என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rishivandiyam"

    • ரிஷிவந்தியம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • பக்கத்து வீட்டைசேர்ந்த கோவிந்தன் என்பவருடைய குழந்தைகள்அடுப்பு அருகே விளையாடியதாக கூறப்படுகிறது. பக்கத்து வீட்டைசேர்ந்த கோவிந்தன் என்பவருடைய குழந்தைகள்அடுப்பு அருகே விளையாடியதாக கூறப்படுகிறது.

    கள்ளகுறிச்சி:

    கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அலமேலு (வயது 40). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டைசேர்ந்த கோவிந்தன் என்பவருடைய குழந்தைகள்அடுப்பு அருகே விளையாடியதாக கூறப்படுகிறது. இதைபார்த்த அலமேலு அந்த குழந்தைகளை தள்ளி சென்று விளையாடுமாறு கூறியுள்ளார்.

    இதைகேட்டு ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும்அவருடைய மனைவி உமா ஆகியோர் அலமேலுவை திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதை தடுக்க முயன்ற அலமேலு உறவினர் முனியம்மாளையும் கோவிந்தன், உமா ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோவிந்தன், உமா ஆகியோர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×