search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur Accident"

    • காக்களூரில் உள்ள மதுபான கடை அருகே திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஆவடி நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் பலத்த காயம் அடைந்த குணசுந்தரியும், முருகனும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். உடனே விபத்து ஏற்படுத்திய டிரைவர் காரை அங்கேயே நிறுத்தி விட்டுதப்பி ஓடி விட்டார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது50). இவர் தனது தம்பி முருகனுடன் (45) திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்தார்.

    கோவில் விழாவை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    காக்களூரில் உள்ள மதுபான கடை அருகே திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஆவடி நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த குணசுந்தரியும், முருகனும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். உடனே விபத்து ஏற்படுத்திய டிரைவர் காரை அங்கேயே நிறுத்தி விட்டுதப்பி ஓடி விட்டார்.

    அவ்வழியே சென்றவர்கள் படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணசுந்தரியும், முருகனும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகிறார்கள்.

    விபத்தில் அக்காள்-தம்பி ஒரே நேரத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவள்ளூர்- பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று வந்தது. இதனால் பதறிப்போன ராஜசேகர் திடீரென பிரேக் பிடித்தார்.
    • இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், குப்புசாமி நகர் சிவராஜ் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 30). இவர் திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தாரர்.

    நேற்று இரவு ராஜசேகர் வேலை முடிந்ததும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    திருவள்ளூர்- பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று வந்தது. இதனால் பதறிப்போன ராஜசேகர் திடீரென பிரேக் பிடித்தார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜசேகர் திருவள்ளூர்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொன்னேரி அடுத்த மேட்டு காலனியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் வந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் லாரியில் சிக்கிய யுவராஜ் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த மவுத்தம்பேடு முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ்(வயது50). இவர் ஆரணி மின்சார வாரியத்தில் ஊழியராக பணி செய்து வந்தார்.

    நேற்று மாலை அவர் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    பொன்னேரி அடுத்த மேட்டு காலனியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் வந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் லாரியில் சிக்கிய யுவராஜ் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது யுவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பு சுவரில் பலமாக மோதியுள்ளது.
    • இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 3மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியிலிருந்து சிமெண்ட் கலவையை டேங்கர் லாரி மூலம் எடுத்துக்கொண்டு ஓட்டுநர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த பாபு என்பவர் வந்துள்ளார்.

    சென்னையில் சிமெண்ட் கலவையை இறக்கிவிட்டு மீண்டும் திருவள்ளூர் வழியாக டேங்கர் லாரியை ஓட்டி வந்துள்ளார். சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பு சுவரில் பலமாக மோதியுள்ளது.

    இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 3மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று அமாவாசை தினம் என்பதால் வீரராகவர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகளவில் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    இந்தப் போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

    • திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
    • விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் உமா சங்கர் (வயது 21). இவர் திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2020-ம் ஆண்டு சேர்ந்து இருந்தார்.

    பின்னர் கொரோனா தொற்று அதிகரித்ததால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் ஊருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் உமாசங்கர் தனது நண்பரான நசரத் பேட்டையை சேர்ந்த விஜய் (வயது 20) என்பவருடன் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து டி.சி.யை திருப்பி கேட்டு எழுதி கொடுத்தார்.

    பின்னர் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி திரும்ப சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது திருத்தணி நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    படுகாயமடைந்த விஜய் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊத்துக்கோட்டை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
    • படுகாயமடைந்த ராஜசேகர், நான்சி, சரவணன், சிவகுமார் ஆகியோரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் உயிரிழந்தார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சரவணன் (வயது 16). அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். மகன் சிவகுமார் (வயது 14). இதில் சரவணன் கூனிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், சிவகுமார் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    நேற்று இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சீதஞ்சேரி புறப்பட்டனர். அம்மம்பாக்கம் மதுக்கடை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே சென்னை பெரம்பூர் மங்கலாபுரம் 3-வது தெருவை சேர்ந்த கொத்தனார் ராஜசேகர் (வயது 54). தனது மகள் நான்சி (23)யுடன் வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த ராஜசேகர், நான்சி, சரவணன், சிவகுமார் ஆகியோரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் உயிரிழந்தார். மற்ற 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பென்னலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சோழவரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் திருநங்கை பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த பாடியநல்லூர் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற சுகந்தி (29). திருநங்கையான இவர் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் பகுதியில் இருந்து பன்னீர்வாக்கம் செல்லும் சாலையில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புல்லரம் பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி வயது 55). டீ மாஸ்டர். நேற்று இரவு அவர் வேலை முடிந்து திருப்பாச்சூரில் இருந்து புல்லரம் பாக்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    டோல்கேட் அருகே வந்த போது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராகிக் குமாரி மற்றும் போலீசார் விரைந்து வந்து லட்சுமிபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்ததும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். காரை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்றபோது மாநகர பஸ் மோதிய விபத்தில் வாலிபர் இறந்ததால் பொதுமக்கள் ஆத்திரத்தில் பஸ்சுக்கு தீவைத்தனர்.
    செவ்வாப்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை அடுத்த உடையார் கோவில் காலனியைச் சேர்ந்தவர் பாரத். இவர் நேற்று இரவு வெள்ளவேடு இருங்காளி அம்மன் கோவில் அருகே சாலையை கடந்தபோது வெள்ளவேட்டில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் மோதியதில் அவர் இறந்தார்.

    இதுபற்றி அறிந்ததும். பாரத்தின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் அங்கு திரண்டு வந்தனர். உடனே பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து ஓடிவிட்டனர். ஆத்திரத்தில் இருந்த பொது மக்கள் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.

    அப்போது டிரைவர் இருக்கைக்கு சிலர் தீவைத்தனர். இதில் இருக்கை தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். இல்லையென்றால் தீ பஸ் முழுவதும் பரவி இருக்கும்.

    பின்னர் பாரத் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நெல்வாய் சோத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணி கண்டன், திருநின்றவூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்றுபணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற போது தொழுவூர் பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ×