search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry collapsed"

    குண்டல்பட்டியில் இன்று உப்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
    தருமபுரி

    சேலத்தில் இருந்து உப்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அந்த லாரி இன்று காலை தருமபுரி அடுத்துள்ள குண்டல்பட்டி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்தது.  

    இதில் லாரியில் இருந்த உப்பு மூட்டைகள் சாலையில் சிதறியது. இதில் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதிக்கோண்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம் பட்டர் பிளை மேம்பாலத்தில் இன்று காலை துணி பண்டல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயமின்றி தப்பினார்.

    சேலம்:

    சேலம் அரியானூர் பகுதியில் இருந்து துணி பண்டல் ஏற்றிய லாரி வட மாநிலத்திற்கு புறப்பட்டது. இந்த லாரி இன்று காலை 6 மணி அளவில் சேலம் பட்டர்பிளை மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறிய லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பாலத்திலேயே லாரி கவிழ்ந்தது. அதில் இருந்த துணி பண்டல்கள் சாலையில் சிதறி கிடந்தன. லாரி கிளீனர் காயம் அடைந்து அலறினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அன்ன தானப்பட்டி போலீசார் சாலையில் சிதறி கிடந்த துணி பண்டல்களை அப்புறப் படுத்தி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். பின்னர் கிரேன் மூலம் லாரியை மீட்டனர்.

    இந்த விபத்தில் லாரி கிளீனர் லேசான காயம் அடைந்தார். டிரைவர் காயமின்றி தப்பினார்.

    விபத்து குறித்து அன்ன தானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரிமங்கலம் அருகே இன்று காலை கெரகோடஅள்ளி என்ற இடத்தில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காரிமங்கலம்:

    பெங்களூரில் இருந்து சேலத்திற்கு பொருட்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இன்று காலை தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஅள்ளி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது அந்த லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. 

    இதில் லாரியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சாலையில் சிதறி கிடந்தது.  பள்ளத்தில் விழுந்த லாரியை மீட்பு வாகனம் மூலம் மீட்டு சாலைக்கு கொண்டு வந்தனர்.

    இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தொப்பூர் கணவாய் பகுதி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் அர்ஜுனன் (வயது 36), பச்சமுத்து (38). டிரைவர்களான இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கரூருக்கு நெல்லை அரிசியாக மாற்றும் இயந்திரத்தை ஒரு லாரியில் ஏற்றி புறப்பட்டு வந்தனர். 

    அந்த லாரி நேற்று பகல் 1.30 மணியளவில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே வந்தது. அப்போது அங்கு தொடர் விபத்துக்கள் நடைபெறும் இடமான ஆஞ்சநேயர் கோவில் அருகே  வளைவு பகுதியில் வண்டி திரும்பும் போது வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. 

    இந்த விபத்தில் அர்ஜுனனுக்கு காயம் ஏற்பட்டது. பச்சமுத்து காயம் இன்றி உயிர் தப்பினர். காயமடைந்த அர்ஜுனனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொப்பூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி:

    விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள ஒத்தல்நத்தம் பகுதியை சேர்ந்த சிவா (வயது28), லாரி டிரைவரான இவர் சோலாப்பூரில் இருந்து மதுரைக்கு சர்க்கரை லோடு ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார். 

    இன்று அதிகாலை தருமபுரி மாவட்டம், தொப்பூர் மலைப்பாதை வளைவு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே டிரைவரின் கட்டுபாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான லாரி டிரைவர் சிவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கவிழ்ந்து கிடந்த லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்தை சரி செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்காட்டுப்பள்ளி அருகே லாரி கவிழ்ந்து வீட்டு முன்பு படுத்து தூங்கிய முதியவர் பலியான சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பவளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். விவசாயி.

    இந்நிலையில் இளங்கோவன் வீட்டுக்கு அவரது மாமனார் நடராஜன் (வயது 70) வந்திருந்தார். நேற்று இரவு வீட்டு முன்பு கட்டிலில் நடராஜன் தூங்கினார்.

    இன்று அதிகாலை வீட்டு முன்புள்ள சாலை வழியாக ஜல்லிகற்களை ஏற்றிய ஒரு லாரி சென்றது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி, இளங்கோவன் வீட்டு முன்பு கவிழ்ந்தது. இதில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த நடராஜன் மீது ஜல்லிக்கற்கள் கொட்டியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இந்த விபத்து குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தனார்.

    ஜல்லி லாரி கவிழ்ந்து வீட்டு முன்பு படுத்து தூங்கிய முதியவர் பலியான சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சக்கரம் மாற்றியபோது லாரி சாய்ந்து வேலூர் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தண்டராம்பட்டு:

    வேலூர் சாயிநாதபுரத்தை சேர்ந்தவர் புகழேந்தி மகன் தமிழேந்தி (வயது 35). லாரி டிரைவர். நேற்று மதியம் 1 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி மினி லாரியில் சென்று கொண்டிருந்தார்.

    கொளக்குடி அருகே சென்ற போது மினி லாரியின் பின்பக்க சக்கரம் வெடித்தது. இதனையடுத்து சக்கரத்தை மாற்றும் பணியில் தமிழேந்தி ஈடுபட்டார்.

    அப்போது வாகனத்தின் பின் பகுதியில் ஜாக்கி வைத்து வாகனத்தை மேலே தூக்கிய போது மினி லாரி தமிழேந்தி மீது சாய்ந்தது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வெறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழேந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில்வே மேம்பால சுவரில் லாரி மோதி கவிழ்ந்ததில் டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சென்னிமலை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகருக்கு நூல் கோன்கள் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது.

    லாரியை பொள்ளாச்சியை சேர்ந்த குமார் (வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றார். மாற்று டிரைவர் அய்யன்துரை (37) என்பவரும் லாரியில் இருந்தார்.

    இந்த லாரி சென்னிமலை அடுத்த ஈங்கூர் அருகே நள்ளிரவு நேரத்தில் வந்து கொண்டிருந்தது. அங்கு குறுகிய ரெயில்வே மேம்பாலம் இருப்பது தெரியாமல் இயக்கப்பட்டதால் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    மற்றொரு டிரைவரான அய்யன்துரைக்கும் லேசான காயம் ஏற்பட்டது. மேம்பால சுவரில் மோதியதால் லாரியின் முன் சக்கரங்கள் தனியே துண்டிக்கப்பட்டன.

    அதனால் வேறு லாரியில் நூல் கோன்கள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறில் லாரி வீட்டின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவையாறு:

    அரியலூரில் இருந்து ஒரு லாரி சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி நேற்று இரவு வந்தது. அந்த லாரி நள்ளிரவு 1.30 மணி அளவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அய்யனார் கோவில் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது லாரி திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் சுவரில் சேதம் ஏற்பட்டது. விபத்து நடந்தபோது அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி சுவரில் மோதியபோதிலும் காயமின்றி உயிர் தப்பிய டிரைவர் அங்கு லாரியை விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்தும் திருவையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திருவையாறில் லாரி வீட்டின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×