என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற துணை தலைவருக்கு கொலை மிரட்டல்
- வழிமறித்து தாக்குதல்
- 3 பேர் கைது
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் சந்தை மேடு கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் என்பவர் மகன் மகேஷ் (வயது31). இவர் நரசமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக உள்ளார்.
இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் சந்தைமேடு அருகே சென்றார். அப்போது சென்னை ஓட்டேரி சேர்ந்த ரவி என்பவர் மகன் கோபாலகிருஷ்ணன் (26), மாமண்டூர் சந்தைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மகன் சதீஷ் (20), வரதன் மகன் வினோத்குமார் (28) ஆகிய 3 பேரும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஷை வழிமடக்கி கையால் அடித்தும் அசிங்கமாக திட்டியும் கையில் வைத்திருந்த கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து கோபாலகிருஷ்ணன் வினோத் குமார் வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்






