ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி

நேற்று காலை நவதிருப்பதி பெருமாள் கோவில் கருட வாகனங்கள் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு வந்து சேர்ந்தன. விழாவின் சிகர நாளான 1-ந் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
Published on

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவி லில் நம்மாழ்வார் மங்களா சாசனம் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

பிரம்மோற்சவ விழா

ஆழ்வார் கோவிலின் பூப்பந்தல் மண்டபத்தில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளி னார். சுவாமி நம்மாழ்வார் இங்குள்ள புளிய மரத்தின் பொந்தில் சிறு குழந்தையாக தவழ்ந்து வந்து அமர்ந்து 16 ஆண்டுகள் கழித்து வாய்திறந்து திருவாய்மொழி பாடினார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் திரு அவதாரம் செய்த வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 15 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மங்களாசாசனம் கருடசேவை

அதைத்தொடர்ந்து நேற்று காலை நவதிருப்பதி பெருமாள் கோவில் கருட வாகனங்கள் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு வந்து சேர்ந்தன. ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர் கடிவான், திருப்புளியங்குடி காய்சினவேந்தன், இரட்டை திருப்பதி அரவிந்தர லோசனர், தேவர்பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி, ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மதுரகவி ஆழ்வார் ஆகியோர் பூப்பந்தல் மண்டபத்திற்கு வந்த பின்னர் இரவு 10.30 மணிக்கு மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் 9 பெருமா ள்களும் புஷ்ப அலங்கா ரத்துடன் கருடவாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்கபல்லக்கிலும் ஒன்றன்பின் ஒன்றாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர்.

தேரோட்டம்

விழாவின் சிகர நாளான 1-ந் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து 8.30 மணி அளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம் நடக்கிறது. 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 10 -ம் நாள் திருவிழாவான தீர்த்தவாரி நிகழ்ச்சி தாமிரபரணி நதியில் காலை நடக்கிறது. நிகழ்ச்சியில் மாஜிஸ்திரேட் மகராஜன், திருகளங்குடி பேரரூளாயர் ஜீயர், முன்னாள் அறங்கா வலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜீத், தக்கார் கோவல மணிகண்டன், அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஶ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் ஆழ்வார் திருநகரி போலீசார் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com