search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thalapathy Vijay"

    சர்கார் படத்தின் பிரச்சனை தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். #Sarkar #ARMurugaDoss
    நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆளும் அதிமுக அரசை தாக்குவதுபோல் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்குமாறும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில், சர்கார் படத்துக்கு என வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் சர்கார் படம் ஓடும் திரையரங்குகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று நள்ளிரவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் வந்ததால், முன் ஜாமீன் கோரியுள்ளார். இந்த மனு பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. #ARMurugadoss #Sarkar #Vijay
    சர்ச்சை காட்சிகளுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Sarkar
    விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சியில் படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசே நடித்துள்ளார்.

    தமிழக அரசின் பொதுப்பணித்துறை, போக்குவரத்துறை, மின்சார துறை ஆகிய துறைகள் சரியாக செயல்படவில்லை என்றும் படத்தில் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமிக்கு கோமளவல்லி என்று பெயர் சூட்டியுள்ளதும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இது ஜெயலலிதாவின் பெயர் என்று கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதுபோன்ற காட்சிகளை சர்கார் படக்குழுவினரே நீக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலையில் சர்கார் படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் குதித்தனர்.

    அப்படத்துக்காக விஜய் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். சில இடங்களில் பேனர்கள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த சர்கார் பட பேனர்கள் அகற்றப்பட்டன.

    அ.தி.மு.க.வினர் நடத்திய இந்த போராட்டத்துக்கு எதிராக சில இடங்களில் விஜய் ரசிகர்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

    போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். இதுபோன்ற மோதல் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

    சென்னையில் மட்டும் சர்கார் படம் 68 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள காசி தியேட்டரில் நேற்று மாலையில் அ.தி.மு.க.வினர் திரண்டு பேனர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவி தியேட்டரிலும் பேனர்கள் கிழிக்கப்பட்டன.

    இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 68 தியேட்டர்கள் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதி உதவி கமி‌ஷனர்கள் தலைமையில் தியேட்டர்கள் முன்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்று தெரிவித்தார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படம் 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. #Sarkar
    விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    சர்கார் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது படக்குழுவை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. விஜய் படம் ஒன்று இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    விஜய்யின் துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார் என 6 படங்கள் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் சர்கார் தான் அதிவேகத்தில் ரூ.100 கோடி வசூல் செய்த படம். 



    வார நாட்களிலேயே சர்கார் வசூல் செய்துள்ள நிலையில் வார இறுதி நாட்கள் வருவதால், வசூலில் நிச்சயம் மேலும் பல புதிய சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சர்கார் படத்தில் இடம் பெறும் சர்ச்சை காட்சிகளை நீக்க கோரி சென்னை காசி தியேட்டரில் வைக்கப்பட்ட பேனர்களை அதிமுகவினர் கிழித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். #Sarkar
    விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் அரசியல் சூழ்நிலையை விவரித்தும், கள்ள ஓட்டு பற்றியும் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.

    இப்படத்தில் அரசு கொடுக்கும் விலையில்லா பொருட்களை மக்கள் தீவைத்து எரிப்பது போன்ற காட்சிக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும் அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் சர்கார் திரையிடப்படும் சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. கோவை ரயில் நிலையம் அருகே சாந்தி தியேட்டர் முன் சர்கார் பேனர்களை கிழித்தும் போராட்டம் நடத்தினார்கள்.

    தற்போது சென்னை காசி தியேட்டரில் சர்கார் படத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களை அதிமுகவினர்கள் கிழித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். விஜய் ரசிகர்களும், அதிமுகவினரும் ஒரே இடத்தில் இருந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #Sarkar
    சர்கார் படத்தில் இடம் பெறும் சர்ச்சை காட்சிகளை நீக்க கோரி மதுரை, கோவை பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். #Sarkar
    விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் அரசியல் சூழ்நிலையை விவரித்தும், கள்ள ஓட்டு பற்றியும் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.

    இப்படத்தில் அரசு கொடுக்கும் விலையில்லா பொருட்களை மக்கள் தீவைத்து எரிப்பது போன்ற காட்சிக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும் அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



    மதுரையில் சர்கார் திரையிடப்படும் சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. கோவை ரயில் நிலையம் அருகே சாந்தி தியேட்டர் முன் சர்கார் பேனர்களை கிழித்தும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 
    சர்கார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பழ.கருப்பையா, விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று கூறியிருக்கிறார். #Sarkar #Vijay #PalaKaruppiah
    சர்கார் பட பிரச்சினை பற்றி முன்னாள் எம்.எல்.ஏ.வும், நடிகருமான பழ.கருப்பையா கூறியதாவது:-

    ஒரு படம் தணிக்கை குழு அனுமதித்து வெளிவந்து விட்ட பிறகு ஒவ்வொருவரும் இதை நீக்கு, அதை நீக்கு என்று சொன்னால் தணிக்கை குழுவுக்கு வேலையே இல்லை.

    இத்தனை பேரிடம் ஓட்டெடுப்பு நடத்தி ஒரு படமெல்லாம் வெளியிட முடியாது. அதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அந்த குழு இதை அனுமதித்து இருக்கிறது.

    நான் பல சமயங்களில் பேசிய வசனங்கள் அதில் மியூட் செய்யப்பட்டுள்ளது. எனது குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. வெறும் வாய் மட்டும் அசையும். அதில் ஒன்று கலைஞரைப் பற்றிய வசனம். கலைஞரை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வசனம் ஒன்றும் அதிலே இருக்கிறது.

    15 வயதில் டவுசர் போட்டுக் கொண்டு இந்தியை எதிர்த்தேன் என்று சொன்னால் அது கலைஞரை குறித்துவிடும் என்பதற்காக அதை நீக்கி இருக்கிறார்கள்.

    சர்கார் படத்தில் உங்களைப் பற்றிய வசனங்களையும் நீக்கி இருந்தால் அதை முருகதாஸ் ஏற்றுக் கொண்டிருப்பார். ஆனால் அனுமதித்த பிறகு இதை நீக்கு, அதை நீக்கு என்று ஒவ்வொரு வசனத்தையும் நீக்கு என்று சொல்லாதீர்கள். நீக்கு என்று சொன்னால் ஒவ்வொரு வசனத்தையும் நீக்கிக் கொண்டிருக்க முடியாது. படத்தையே நீக்கு என்று சொல்லுங்கள்.

    எனவே இந்த படம் முழுவதும் நிகழ்கால அரசியல் குறித்ததுதான். நிகழ்கால அரசியல் மதிக்கத்தக்கதாக இருக்கிறதா என்று நானே கேட்கிறேன். இலவசத்தின் மூலம்தான் நடத்துகிறீர்கள். கமி‌ஷன் வாங்காத, ஊழல் செய்யாத துறை என்று ஒரு துறையுமே கிடையாது. நாட்டிலே மணலை இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு நீங்கள் கொண்டு வந்து விட்டீர்கள்.



    நடிகர் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வருவார். இது என்னுடைய கருத்து. இந்த படம் முழுவதும் அவருடன் பழகுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரிடம் ஒரு உறுதி இருக்கிறது. தனக்கு அளப்பரிய அன்பு செலுத்துகின்ற இந்த சமூகத்துக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார். அதனால் இப்போது வருவாரா என்று எனக்கு தெரியாது.

    அவருக்கு பெரிய மார்க்கெட் இருக்கிறது. பெரிய வலிமையான வயது இருக்கிறது. 40 வயதில் 20 வயது பையன் போல இருக்கிறார். ரொம்ப அபூர்வமான உடல் அமைப்பு. அதனால் ஒரு கிரேஸ் இருப்பவர் அதையெல்லாம் விட்டு விட்டு இப்போது அரசியலுக்கு வருவாரா என்று எனக்கு தெரியாதே தவிர அவர் உறுதியாக அரசியலுக்கு வருவார்.

    அவர் என்னிடம் பேசியதை வைத்து சொல்கிறேன். அவர் என்னிடம் கூறும்போது, “தனக்கு ஒரு நல்ல குடும்பம் இருக்கிறது. மனைவி இருக்கிறார். ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். பணம் வழிந்தோடுகிறது.

    எனவே இவ்வளவு அன்பு செலுத்திய மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். மிகச்சிறந்த சிந்தனை. நாள் தள்ளிப் போடாமல் இதை செய்யுங்கள் என்று சொன்னேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படம் குறித்து எச்.ராஜா ட்விட்டரில் சூசகமாக விமர்சனம் செய்துள்ளார். #Sarkar #HRaja
    விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

    இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று உலகமெங்கும் அதிகப்படியான திரையரங்களில் வெளியாகி இருக்கிறது. மேலும் வசூலில் தெறி, மெர்சல், காலா, பாகுபலி உள்ளிட்ட படங்களையும் தாண்டி அதிகமாக வசூலித்தாக செய்திகள் வெளியாகியுள்ளது.



    இந்நிலையில் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா’ என்று சர்கார் படம் குறித்து சூசகமாக விமர்சனம் செய்துள்ளார். இவருடைய இந்த பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். #Sarkar #Vijay
    விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல், காலா மற்றும் பாகுபலி படத்தை விட அதிகமாக வசூலித்திருக்கிறது. #Sarkar
    விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் அரசியல் சூழ்நிலையை பற்றியும், கள்ள ஓட்டு பற்றியும் சமூக அக்கறையுடன் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

    ரசிகர்களிடையே மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. இப்படத்தின் முதல் நாள் வசூல் தற்போது வெளியாகி இருக்கிறது. சென்னையில் ரூ.2.37 லட்சம் முதல் நாள் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசூல் ரஜினியின் காலா, பிரம்மாண்ட படமான பாகுபலி கலெக்‌ஷனை முறியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் நடித்த தெறி, மெர்சல் படங்களின் வசூலையும் மிஞ்சியிருக்கிறது.



    சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி, பழ கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
    உயர்நீதிமன்றத்தின் எதிர்ப்பையும் மீறி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது. #Sarkar #TamilRockers
    நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் எச்.டி. பிர்ண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் நேற்று பதிவிடப்பட்டது.

    இது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. சர்கார் படம் தொடர்பாக தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. மேலும் உயர்நீதிமன்றமும் வெளியிட கூடாது என்று தடைவிதித்தது.

    இருப்பினும், காலை தமிழ் ராக்கர்ஸ், சர்கார் படத்தின் எச்.டி.பிர்ண்ட் இன்றே வெளியாகும் என்று மீண்டும் ட்விட்டரில் பதிவு செய்தார்கள். இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மதியம் சர்கார் படம் இணைய தளத்தில் வெளியானது. 



    உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி சட்ட விரோதமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #Sarkar #Vijay #TamilRockers #TamilFilmProducersCouncil
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் விமர்சனம். #Sarkar #SarkarReview
    தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த விஜய், அமெரிக்காவில் பெரிய கார்ப்ரேட் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் சென்னைக்கு வருகிறார். இதையறிந்த பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள். ஆனால் விஜய்யோ தான் ஓட்டு போடுவதற்காக வந்தேன் என்று கூறுகிறார். ஓட்டு போட போன இடத்தில் இவரது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிடுகிறார்கள்.

    முதலமைச்சராக இருக்கும் பழ.கருப்பையாவின் ஆட்கள் தான் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்பதை விஜய் அறிந்துக் கொள்கிறார். மேலும் பலருடைய ஓட்டுகளும் கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது. இதை ஏன் மக்கள் கேட்கவில்லை என்று விஜய் ஆவேசப்படுகிறார். 



    விஜய்க்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வழக்கு தொடர, பழ.கருப்பையாவால் முதலமைச்சர் பதவிக்கு போகமுடியாமல் போகிறது. இதனால் கோபமடையும் பழ.கருப்பையா விஜய்யை பழிவாங்க நினைக்கிறார். ஆனால், விஜய்யோ பழ.கருப்பையாவை எதிர்த்து தமிழ்நாட்டை ஒழுங்குபடுத்த நினைக்கிறார்.

    இறுதியில், விஜய்யை பழ.கருப்பையா பழிவாங்கினாரா? பழ.கருப்பையாவை விஜய் எப்படி சமாளித்து எதிர்த்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    துறுதுறுவென இருக்கும் மிகவும் இளமையான விஜய்யை இப்படத்தில் பார்க்க முடிகிறது. நடனம், நடிப்பு, வசனம், ரொமான்ஸ் என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார். வசனங்கள் எல்லாம் தியேட்டரில் அனல் பறக்கிறது. குறிப்பாக கள்ள ஓட்டு போட்டவுடன் மக்களுடன் பேசுவது, பழ.கருப்பையாவுடன் நேருக்கு நேர் பேசும் காட்சிகள் விசில் பறக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மிரளவைத்திருக்கிறார்.



    நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், விஜய்யை பார்த்தவுடன் காதல் வசப்படுவது, அவருடன் பயணிப்பது என அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். பழ.கருப்பையாவிற்கு மகளாக வரும் இவர், தந்தைக்கு அறிவுரை கூறுவது, விஜய்யை எதிர்ப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். 
    முதலமைச்சராக வரும் பழ.கருப்பையாவின் நடிப்பு அபாரம். மிகவும் சாதாரணமாக நடிப்பை வெளிப்படுத்தி விட்டு செல்கிறார். இவருக்கு உதவியாளராக வரும் ராதாரவி, விஜய்யை தூண்டி விடுவது, பின்னர் அவர் யார் என்று தெரிந்தவுடன் பயப்படுவது என ரசிக்க வைத்திருக்கிறார்.

    தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், கள்ள ஓட்டு விவகாரம், கந்து வட்டி பிரச்சனை என அனைத்தையும் அலசியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். யாரை வைத்து என்ன சொன்னால் எப்படி படம் வரும் என்று கணித்து வைத்திருக்கிறார் இயக்குனர். விஜய்யிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக வசனங்கள் கைத்தட்டல் பெற்றிருக்கிறது. 



    ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவுடன் பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. விஜய்யை மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார் கிரீஷ். பல இடங்களில் இவரது கேமரா விளையாடி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘சர்கார்’ நின்னு ஜெயிப்பான். 
    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் எச்.டி.பிர்ண்ட் இன்றே வெளியாகும் என்று தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்கள். #Sarkar #Vijay #TamilRockers
    நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் எச்.டி. பிர்ண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் நேற்று பதிவிடப்பட்டது.

    இது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இதனை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில், சர்கார் படம் தொடர்பாக தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது.

    தற்போது தமிழ் ராக்கர்ஸ், சர்கார் படத்தின் எச்.டி.பிர்ண்ட் இன்றே வெளியாகும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்கள். இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Sarkar #Vijay #TamilRockers #TamilFilmProducersCouncil
    சர்கார் படம் வெளியாவதை முன்னிட்டு கேரளா விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய கட்-அவுட் வைத்து திருவிழா போல் கொண்டாடி இருக்கிறார்கள். #Vijay #Sarkar
    நடிகர் விஜய்க்கு கேரளாவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஏராளமான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இந்த ரசிகர் மன்றங்கள் மூலம், விஜய் படம் வெளிவரும் போதெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், கட் அவுட்களில் புதுவிதமான அணுகு முறைகளைச் செய்தல் ஆகியவற்றின் மூலம் விஜய் மீதான தங்கள் அன்பினை மலையாள ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் அங்குள்ள விஜய் ரசிகர் மன்றங்களில் பிரபலமானது கொல்லம் நண்பன்ஸ். இவர்கள் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள ‘சர்கார்’ படத்திற்கு இந்திய நடிகர்களிலேயே மிகப்பெரிய கட் அவுட்டை நடிகர் விஜய்க்காக உருவாக்கி உள்ளனர். 

    இந்த கட் அவுட்டின் உயரம் சுமார் 175 அடி என்று கூறப்படுகிறது. இதனை மலையாள நடிகர் சன்னி வைன் திறந்து வைத்து இருக்கிறார். மேலும், இந்தத் திறப்புவிழாவில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
    ×