search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகுதியில்"

    • அணை திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும் தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை
    • குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்ப பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்ப பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணியில் விவ சாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சுசீந்திரம், அருமநல்லூர், தேரூர், பூதப்பாண்டி, புத்தேரி, சுங்கான்கடை, பொற்றையடி, அஞ்சுகி ராமம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடிகள் செய்ய ப்பட்டுள்ளது. நடவுப்பணி மற்றும் நேரடி விதைப்பின் மூலமாக சுமார் 4000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 1500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயார் ஆகிவருகிறார்கள். கன்னி பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு 30 நாட்கள் ஆகியும் கடைமடை பகுதியில் வரை தண்ணீர் செல்லவில்லை. சானல்கள் சரி வர தூர்வாராததே இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். இதை த்தொடர்ந்து சானல்களை தூர்வார ரூ.5 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரு கிறது. கிளை கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தோவாளை சானல், அனந்தனார் சானல் உட்பட பிரதான கால்வாய்களை தூர்வருவது தொடர்பாக விவசாய பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது 2 நாட்கள் மட்டுமே தண்ணீரை அடைத்து தூர்வார வேண்டும் இல்லாவிட்டால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்தார். நாகர்கோவில் புத்தேரி அருகே புளியடி பகுதியில் அனந்தனார் சானலின் கிளை கால்வாயான பீசாத்தி கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அணை பாசனத்தை நம்பி அந்த பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.

    தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் தண்ணீர் வராததால் நெற்ப யிர்கள் காய்ந்து வருகிறது. வயல்கள் வடித்து நெற்ப யிர்கள் முற்றிலும் கருகி காணப்படுகிறது.

    இதேபோல் புத்தேரி அருகே லட்சுமி குளம், அட்டகுளம் பகுதியிலும் தண்ணீ ர் இல்லாத நிலை உள்ளது. பண்டார தோப்பு பகுதியில் பாதி அளவு சாகுபடி செய்து மீதமுள்ள இடங்களில் சாகுபடி செய்ய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டிவரும் நிலையில் அணைகளின் நீர்மட்டமும் சரிந்து காணப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 19.45 அடியாக சரிந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்ட மும் சரிந்து வருவதால் சாகு படி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே சாகுபடி செய்துள்ள அந்த பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். ஆனால் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து கண்ணாமூச்சி கட்டி வருகிறது. வருண பகவான் வழிவி ட்டால் மட்டுமே நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு
    • தினமும் யானையை டாக்டர் குழுவினர் கண் காணித்து வருகிறார்கள்.

    கேரளா எல்லை பகுதி களிலும், தேனி மாவட்டத்திலும் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறை யினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வன சரக்கத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது. காட்டுக்குள் விடப்பட்ட அரிசி கொம் பன் யானை குடியிருப்பு பகுதியில் வரக்கூடும் என்பதால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அரிசி கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர்கருவி பொருத்தப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. அப்பர் கோதையாறு பகுதியில் அரிசி கொம்பன் யானைக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைத்து வருவதால் அந்த பகுதியிலேயே யானை சுற்றி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகளுடன் சுற்றித்திரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இது யானை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அரிசி கொம்பன் யானை மூணாறு பகுதியில் பிறந்தது. அதன் பிறகு தேனி பகுதியில் இருந்து தற்போது அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ளது.

    அப்பர் கோதையாறு பகுதியில் யானைக்கு தேவையான தண்ணீர், உணவு வகைகள் கிடைக் கிறது. தினமும் யானையை டாக்டர் குழுவினர் கண் காணித்து வருகிறார்கள். தினமும் யானை சாப்பிடும் உணவு போன்றவையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானையின் சாணத்தையும் டாக்டர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். யானை ஏற்கனவே இருந்த சீதோ சண நிலையில் இருந்து தற்பொழுது புதிய சீதோ சண நிலைக்கு வந்துள்ளது காரணமாக அதன் உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.

    அதை டாக்டர் குழு வினர் கண்காணித்து அதற் கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள். கடந்த 14 நாட்களாக 5 கிலோ மீட்டர் சுற்றள விலேயே யானை சுற்றி வரு கிறது. அரிசி கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்கு வரும் என மக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்பொழுது கடல் மட்டத் திலிருந்து 1350 மீட்டர் மேல் உள்ள கோதை ஆற்றின் பிறப்பிடம் அருகே வனப் பகுதியில் தான் அரிசி கொம்பன் யானை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    கொல்லங்கோடு, ஜூன்.17-

    தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    இதில் நவீன ரக வாகனங்களும், விலை உயர்ந்த இருச்சக்கர வாகனங்களும் இங்கு அதிகம் விற்பனை ஆகின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களே இத்தகைய வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த வாகனங்களில் அரசு அனும தித்து உள்ள அள வை விட அதிக ஒலி எழுப்பும் கருவி களை பொருத்தி வீதிகளிலும், சாலைகளி லும் வலம் வரு கிறார்கள்.

    குறிப்பாக கிராம புறங்களில் உள்ள சாலைகளில் இப்படி அதிக ஒலி எழுப்பியபடி செல்லும் இருச்சக்கர வாகனங்களால் பொதுமக்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடிக்கிறார்கள். மேலும் முதியோர் மற்றும் பெண்கள், குழந்தைகள் இச்சத்தத்தை கேட்டு மிரண்டு ஓடும் சம்பவங்களும் நடக்கிறது. இப்படி அதிக ஒலியுடன் வலம் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

    இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர், குமரி மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பி செல்லும் வாகனங்களை அனைத்தையும் பறிமுதல் செய்து கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்ற போலீசார் அதில் பொருத்தப்பட்ட கருவிகளை அகற்றியதோடு, அதனை ஓட்டி வந்தோருக்கு அபராதமும் விதித்தனர்.

    குளச்சல் பகுதியில் நேற்று சுமார் 12-க்கும் மேற்பட்ட வாகனங்கள் போலீ சாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது போல நாகர்கோ வில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் வாகனங்களை கண்காணிக்கும் பணி நடந்து வரு கிறது.

    ஆனால் கொல் லங்கோடு பகுதி யில் இன்னும் அதிக ஒலி எழுப் பியபடி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வில்லை. இதனால் இங்கு சாலையில் நடந்து செல்லும் முதியோரும், பெண்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். சில இடங்களில் ஆடு, மாடு போன்ற விலங்குகள் மிரண்டு ஓடி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்தது.

    எனவே இந்த பகுதியில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களால் பேராபத்து ஏற்படும் முன்பு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம்.
    • ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும். இதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த 1-ந்தேதி முதல் மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து செல்கிறது.

    இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் குவிந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மணல்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.

    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    அம்மாப்பேட்டை:

    கோபி மின்பகிர்மான வட்டம் பவானி கோட்டம் கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை,சித்தார்,சின்னப்பள்ள ம்,ஆனந்தம்பாளையம் குட்டமுனியப்பன்கோயில்,கேசரிமகலம்,காடப்பநல்லூர், கல்பாவி,பூதப்பாடி,எஸ்.பி.கவுண்டனூர்,குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    ×