என் மலர்
நீங்கள் தேடியது "threatened to kill"
- பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவரை கொலை மிரட்டல் விடுத்த லாரி உரிமையாளருக்கு வலைவீச்சு.
- புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தங்கவேலை தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட பரமத்தியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லட்சுமி. இவர் கடந்த மே மாதம் 6-ந் தேதி கபிலர் மலை அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அந்த வழியாக அனுமதியின்றி கிராவல்மண் ஏற்றிவந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்த தங்கவேல் (வயது48) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தங்கவேல் கபிலர்மலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் லட்சுமியின் வீட்டிற்கு சென்று எனது லாரியை எப்படி பறிமுதல் செய்யலாம் என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து வருவாய் ஆய்வாளர் லட்சுமி ஜேடர்பாளையம் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தங்கவேலை தேடி வருகின்றனர்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் பாண்டி ரோட்டை சேர்ந்தவர் கோபால் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவருக்கும் மயிலம் செந்தூர்சாலையை சேர்ந்த நவநீதம் மகள் தனலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண்குழந்தை உள்ளன.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன்பின்பு கோபாலுக்கு பாதிரா புலியூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்பு அந்த பெண்ணுடன் அவர் கோவைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
இதை அறிந்த தனலட்சுமி மயிலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவை சென்று கோபாலையும் அந்த பெண்ணையும் மீட்டு அழைத்து வந்தனர். அதன்பின்பு போலீசார் கோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.
சிறிது நாட்கள் கழித்து மீண்டும் கோபாலுக்கும், தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த தனலட்சுமி 2 குழந்தைகளுடன் தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றதால் கோபால் ஆத்திரம் அடைந்தார். அவர் அடிக்கடி மாமியார்வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு தகராறு செய்து வந்தார்.
நேற்று மாலையும் கோபால் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்புமாறு நவநீதிடம் கூறினார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கோபால் மாமியார் நவநீதத்தை தாக்கினார். இதை தட்டிக்கேட்ட தனலட்சுமியையும் கோபால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். பின்பு கோபாலும் அவரது உறவினர் மணிகண்டன் (26) என்பவரும் சேர்ந்து போனில் தனலட்சுமியையும், நவநீதத்தையும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து மயிலம் போலீசில் தனலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கோபாலை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட மணிகண்டனை தேடி வருகின்றனர்.