search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம்
    X

    சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம்

    • வரும் ஆண்டில் ரூ.20 கோடி செலவில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய 4 இடங்களில் இந்த மையங்கள் உருவாக்கப்படும்.
    • ரேஷன் கடைகளில் உணவு பொருட்களுக்காக மானியம் வழங்க ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை :

    2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-

    ஒளிர்மிகு உயிரோட்டமுள்ள பொது இடங்களை நகரங்களில் உருவாக்க அரசு பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றது.

    சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை ரூ. 50 கோடி செலவில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும்.

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள மறுகுடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் விளையாட்டு பொழுது போக்கு மையங்கள் உருவாக்கப்படும். இந்த மையங்களில் விளையாட்டு வசதிகள், நவீன உடற்பயிற்சி கூடம், தொழிற்பயிற்சி வழங்க பல்நோக்கு சமுதாயக் கூடம், நூலகம் போன்ற வசதிகள் அமைக்கப்படும்.

    வரும் ஆண்டில் ரூ.20 கோடி செலவில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய 4 இடங்களில் இந்த மையங்கள் உருவாக்கப்படும்.

    மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தால் கடந்த ஆண்டில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட கூடுத லாக 20,477 மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

    ரேஷன் கடைகளில் உணவு பொருட்களுக்காக மானியம் வழங்க ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×