search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thenthiruperai"

    • 9-ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு தங்கத்தேரில் நம்மாழ்வார் எழுந்தருளினார்.
    • நாளை (2-ந்தேதி) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி தலங்களில் 9- வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் சுவாமி நம்மாழ்வார் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது. 5-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்க பல்லக்கிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தனர். அன்றைய தினம் நவதிருப்பதி பெருமாள் மங்களாசாசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தேரோட்டம்

    9-ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு தங்கத்தேரில் நம்மாழ்வார் எழுத்தருளினார். 8.30 மணியளவில் பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கர கோஷத்துடன் நான்கு ரத வீதிகளில் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். காலை 11 மணி அளவில் தேர் நிலை வந்தடைந்தது. நாளை (2-ந்தேதி) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் வானமாமலை ராமானுஜ ஜீயர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறை அலுவலர்கள் இசக்கி, ராஜ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • நம்மாழ்வார் அவதார திருவிழாவை முன்னிட்டு 6 நாட்கள் கோவில் முன் சடகோபன் அரங்கில் இசை, பரதநாட்டியம், உள்ளிட்ட ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.
    • பிறவி பெருங்கடலை நீந்தி கரை சேர்ப்பது திருவாய்மொழி .

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதிகளில் 9-வது திருப்பதி ஆழ்வார்திரு நகரியாகும். நம்மாழ்வார் அவதார திருவிழாவை முன்னிட்டு 6 நாட்கள் கோவில் முன் சடகோபன் அரங்கில் இசை, பரதநாட்டியம், உபந்யாசம் உள்ளிட்ட ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    அதில் ஒரு பகுதியாக திருக்குடந்தை மருத்துவர் உ.வே.க. வெங்கடேஷ் சுவாமி, நம்மாழ்வாரின் திருவாய்மொழி பெருமை மற்றும் சாரம் பற்றி 2 நாட்கள் உபந்யாசம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-

    ஒப்பற்ற ஊரானது ஆழ்வார்திருநகரி. ஒப்பற்ற சுவாமி சடகோபர். ஒப்பற்ற வைகாசி விசாகம். ஒப்பற்ற திருவாய்மொழி என மணவாள மாமுனிகள் சொல்லிபடி திருவாய்மொழி ஏற்றம் மிகுந்தது. திருவாய்மொழி வேதம். அதை தெரிவிப்பது நம்மாழ்வார். திருவாய்மொழி தெளிவும் நிம்மதியையும் தரக்கூடியது. ஆயிரம் வரும் ஆனால் நிம்மதி வருவதில்லை என பாடல் உண்டு. அந்த நிம்மதி தருவது திருவாய்மொழி. பிறவி பெருங்கடலை நீந்தி கரை சேர்ப்பது திருவாய்மொழி.

    இறைவனை உள்ளபடி காண்பிப்பது திருவாய்மொழி. இவ்வாறு 5 குறுந்தலைப்புகளில் சுருக்கமாக தெரிவிக்கிறேன். ஸ்ரீமந்நாராயணன் மந்திர மலையை மத்தாக்கி வாசுகி நாகத்தை கயிராக்கி கொண்டு திருப்பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்து கொடுத்தார். அதேபோல நம்மாழ்வார் தனது நாக்கை மத்தாக்கி வேதம் என்னும் கடலை கடைந்து திருவாய்மொழி என்னும் அமுதம் கொடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் உ.வே. வெங்கடேசுக்கு கோவில் நிர்வாக அதிகாரி அஜித், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஆதிநாதன், டாக்டர் கோகுல் சேதுராமன் ரகுராமன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். நிகழச்சிக்கான ஏற்பாடுகளை பூர்வசிகை வைஷ்ணவ சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • நேற்று காலை நவதிருப்பதி பெருமாள் கோவில் கருட வாகனங்கள் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு வந்து சேர்ந்தன.
    • விழாவின் சிகர நாளான 1-ந் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவி லில் நம்மாழ்வார் மங்களா சாசனம் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

    பிரம்மோற்சவ விழா

    ஆழ்வார் கோவிலின் பூப்பந்தல் மண்டபத்தில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளி னார். சுவாமி நம்மாழ்வார் இங்குள்ள புளிய மரத்தின் பொந்தில் சிறு குழந்தையாக தவழ்ந்து வந்து அமர்ந்து 16 ஆண்டுகள் கழித்து வாய்திறந்து திருவாய்மொழி பாடினார்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் திரு அவதாரம் செய்த வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 15 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மங்களாசாசனம் கருடசேவை

    அதைத்தொடர்ந்து நேற்று காலை நவதிருப்பதி பெருமாள் கோவில் கருட வாகனங்கள் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு வந்து சேர்ந்தன. ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர் கடிவான், திருப்புளியங்குடி காய்சினவேந்தன், இரட்டை திருப்பதி அரவிந்தர லோசனர், தேவர்பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி, ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மதுரகவி ஆழ்வார் ஆகியோர் பூப்பந்தல் மண்டபத்திற்கு வந்த பின்னர் இரவு 10.30 மணிக்கு மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் 9 பெருமா ள்களும் புஷ்ப அலங்கா ரத்துடன் கருடவாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்கபல்லக்கிலும் ஒன்றன்பின் ஒன்றாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர்.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நாளான 1-ந் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து 8.30 மணி அளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம் நடக்கிறது. 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 10 -ம் நாள் திருவிழாவான தீர்த்தவாரி நிகழ்ச்சி தாமிரபரணி நதியில் காலை நடக்கிறது. நிகழ்ச்சியில் மாஜிஸ்திரேட் மகராஜன், திருகளங்குடி பேரரூளாயர் ஜீயர், முன்னாள் அறங்கா வலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜீத், தக்கார் கோவல மணிகண்டன், அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஶ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் ஆழ்வார் திருநகரி போலீசார் செய்து இருந்தனர்.

    • அறிமுக கூட்டம் தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் நடைபெற்றது.
    • சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஸ்ரீவைகுண்டத்தில் 75 நாட்கள் நடைபெறும்.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு காவல்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் மற்றும் காவலர் போட்டி தேர்வுகளுக்கு படித்த இளைஞர்களை தயார் செய்யும் நோக்கில் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் போட்டித்தேர்வுக்கான பயிற்சி முகாம் 'மாற்றத்தை தேடி' என்ற தலைப்பில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் நடத்தப்படுகிறது.

    அதற்கான அறிமுக கூட்டம் தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நேற்று ஸ்ரீவைகுண்டம் போலீஸ் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் நடைபெற்றது.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் டி.எஸ்.பி. மாயவன் கூறியதாவது, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஸ்ரீவைகுண்டத்தில் 75 நாட்கள் நடைபெறும்.

    இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து உபகரணங்களையும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இளைஞர்கள் தங்களை தயார் செய்து பயிற்சியில் தேர்வாகி, இங்கு கலந்து கொண்ட இளைஞர்கள் அனைவரும் காவல்துறை தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் சேரவேண்டும் என கூறினார்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், ஆழ்வார்திருநகரி சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வன், இசக்கி பாண்டி, பயிற்சியாளர் திலகர், வக்கீல் செல்வராஜ், தென்திருப்பேரை

    பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்த், மகரபூசணம், தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இடையர்காடு கிராமத்தில் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுந்தர விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
    • இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு நிறைகொடை பூஜையும் ,தீபாராதனையும் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    இடையர்காடு கிராமத்தில் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுந்தர விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா மற்றும் கிழக்கத்தியான் சுவாமி கோவில் கொடை விழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது.

    அன்று இரவு திருவிளக்கு விளக்கு பூஜையும், அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று காலை 8 மணிக்கு சுந்தர விநாயகருக்கு மகா கணபதி பூஜை, சங்கல்பம், புண்யாக வாஜானம், கும்ப பூஜை, வேத பாராயணம், கோபுர கலச அபிஷேகம் ,தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.

    சுந்தர விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். இரவு 7 மணிக்கு ஸ்ரீமதி தியாகராஜன் சொற்பொழிவு நிகழ்ச்சியும் ,இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு மூன்று வேளையும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இரவு 10 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமி மற்றும் செங்கிடா சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு கிழக்கத்தியான் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை, தீபாராதனையுடன் சாமகொடையும் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு நிறைகொடை பூஜையும் ,தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • தென்திருப்பேரையில் தி.மு.க. சார்பில் திருச்செந்தூர்- நெல்லை மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
    • தண்ணீர் பந்தலை ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் திறந்து வைத்தார்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரையில் தி.மு.க. சார்பில் திருச்செந்தூர்- நெல்லை மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை பேரூராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் திறந்து வைத்தார்.பின்னர் பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகர செயலாளர் முத்துவீரப்பெருமாள், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஆனந்த், ஆழ்வை மத்திய ஒன்றிய அவைத் தலைவர் மகரபூஷணம், தென்திருப்பேரை பேரூராட்சி துணைத்தலைவர் அமிர்தவள்ளி, மாவட்ட பிரதிநிதி செங்கோட்டையன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை துணை அமைப்பாளர் பாக்கியராஜ், பேரூராட்சி கவுன்சிலர் மாரியம்மாள், ஆழ்வை மத்திய ஒன்றிய துணைச்செயலாளர் கோயில்துரை, சோலை நட்டார், வார்டு செயலாளர்கள் மோகன், ஆர்த்திக்குமார், கண்ணன், சீனிவாசன், ஆதிதிராவிடர் அணி நகர பொறுப்பாளர் மாடசாமி, துரைராஜ், முத்து கிருஷ்ணன், அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார்கோவில் சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மே 1-ந்தேதி (திங்கள் கிழமை) தேர்த் திருவிழா நடை பெறுகிறது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தி லுள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரமோற்சவ திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    சித்திரை மாதம் உத்திரம் தினத்தன்று மூலவர் ஆதிநாதர் விக்ரகம் ப்ருகு மற்றும் மார்கண்டேய மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள் (25-ந்தேதி) எம்பெருமானார் எதிர் சேவை நிகழ்ச்சியும், 27-ந்தேதி (வியாழக்கிழமை) கருடோத்ஸவம் நிகழ்ச்சியும், மே 1-ந்தேதி (திங்கள் கிழமை) தேர்த் திருவிழாவும்,மே2-ந்தேதி (செவ்வாய்கிழமை) தீர்த்தவாரியும் நடை பெறுகிறது.

    தினமும் மாலை சுவாமி பொலிந்து நின்ற பிரான் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், இந்திர விமான வாகனம், குதிரை வாகனம், புன்னை மர வாகனம், வெட்டி வேர் சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜீத், தக்கார் கோவல மணிகண்டன், எம்பெரு மானார் பேரருளாளர், ராமானுஜ ஜீயர், ஆழ்வார் கைங்கர்ய சபா தலைவர் காரிமாறன், கலைக்காப்பக தலைவர் ரெங்கராஜன், முன்னாள் அறங்காவலர் குழுதலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி காலை 7.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 9-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் 7-வது தலமாகவும் , 108 திவ்ய தேசங்களில் 53-வது தலமாகவும் சுக்கிரன் தலமாக அமைய பெற்ற தலம் தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் ஆகும். தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் தென்திருப்பேரை யில் மீன் வடிவ காதணி அணிந்த மகர நெடுங்குழைக்காதர், குழைக்காதர் நாச்சியார், திருப்பேரை நாச்சியார் ஆகியோ ருடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    கொடியேற்றம்

    ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி காலை 7.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ந்தேதி இரவு 9.30 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சியும், அன்ன வாகன நிகழ்ச்சியும், 10-ந்தேதி யானை வாகனத்திலும், 11-ந் தேதி மாலை 5 மணிக்கு இந்திர விமானத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.12-ந்தேதி காலை உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி புறையூர் ஆணையப்பபிள்ளை சத்திரம் வீதி புறப்பாடு நடைபெற்றது.

    தேரோட்டம்

    9-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு மேஷ லக்கனத்தில் உற்சவர் நிகரில் முகில்வண்ணன் தேரில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் வள்ளியூர் குழைக்காதர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகளுக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    தேர் கீழ ரத வீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு ரத வீதி வழியாக மேல ரத வீதி வரை பக்தர்கள் வடம் பிடித்து கோவிந்தா கோவிந்தா என கரகோஷத்துடன் இழுத்து வந்தனர். பின்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

    மாலையில் மீண்டும் தேரோட்டம் மேல ரத வீதியிலிருந்து புறப்பட்டு வடக்கு ரத வீதி வழியாக வந்து இன்று மாலையில் கோவில் நிலையை வந்தடையும். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தாமிரபரணி நதியில் தீர்த்தவாரியும், அதைதொடர்ந்து பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலமும், வெற்றிவேர் சப்பம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் வள்ளியூர் பெரி.குழைக்காதர் குடும்பத்தி னர், தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் பார்த்தீபன், தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், துணை தலைவர் அமிர்தவள்ளி, செயல் அலுவலர் ரமேசு பாபு, தி.மு.க. ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், சீனிவாச சேவைகள் அறக்கட்டளை கசங்காத்த பெருமாள், ரவிக்குமார், கவுன்சிலர்கள் ஆனந்த், கீதா, சண்முக சுந்தரம், மாரியம்மாள், சீதாலட்சுமி, கொடி, லட்சுமி, சுபா காசிலட்சுமி, குமரேசன், ரேவதி, நகர தி.மு.க. செயலாளர் முத்து வீர பெருமாள், நகர தி.மு.க. அவைத்தலைவர் மகரபூசனம், ஸ்ரீநிகரில் முகில் வண்ணன் கைங்கர்ய சபா டிரஸ்ட் தலைவர் சுந்தரராஜன், அ.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுக நயினார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, பெருமாள் என்ற குமார் மற்றும் தென்திருப்பேரை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை ஶ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் ,ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார், தீயணைப்பு துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    தேரோட்ட விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண முர்த்தி, ஆய்வாளர் சிவலோக நாயகி, தக்கார் அஜித் மற்றும் உபயதாரர்கள், அலுவலக ஊழியர்கள், செய்து இருந்தனர்.

    • குரங்கணி சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    தென்திருப்பேரை:

    குரங்கணி 60 பங்கு நாடார்களுக்கு பாத்தியப்பட்ட குரங்கணி தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் காலை 6 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், காலை 7 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், 8 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

    மதியம் 12 மணிக்கு பெண்கள் பொங்கலிடும் நிகழ்ச்சியும், அதை தொ டர்ந்து மதியக்கொடையும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் நடைபெ ற்றது. இரவு 7மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சாமக் கொடை நடைபெற்றது.கொடை விழாவிற்கான ஏற்பாடு களை குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    விழாவில் சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன், முத்து மாலை, ஜெக தீசன், ராஜேந்திரன், சந்திர சேகரன், கல்யாண சுந்தரம், ஜெயசங்கர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த மகாசப்தசாகரன் மற்றும் செல்வராஜ், குரங்கணி ஊராட்சி மன்ற தலைவர் ஜெய முருகன், ராஜாராம், குணசேகரன், ரவி, முத்துக்குமார், பெரியசாமி, ராகவன், கேசவ மூர்த்தி, முத்து லிங்கம், ஈஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் 5-ம் நாளான நேற்று கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வருகிற 13-ந் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டமும், 14-ந் தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    5-ம் நாளான நேற்று கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கருட வாகனத்தில் ஶ்ரீ நிகரில் முகில்வண்ணனும், அன்ன வாகனத்தில் திருப்பேரை நாச்சியாரும் நான்கு ரத வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர். வருகிற 12-ந் தேதி காலை 7 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி,பூதேவி,நாச்சியார்களுடன் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி புறையூர் ஆணையப்பபிள்ளை சத்திரம் வீதி புறப்பாடு நடக்கிறது. 13-ந் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டமும், 14-ந் தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • இசக்கி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 31-ந்தேதி காலையில் கால் நாட்டு வைபவத்துடன் தொடங்கியது.
    • நேற்று மாலை 5 மணி அளவில் பொதுமக்கள் பொங்கலிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை மெயின் ரோட்டில் சண்முகவிலாஸ் ரைஸ் மில் அருகில் அமையப்பெற்ற ஸ்ரீ இசக்கி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 31-ந்தேதி காலையில் கால் நாட்டு வைபவத்துடன் தொடங்கியது. 6-ந் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் குடி அழைப்பு, மகா தீபாராதனை, நேற்று காலை 6 மணிக்கு மணிகண்ட பட்டர், ஆறுமுகநாத பட்டர் ஆகியோர் தலைமையில் எஜமானர் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜணம், கும்பபூஜை, வேதபாராயணம், கணபதி ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    அதை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தென்திருப்பேரை பஜாரில் அமைந்துள்ள சுந்தரபாண்டிய விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனையுடன் மதியக்கொடை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் பொதுமக்கள் பொங்கலிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை சுந்தரம் பிள்ளை, நடராஜ பிள்ளை மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • தேவேந்திர குல வேளாளர்களின் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு நிகழ்வான “பொன் ஏர் பூட்டும்” நிகழ்ச்சி நேற்று தென்திருப்பேரையில் கொண்டாடப்பட்டது.
    • மகர நெடுங்குழைக்காதர் கோவில் வயலில் பால்ராஜ் முதல் உழவு செய்து தொடங்கி வைத்தார்.

    தென் திருப்பேரை :

    பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தேவேந்திர குல வேளா ளர்களின் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு நிகழ்வான "பொன் ஏர் பூட்டும்" நிகழ்ச்சி நேற்று தென்திருப்பேரையில் கொண்டாடப்பட்டது.

    மகர நெடுங்குழைக்காதர் கோவில் வயலில் பால்ராஜ் முதல் உழவு செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்திருப்பேரை மகர நெடுக்குழைக்காதர் கோவில் மற்றும் துவா தஸம் டிரஸ்ட் சார்பாக தென்திருப்பேரை சுற்று வட்டார தேவேந்திர குல வேளாளர்களின் ஊர்களான குட்டக்கரை, தென்திருப்பேரை, மேலக்கடம்பா, கோட்டூர், குருகாட்டூர், ராஜபதி, கல்லை, மணத்தி, புறையூர், அம்மன்புரம் உள்பட 15 ஊர் குடும்பத்தார்களுக்கும், ஆன்மீக அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் மாலை மற்றும் மரியாதை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தென்தி ருப்பேரை சுற்று வட்டார தேவேந்திர குல வேளாளர் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் ராஜகுமார், பொருளாளர் மாரி துரைசாமி, துணைத் தலைவர்கள் சவுந்திர ராஜன், இசக்கிதுரை, நிர்வாகிகள் தம்புரான், பலவேசம், முருகேசன், கந்தன், கணேசன், குமார், ரத்தினம், பெருமாள், தேவேந்திர குல மக்கள் மாநில நிர்வாகி சுரேஷ் மற்றும் தென்திருப்பேரை துவா தஸம் டிரஸ்ட் தலைவர் நம்பி ராஜன், டிரஸ்ட் செயலாளர் மகர பூசணம் மற்றும் போர்ட் டாப் டிரஸ்டி ஆழ்வான், ஸ்ரீனிவாசன் மற்றும் தோழப்பர் வரதராஜன் மற்றும் அனந்த கிருஷ்ணன், வேணு தேயன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    ×