என் மலர்
சினிமா

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
சர்கார் படத்தின் பிரச்சனை தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். #Sarkar #ARMurugaDoss
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆளும் அதிமுக அரசை தாக்குவதுபோல் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்குமாறும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சர்கார் படத்துக்கு என வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் சர்கார் படம் ஓடும் திரையரங்குகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று நள்ளிரவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் வந்ததால், முன் ஜாமீன் கோரியுள்ளார். இந்த மனு பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. #ARMurugadoss #Sarkar #Vijay
Next Story






