என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் கஸ்பா கவுதமபேட்டை கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்
    X

    குடியாத்தம் கஸ்பா கவுதமபேட்டை அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது.

    குடியாத்தம் கஸ்பா கவுதமபேட்டை கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்

    • 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கஸ்பா கவுதமபேட்டை கெங்கையம்மன் கோவில் திருவிழா 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    இன்று காலை கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது.

    முன்னதாக ராபின்சன் குளக்கரை பகுதியில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் செய்யப்பட்டு அம்மன் சிரசு ஊர்வலம் காலையில் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக கஸ்பா‌ கவுதமபேட்டையில் உள்ள கெங்கையம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின் பக்தர்கள் கெங்கையம்மனை தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய்கள் உடைத்தும், ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×