து கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் முதல் முறையாக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. #DMKWalkout #TNAssembly
    சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.396 கோடி செலவில் கால்நடை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNCM #Edappadipalaniswami #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்79ஐ ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த, ஆசியாவிலேயே பெரிய, ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடைப் பூங்கா ஒன்று சுமார் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மூன்று பிரிவுகளாக அமையவுள்ள இப்பூங்காவின் முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள் மற்றும் நாட்டின நாய் இனங்களான ராஜ பாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கவும், இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தவும், மூன்றாவது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இந்த நவீன பூங்கா தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்களுக்கும், அங்கே வந்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும், நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். உலகத்தரம் வாய்ந்த இவ்வளாகம், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட வளாகமாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    “மரபுத் திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பினக் காளைகளைக் கொண்டு 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய உறை விந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்” என்று துணை முதலமைச்சர் தனது 2019-2020ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்த உறைவிந்து உற்பத்தி நிலையம் இந்த வளாகத்திலேயே அமையப் பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மிகப்பெரிய அளவில் இப்பூங்கா அமைக்கப்படுவதால், இதனை நிர்வகிப்பதற்கு, தொடர்புடைய துறை இயக்குநர்கள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக் கழகம் மற்றும் அம்மாவின் பெயரால் அமைந்துள்ள மீன்வள பல்கலைக்கழகத்தின் பதிவாளர்கள் ஆகியோரை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக கொண்டு, ஒரு சங்கம் அமைக்கப்பட்டு, பதிவு செய்யப்படும். இத்திட்டத்தை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்திட கால்நடை பராமரிப்பு கூடுதல் இயக்குநர் பதவி உருவாக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தினசரி நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை இம்மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami #TNAssembly
    ×