என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Sub-inspector Examination"

    • அறிமுக கூட்டம் தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் நடைபெற்றது.
    • சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஸ்ரீவைகுண்டத்தில் 75 நாட்கள் நடைபெறும்.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு காவல்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் மற்றும் காவலர் போட்டி தேர்வுகளுக்கு படித்த இளைஞர்களை தயார் செய்யும் நோக்கில் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் போட்டித்தேர்வுக்கான பயிற்சி முகாம் 'மாற்றத்தை தேடி' என்ற தலைப்பில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் நடத்தப்படுகிறது.

    அதற்கான அறிமுக கூட்டம் தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நேற்று ஸ்ரீவைகுண்டம் போலீஸ் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் நடைபெற்றது.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் டி.எஸ்.பி. மாயவன் கூறியதாவது, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஸ்ரீவைகுண்டத்தில் 75 நாட்கள் நடைபெறும்.

    இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து உபகரணங்களையும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இளைஞர்கள் தங்களை தயார் செய்து பயிற்சியில் தேர்வாகி, இங்கு கலந்து கொண்ட இளைஞர்கள் அனைவரும் காவல்துறை தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் சேரவேண்டும் என கூறினார்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், ஆழ்வார்திருநகரி சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வன், இசக்கி பாண்டி, பயிற்சியாளர் திலகர், வக்கீல் செல்வராஜ், தென்திருப்பேரை

    பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்த், மகரபூசணம், தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×