search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Budget"

    • கோவை-அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
    • மதுரையில் ரூ.8500 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டப்பணிகள் 63,246 கோடி ரூபாய் செலவில் 119 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதன் முதல் வழித்தடமாக, பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை-அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

    மதுரையில் ரூ.8500 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பூங்காவை நிறுவி, தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் கலைஞர்.
    • ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பூங்காவை நிறுவி, தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் கலைஞர். இத்துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில் 7 மாவட்டங்களில் நியோ-டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதன் நீட்சியாக ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
    • எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில்,

    நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க பதிவு கட்டணத்தை 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8.6.2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

    இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

    • மகளிர் உரிமை தொகையில் யார் யார் பயன்பெறுவார்கள் என்ற வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
    • அதிமுக ஆட்சியில் மகளிருக்கு செல்போன் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்?

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் பற்றி கூறுகையில், அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் என்று சொல்லிவிட்டு இப்போது தகுதியான குடும்ப தலைவிக்கு என்கிறார்கள். ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை. ரூ.7000 கோடி ஒதுக்கிவிட்டு 1 கோடி பேருக்கு ரூ.1000 கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை கூறி இருந்தார்.

    இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 85 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மகளிர் உரிமை தொகையில் யார் யார் பயன்பெறுவார்கள் என்ற வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

    பட்ஜெட்டை முழுமையாக படித்திருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் முழு நிதிநிலை அறிக்கை கேட்டிருக்கலாம்; ஆனால் கேட்கவில்லை.

    அதிமுக ஆட்சியில் மகளிருக்கு செல்போன் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்?

    பட்ஜெட்டை முழுமையாக படிக்காமலேயே எடப்பாடி பழனிசாமி கருத்து கூறி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
    • போக்குவரத்து துறைக்கு ரூ. 8,056 கோடியும், கூட்டுறவுத் துறைக்கு ரூ. 16,262 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்:-

    துறைகள்

    நிதி ஒதுக்கீடு

    பள்ளிக்கல்வித்துறை

    ரூ. 40,299 கோடி

    உயர்கல்வித் துறை

    ரூ. 6,967 கோடி

    மருத்துவத்துறை

    ரூ. 18,661 கோடி

    அண்ணல் அம்பேத்கர் திட்டம்

    ரூ. 1000 கோடி

    ஆதி திராவிடர் நலத்துறை

    ரூ. 3,513 கோடி

    மாற்று திறனாளி நலத்துறை

    ரூ. 1,444 கோடி

    பிற்பட்டோர் நலத்துறை

    ரூ. 1,580 கோடி

    காலை உணவு திட்டம்

    ரூ. 500 கோடி

    பள்ளி மேம்பாட்டு திட்டம்

    ரூ. 1,500 கோடி

    மகளிர் சுய உதவி குழு கடன்

    ரூ. 30,000 கோடி

    பொது வினியோக உணவு திட்ட மானியம்

    ரூ. 10,500 கோடி

    கூட்டுறவுத் துறை

    ரூ. 16,262 கோடி

    விவசாயம் மற்றும் நகை கடன் தள்ளுபடிக்கு

    ரூ. 3,993 கோடி

    வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை

    ரூ. 1,248 கோடி

    கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்கு

    ரூ. 2000 கோடி

    கோவை செம்மொழி பூங்கா

    ரூ. 172 கோடி

    ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2-ம் கட்டம்

    ரூ. 7,149 கோடி

    கிராமங்களில் நீர்நிலைகள் புதுப்பிக்க

    ரூ. 800 கோடி

    ஊரக வளர்ச்சித்துறை

    ரூ. 22,562 கோடி

    நகராட்சி நிர்வாகத்துறை

    ரூ. 24,476 கோடி

    நெடுஞ்சாலைத்துறை

    ரூ. 19,465 கோடி

    மீனவர் நலன்

    ரூ. 389 கோடி

    கூவம் அடையாறு மறுசீரமைப்பு

    ரூ. 1,500 கோடி

    போக்குவரத்து துறை

    ரூ. 8,056 கோடி

    சென்னை மெட்ரோ

    ரூ. 10,000 கோடி

    கோவை மெட்ரோ

    ரூ. 9,000 கோடி

    மதுரை மெட்ரோ

    ரூ. 8,500 கோடி

    பள்ளி மாணவர் இலவச பஸ் பயண திட்டம்

    ரூ. 1,500 கோடி

    மகளிர் இலவச பஸ் பயணம்

    ரூ. 2,800 கோடி

    சிறு-குறு நடுத்தர தொழில்கள்

    ரூ. 1,509 கோடி

    வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி

    ரூ. 13,963 கோடி

    தொழில் துறை

    ரூ. 3,268 கோடி

    அயோத்திதாசர் குடியிருப்பு திட்டம்

    ரூ. 1000 கோடி

    மின் திட்டங்கள்

    ரூ. 77,000 கோடி

    சமூக நலத்துறை

    ரூ. 5,346 கோடி

    சென்னை வெள்ளத்தடுப்பு

    ரூ. 320 கோடி

    குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை

    ரூ. 7,000 கோடி


    • பட்ஜெட் கூட்டத்தொடரில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 21-ந்தேதி மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்.
    • பட்ஜெட் மீதான விவாதம் 23, 24, 27, 28-ம் தேதிகளில் நடைபெறும்.

    சென்னை:

    2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    சட்டசபை நிகழ்ச்சிக்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இறுதியில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

    பட்ஜெட் கூட்டத்தொடரில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 21-ந்தேதி மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். பட்ஜெட் மீதான விவாதம் 23,24,27,28-ம் தேதிகளில் நடைபெறும்.

    காலை, மாலை என இருவேளைகளிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்.

    • திமுக ஆட்சியில் சொத்து வரி, பால் கட்டணம் உள்ளிட்ட எல்லா வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
    • பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க எந்த திட்டமும் வகுக்கவில்லை.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

    அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசினார்.

    உடனே சபாநாயகர் அப்பாவு பட்ஜெட்டை தாக்கல் செய்து முடிந்த பிறகு பேசுங்கள். உங்களுக்கு உரிய நேரம் ஒதுக்கப்படும் என்று கூறினார்.

    எடப்பாடி பழனிசாமியை பேச விடாததை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கோஷமிட்டனர்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில் சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திமுக ஆட்சியில் சொத்து வரி, பால் கட்டணம் உள்ளிட்ட எல்லா வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி., கலால் வரி, பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல் வரி வருவாய் உயர்ந்த நிலையில், வருவாய் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும், ஆனால் ஏன் இல்லை.

    திமுக ஆட்சியில் வரி வருவாய் அதிகரித்த போதும் வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடி உள்ளது.

    அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் என்று சொல்லிவிட்டு இப்போது தகுதியான குடும்ப தலைவிக்கு என்கிறார்கள். ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை.

    ரூ.7000 கோடி ஒதுக்கிவிட்டு 1 கோடி பேருக்கு ரூ.1000 கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

    பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க எந்த திட்டமும் வகுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் ஆண்டில் ரூ.20 கோடி செலவில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய 4 இடங்களில் இந்த மையங்கள் உருவாக்கப்படும்.
    • ரேஷன் கடைகளில் உணவு பொருட்களுக்காக மானியம் வழங்க ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை :

    2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-

    ஒளிர்மிகு உயிரோட்டமுள்ள பொது இடங்களை நகரங்களில் உருவாக்க அரசு பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றது.

    சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை ரூ. 50 கோடி செலவில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும்.

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள மறுகுடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் விளையாட்டு பொழுது போக்கு மையங்கள் உருவாக்கப்படும். இந்த மையங்களில் விளையாட்டு வசதிகள், நவீன உடற்பயிற்சி கூடம், தொழிற்பயிற்சி வழங்க பல்நோக்கு சமுதாயக் கூடம், நூலகம் போன்ற வசதிகள் அமைக்கப்படும்.

    வரும் ஆண்டில் ரூ.20 கோடி செலவில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய 4 இடங்களில் இந்த மையங்கள் உருவாக்கப்படும்.

    மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தால் கடந்த ஆண்டில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட கூடுத லாக 20,477 மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

    ரேஷன் கடைகளில் உணவு பொருட்களுக்காக மானியம் வழங்க ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    • நடப்பு நிதியாண்டில் தமிழக போக்குவரத்து துறைக்கு ரூ.8056 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்துக்கு ரூ.2800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை :

    2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-

    சென்னையில் பேருந்து பணிமனைகளை தரம் உயர்த்த ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி பணிமனைகள் மேம்படுத்தப்படும். 100 புதிய பேருந்துகள் வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நடப்பு நிதியாண்டில் தமிழக போக்குவரத்து துறைக்கு ரூ.8056 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்துக்கு ரூ.2800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    மாணவர்கள் இலவச பேருந்து பயண மானியத்துக்கு ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டீசல் மானியத்துக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • சட்டசபையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு வரிசையிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர்ந்து இருப்பார்கள்.
    • அமைச்சர் பொன்முடி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வரும் வழியாக சட்டசபைக்குள் நுழைந்தார்.

    சென்னை:

    சட்டசபையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு வரிசையிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர்ந்து இருப்பார்கள். அவர்கள் தனித்தனி வழியாக சட்டசபைக்குள் வருவார்கள். இன்று காலை அமைச்சர் பொன்முடி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வரும் வழியாக சட்டசபைக்குள் நுழைந்தார்.

    அவர் பழைய நினைப்பில் எதிர்க்கட்சியினர் வரிசையில் அமர முயன்றார். திடீரென சுதாரித்துக்கொண்ட அமைச்சர் பொன்முடி அங்கிருந்து நேராக ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரிசை பகுதிக்கு சென்று தனது இருக்கையில் அமர்ந்தார்.

    இதை பார்த்ததும் உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
    • மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-

    கோவையில் ரூ.172 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழிப்பூங்கா 2 கட்டங்களாக அமைக்கப்படும். முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.

    ஒகேனக்கல் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.7,149 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழகத்தில் 10,000 குளங்கள், ஊரணிகளை புதுப்பிக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு.

    முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழ்நாடு நெய்தல் திட்டம் அமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.

    கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

    வளம்மிகு வட்டாரங்கள் திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும். ரூ.1000 செலவில் வடசென்னை வளர்ச்சி திட்டம்.

    சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் கட்டப்படும். போக்குவரத்து துறைக்கு ரூ.8,059 கோடி நிதி ஒதுக்கீடு.

    சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.320 கோடி நிதி ஒதுக்கீடு. நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.19,465 கோடி நிதி ஒதுக்கீடு. 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

    கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

    சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ரூ.20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

    2030ஆம் ஆண்டுக்குள் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழகத்தில் 2 லட்சம் முதலீடுகள் பெறப்பட்டு 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

    சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.

    பசுமை வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம். இந்தியாவில் உற்பத்தியான மின்சார வாகனங்களில் 46 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை.

    தகுதி வாய்ந்த குடும்பங்களில் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதி ஆண்டு முதல் 1000 ரூபாய் வழங்கப்படும்.

    மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும். இதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீன்பிடி தடைக்கால நிவாரண பணிகளுக்கு ரூ.389 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
    • பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    தீவுத்திடலில் வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும். வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ரூ.1600 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

    அதிக சுற்றுலா பயணிகள் வருவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அரசு உருவாக்கியுள்ள சுற்றுலா கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

    ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

    மீன்பிடி தடைக்கால நிவாரண பணிகளுக்கு ரூ.389 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும். பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்.

    முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 17.7 லட்சம் மனுக்களில் 17.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்.

    அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து அனைத்து ஊராட்சி, நகர்ப்புற பகுதிகளில், நலத்திட்ட உதவிகளை பெற முகாம்கள் அமைக்கப்படும்.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வதந்தி வீடியோ பரப்பிய சமூக விரோதிகள் 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ரூ.4,236 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    ×