என் மலர்
செய்திகள்

திருக்காட்டுப்பள்ளி அருகே ஜல்லி பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து முதியவர் பலி
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பவளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். விவசாயி.
இந்நிலையில் இளங்கோவன் வீட்டுக்கு அவரது மாமனார் நடராஜன் (வயது 70) வந்திருந்தார். நேற்று இரவு வீட்டு முன்பு கட்டிலில் நடராஜன் தூங்கினார்.
இன்று அதிகாலை வீட்டு முன்புள்ள சாலை வழியாக ஜல்லிகற்களை ஏற்றிய ஒரு லாரி சென்றது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி, இளங்கோவன் வீட்டு முன்பு கவிழ்ந்தது. இதில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த நடராஜன் மீது ஜல்லிக்கற்கள் கொட்டியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தனார்.
ஜல்லி லாரி கவிழ்ந்து வீட்டு முன்பு படுத்து தூங்கிய முதியவர் பலியான சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






