search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alwarthinagari Temple"

    • நம்மாழ்வார் அவதார திருவிழாவை முன்னிட்டு 6 நாட்கள் கோவில் முன் சடகோபன் அரங்கில் இசை, பரதநாட்டியம், உள்ளிட்ட ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.
    • பிறவி பெருங்கடலை நீந்தி கரை சேர்ப்பது திருவாய்மொழி .

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதிகளில் 9-வது திருப்பதி ஆழ்வார்திரு நகரியாகும். நம்மாழ்வார் அவதார திருவிழாவை முன்னிட்டு 6 நாட்கள் கோவில் முன் சடகோபன் அரங்கில் இசை, பரதநாட்டியம், உபந்யாசம் உள்ளிட்ட ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    அதில் ஒரு பகுதியாக திருக்குடந்தை மருத்துவர் உ.வே.க. வெங்கடேஷ் சுவாமி, நம்மாழ்வாரின் திருவாய்மொழி பெருமை மற்றும் சாரம் பற்றி 2 நாட்கள் உபந்யாசம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-

    ஒப்பற்ற ஊரானது ஆழ்வார்திருநகரி. ஒப்பற்ற சுவாமி சடகோபர். ஒப்பற்ற வைகாசி விசாகம். ஒப்பற்ற திருவாய்மொழி என மணவாள மாமுனிகள் சொல்லிபடி திருவாய்மொழி ஏற்றம் மிகுந்தது. திருவாய்மொழி வேதம். அதை தெரிவிப்பது நம்மாழ்வார். திருவாய்மொழி தெளிவும் நிம்மதியையும் தரக்கூடியது. ஆயிரம் வரும் ஆனால் நிம்மதி வருவதில்லை என பாடல் உண்டு. அந்த நிம்மதி தருவது திருவாய்மொழி. பிறவி பெருங்கடலை நீந்தி கரை சேர்ப்பது திருவாய்மொழி.

    இறைவனை உள்ளபடி காண்பிப்பது திருவாய்மொழி. இவ்வாறு 5 குறுந்தலைப்புகளில் சுருக்கமாக தெரிவிக்கிறேன். ஸ்ரீமந்நாராயணன் மந்திர மலையை மத்தாக்கி வாசுகி நாகத்தை கயிராக்கி கொண்டு திருப்பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்து கொடுத்தார். அதேபோல நம்மாழ்வார் தனது நாக்கை மத்தாக்கி வேதம் என்னும் கடலை கடைந்து திருவாய்மொழி என்னும் அமுதம் கொடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் உ.வே. வெங்கடேசுக்கு கோவில் நிர்வாக அதிகாரி அஜித், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஆதிநாதன், டாக்டர் கோகுல் சேதுராமன் ரகுராமன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். நிகழச்சிக்கான ஏற்பாடுகளை பூர்வசிகை வைஷ்ணவ சங்கத்தினர் செய்திருந்தனர்.

    ×