search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvaiyaru"

    தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    அதை தொடர்ந்து 14-ந் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நிகழ்ச்சியும், 18-ந் தேதி தேரோட்டமும், 21-ந் தேதி சப்தஸ்தான பெருவிழாவும் நடைபெறுகிறது. சப்தஸ்தான விழாவையொட்டி காலை ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர்் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.

    22-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின்னர் பல்லக்குகள் அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றடையும். இந்த விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    திருவையாறு அருகே விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு:

    அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் மகன் மணிக்குமாருக்கும் ராமநல்லூரை சேர்ந்த அறிவழகன் மகள் சந்தியாவுக்கும் திருமணம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு ஒரு வேனில் அப்பகுதி மக்கள் சுவாமிமலை சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திருப்பழனம் காமராஜர் நகர் அருகே மெயின்ரோட்டில் வரும்போது முன்னால் கரும்பு லாரி மற்றும் அதற்கு பின்னால் சிமெண்ட் லாரி சென்றுள்ளது. அதற்கு பின் வேன் வந்துகொண்டிருந்தது அப்போது திடீரென முன்னாள் சென்ற கரும்பு லாரி மீது சிமெண்ட் லாரி மோதி நின்றது. இதனால் நிலைதடுமாறிய வேன் சிமெண்ட் லாரி மீது மோதியது இதில் வேனில் பயணம் செய்த சின்னப்பிள்ளை, அம்சம்மாள், கோவிந்தம்மாள், சம்பத், ரேவதி, கங்காமிர்தம், மலர்கொடி, மோகன், சந்துரு, , கோகுல், பிரபாகரன், சக்ரவர்த்தி உள்பட 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    இதனால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறில் விநாயகர் கோவிலில் உற்சவர் சிலை மற்றும் கலசம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு ஸ்ரீராம் நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது.

    இதனால் கோவிலில் கோபுர கலசங்களை எடுத்து தனியாக கோவிலுக்குள் வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோவில் குருக்கள் , பூஜை செய்ய வந்தார். அப்போது கோவிலில் இருந்த 2½ அடி உயர வெண்கல உற்சவர் சிலை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோவிலில் இருந்த கலசமும் கொள்ளை போய் இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் உடைக்க முயற்சி நடந்திருப்பது தெரிய வந்தது. நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்து உற்சவர் சிலை மற்றும் கலசத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் பற்றி திருவையாறு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    உற்சவர் சிலை மற்றும கலசம் ஆகியவை கொள்ளை போய் இருப்பதால் சிலைகள் கடத்தல் கும்பலின் கைவரிசையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவையாறில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் உள்ள சூரிய புஷ்கரணி குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது.
    திருவையாறில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சூரிய புஷ்கரணி குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது.

    தெப்பத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியுடன் அமர்ந்து 5 சுற்றுகள் வலம் வந்த பிறகு குளத்தின் நடுமண்டபத்தில் சாமியை இறக்கி வைத்து ஊஞ்சலில் வைத்து ஆராட்டி தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தெப்ப திருவிழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    திருவையாறு அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நாளை (11-ந் தேதி) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
    தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நாளை (11-ந் தேதி) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த கோவிலில் 13 நாட்கள் நடைபெறும் சித்திரை உற்சவம் சப்தஸ்தான விழாவின்போது 9ஆம் நாள் விழவாக தேர்த்திருவிழா நடைபெறும். இதில் ஐயாறப்பர் எழுந்தருளும் பெரியதேர் மிகவும் பழமையானதாகவும் வெயில், மழை போன்ற இயற்கை பாதிப்புகளால் பழுதடைந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தற்காலிக கட்டுத்தேர் கட்டப்பட்டு அத்தேரில் ஐயாரப்பரை எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு பழுதடைந்த பெரிய தேருக்கு பதிலாக புதிய தேர் கட்ட தேவஸ்தானத்தால் தீர்மானிக்கப்பட்டு 17¾ அடி உயரம் 12.9 அடி அகலத்தில் பழமை மாறாமல் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பெரிய தேர் கட்டும் பணி தொடங்கப்பட்டு நிறைவுற்றுள்ளது.

    இந்த புதிய தேருக்கான வெள்ளோட்டம் நாளை காலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்குமேல் பூர்ணாகுதி மற்றும் தீபாராதணை நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு மேல் புனித நீர் நிறைந்த கடம் புறப்பாடும் அபிஷேக ஆராதணைகளும் நடைபெற்று திருதேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளும் கலந்துகொண்டு அருளாசி வழங்குகிறார்கள்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தருமையாதீன உத்திரவுப்படி ஐயாறப்பர் தேவஸ்தான நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    திருவையாறில் லாரி வீட்டின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவையாறு:

    அரியலூரில் இருந்து ஒரு லாரி சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி நேற்று இரவு வந்தது. அந்த லாரி நள்ளிரவு 1.30 மணி அளவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அய்யனார் கோவில் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது லாரி திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் சுவரில் சேதம் ஏற்பட்டது. விபத்து நடந்தபோது அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி சுவரில் மோதியபோதிலும் காயமின்றி உயிர் தப்பிய டிரைவர் அங்கு லாரியை விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்தும் திருவையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திருவையாறில் லாரி வீட்டின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கல்லூரி விடுதியில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருவையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவையாறு:

    திருவையாறில் சத்திரம் நிர்வாகத்தின் கீழ் அரசர் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் மாணவிகளுக்கு மட்டும் விடுதி உள்ளது. இந்தவிடுதியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது கல்லூரி தேர்வு நடைபெற்று வருவதால் 48 மாணவிகள் மட்டுமே தங்கியுள்ளனர்.

    இதில் அரியலூர் மாவட்டம் காவனூரை சேர்ந்த கண்ணன் மகள் நித்யா(21). தங்கி எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றுவிட்டு கடந்த 7-ம் தேதி விடுதிக்கு வந்துள்ளார். பின்னர் கல்லூரி சென்று தேர்வு எழுதிவிட்டு விடுதிக்கு வந்தவர் மின்விசிறியில் தூக்கு போட்டுக்கொண்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மாணவி பார்த்துவிட்டு சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் வந்து நித்யாவை காப்பாற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நித்யாவிற்கு முதல் உதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நித்யா இறந்து விட்டார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×