என் மலர்
செய்திகள்

காரிமங்கலம் அருகே லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது- போக்குவரத்து பாதிப்பு
காரிமங்கலம் அருகே இன்று காலை கெரகோடஅள்ளி என்ற இடத்தில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரிமங்கலம்:
பெங்களூரில் இருந்து சேலத்திற்கு பொருட்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இன்று காலை தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஅள்ளி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது அந்த லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சாலையில் சிதறி கிடந்தது. பள்ளத்தில் விழுந்த லாரியை மீட்பு வாகனம் மூலம் மீட்டு சாலைக்கு கொண்டு வந்தனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






