search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple festival"

    • கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது.
    • ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத் தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாந்தி வீரன் சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

    இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. கோவிலுக்கு தக்கார் நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதனை எதிர்த்து கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலக்கோட்டை கிராமத்திலுள்ள சசி பாண்டிதுரை, பாலசுந்தரம், ஜெயபாலன் மற்றும் நவநீதன் ஆகியோர் நீதிமன்றத்தில் தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை கோரியும் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் இந்த வருடம் திருவிழாவில் இவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆனி மாத திருவிழா காலங்களில் இக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் அட்டவணைப் படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆகியோர் கோவில் உள்ளே அனுமதி வழங்கப்படுவது இல்லை. எனவே சிவகங்கை சாந்தி வீரன் சாமி கோவில் ஆனி மாத திருவிழாவில் யாருக்கு தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை வழங்கவும் கூடாது என வும், அட்டவணைப்படுத்தப் பட்ட சமூகத்தினர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க வும், திருவிழாவில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும.

    இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார்.

    அந்த மனு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், தனிப்பட்ட நபர்களுக்கு கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக் கூடாது, அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கோவில் திருவிழாவிற்கு சென்று வழிபடுவதையும் இந்து அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். இதனை சாந்தி வீரன் சாமி கோயில் தக்கார் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா தொடங்கியது.
    • அன்பின் விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை

    மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர்மறை மாவட்ட குடும்ப நல்வாழ்வு மைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் பால்ராஜ் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத் தார். தொடர்ந்து தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெப மாலை வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நடைபெறு கிறது.

    அருட்தந்தையர்கள், பால் பிரிட்டோ (சமயநல்லூர்) ஜோசப் அந்தோணி (நாகமலைபுதுக்கோட்டை) ஜெயராஜ் ( பாஸ்டின் நகர்) அருளானந்தம் (வடக்கு வட்ட அதிபர்) மரிய மைக்கேல் (சதங்கை) பென டிக்ட் பர்னபாஸ் (மறைப் பணி நிலையம்) சகாயம் (ரட்சகர் சபை ) டேனியல், சந்தியாகு (அருளக குருக்கள்) ஆகியோர் பங்கேற்று சிறப்பு திருப்பலி நிறைவேற்று கிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 24-ந்தேதி (சனிக்கிழமை) மாலை சகாய அன்னை திரு உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை திருப்பலி முடிந்ததும் கொடியிறக்கப் பட்டு அன்பின் விருந்துடன் திருவிழா நிறைவு பெறு கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள் சேகர் தலைமையில் பங்கு அருட்பணி பேரவை யினர், துறவற சபையினர், அன்பிய பொறுப்பாளர்கள், பங்கு இறை மக்கள் ஆகி யோர் செய்து வருகின்றனர்.

    • அம்மனுக்கு காசு மாலை அணிவித்தனர்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள வேப்பங்குப்பத்தில்கெங்கை யம்மன் கோவிலில் 152-ம் ஆண்டு திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக நேற்று காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் தேசத்து மாரியம்மன் சிரசுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர், வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்களின் பெரும் வெள்ளத்தில் தாரை தப்பட்டை முழங்க, கோலாட்டம், மயிலாட்டாம், பொய்கால் குதிரை, சிலம்பம் போன்றவைகளின் முன்பாக அம்மன் சிரசு ஊர்வலமாக சென்றது.

    அப்போது, பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக வழிநெடுக்கிலும் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடந்து, அம்மனுக்கு காசு மாலை, வண்ண மலர்களை கொண்டு தரிசனம் செய்தனர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் மதியம் 2 வரை தொடந்து நடைபெற்று வந்தது. ஒடுகத்தூர், வேப்பங்குப்பம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    விழாவிற்க்கனா ஏற்ப்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி செய்திருந்தார். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மதுரை வாடிப்பட்டி அருகே துர்க்கை அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • 2-ம் நாள் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், 7 மணிக்கு பெண்கள்முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் ஆற்றங்கரையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் 23-ந் ஆண்டு உற்சவ விழா 3 நாட்கள் நடந்தது. இந்த விழாவிற்கு முதல் நாள் பாலன் நகர் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து துர்க்கை அம்மன் சிவப்பு பச்சை பட்டு உடுத்தி சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். 2-ம் நாள் மாலை 4 மணிக்கு பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், 7 மணிக்கு பெண்கள்முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து அம்மன் புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பூஞ்சோலையை அடைந்தது. மூன்றாம் நாள் பல்லையம் பிறித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ப்பட்டது. இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணி நிர்வாக்குழு நிர்வாகிகள் கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.

    • சிறுவனின் தாத்தா கணேசன் நாதஸ்வர கலையில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
    • சிறுவன் தவில் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் கோவில் திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சாய் வெங்கடேஷ் (வயது 6). இவர் கீழ்வேளூரில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில், வெங்கடேஷ் பள்ளி விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் தந்தை பாலசுந்தரத்துடன் சுபநிகழ்ச்சிகளுக்கு சென்று நாதஸ்வரம் வாசிப்பதை கவனித்து வந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல வெங்கடேசுக்கும் இசை மீது அதீத பற்று வந்துள்ளது. இதனால் அவ்வப்போது தவில் அடித்து பழகி வந்துள்ளார்.

    இந்நிலையில், கீழ்வேளூர் யாதவ நாராயண பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் சிறுவன் வெங்கடேஷ் நாதஸ்வர இசைக்கு ஏற்றார் போல் தவில் அடித்து அசத்தி உள்ளார். இது கோவிலில் இருந்த பக்தர்களையும், பொதுமக்களையும் வெகுவாய் கவர்ந்தது.

    சிறுவனின் தாத்தா கணேசன் நாதஸ்வர கலையில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவன் தவில் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை கண்ட பலரும் சிறுவனை பாராட்டு வருகின்றனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா
    • ஏராளமான பத்தர்கள் தரிசனம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது.

    கோவிலில் வைகாசி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

    விழாவையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கெங்கையம்மனை தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடியும், தலைகீழாக தொங்கியும் அம்மனுக்கு ஆகாய மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.

    விழாவில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • அலகு குத்தியும், பறக்கும் காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
    • பத்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் முத்துமாரியம்மன், கவுக்கியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது.

    விழாவையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் முதுகில் அலகு குத்தியும்; பறக்கும் காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • கோவில் திருவிழாவில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
    • பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்அப்துல்லா, 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பரளச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கீழ்க்குடி கிராமத்தில் உலகநாயகி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்று இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பூலாங்கால் கிராமத்ைத சேர்ந்த பைசல் என்பவருக்கும், விழா கமிட்டியினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் சேக்அப்துல்லா(வயது24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கிராம மக்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    நிைலமை மோசமாகி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்ேபாது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து பரளச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம், தலைமை ஏட்டு ராஜூ ஆகியோர் இருதரப்பினரை கண்டித்து சமரசமாக செல்லுமாறு எச்சரித்தனர்.

    அப்போது சேக் அப்துல்லா மற்றும் 17 வயதுடைய நபர் சப்-இன்ஸ்பெக்டரையும், ஏட்டுவையும் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த புகாரின்பேரில் பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்அப்துல்லா, 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

    • 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கஸ்பா கவுதமபேட்டை கெங்கையம்மன் கோவில் திருவிழா 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    இன்று காலை கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது.

    முன்னதாக ராபின்சன் குளக்கரை பகுதியில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் செய்யப்பட்டு அம்மன் சிரசு ஊர்வலம் காலையில் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக கஸ்பா‌ கவுதமபேட்டையில் உள்ள கெங்கையம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின் பக்தர்கள் கெங்கையம்மனை தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய்கள் உடைத்தும், ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் தரிசனம்.

    நெமிலி:

    ராணிப்பேட்டைமாவட்டம் நெமிலியில் உள்ள விசா லாட்சி அம்மன் சமேத புன்ன கேஷ்வரர் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட விசாலாட்சி அம் மன் சமேத புன்னகேஷ்வரர் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம் மனை வழிபட்டனர்.

    • அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத கடைசி பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சிக்கார்தணஅள்ளி ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீசெல்லப்பன் திரு விழாவை முன்னிட்டு ஊஞ்சல் கம்பம் நடுவிழா, ஊர்மண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சிக்கார்தணஅள்ளி ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீசெல்லப்பன் திரு விழாவை முன்னிட்டு ஊஞ்சல் கம்பம் நடுவிழா, ஊர்மண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. 
    அதனை முன்னிட்டு அதிகாலை முதலே சாமிக்கு பல்வேறு திரவியங்களால்  அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் கும்பம் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் இக்கோ விலுக்கு பாத்தியப்பட்ட  சிக்கார்தணஅள்ளி,  மாக்கன்கொட்டாய், எண்டப்பட்டி, கோடி யூர், மாதம்பட்டி, திம்மம்பட்டி காலணி, தொட்டார்தனஅள்ளி கிராம மக்கள் ஒன்றினைந்து தாய் கிராமமான சிக்கார்தன அள்ளியில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீசெல்லப்பன் கோவில் நாட்டு கவுண்டர் ஆனந்தனுக்கு பரிவட்டம் கட்டி கோவில் திருவிழாவை தொடங்கி  வைத்தனர்.

    இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை 7 கிராம ஊர்கவுண்டர்கள், மந்திரிகவுண்டர்கள் விழாக் குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    ×