search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலும்புகள்"

    • விசாரணை முடிந்த பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சோதனையில் ஆண்மைக்கான மூலிகை மாத்திரைகள், மூலிகைகளால் செய்யப்பட்ட பொடிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (வயது 47).

    இவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு சித்த மருத்துவம் பார்த்து வந்தார். போலி மருத்துவரான இவர் பலருக்கு போதை மருந்து கொடுத்து அவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். சம்பவத்தன்று இவரிடம் வைத்தியம் பார்க்க வந்த அதே பகுதியை சேர்ந்த டிரைவர் அசோக்ராஜ் (27) என்பவருக்கு ஆண்மை வீரியத்திற்கான மருந்து கொடுத்து அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்.

    அப்போது மருந்தின் வீரியம் அதிகரித்து அசோக்ராஜ் மயங்கி விழுந்தார். ஆனால் அசோக்ராஜன் இறந்து விட்டதாக நினைத்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் புதைத்துள்ளார்.

    இதற்கிடையே அசோக்ராஜ் வீட்டுக்கு திரும்பாதது குறித்து அவரது பாட்டி பத்மினி சோழபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு அசோக்ராஜை தேடினர். அதில் அசோக்ராஜ் போலி சித்த வைத்தியர் கேசவமூர்த்தி வீட்டுக்கு சென்றதுதம் அதன் பின் திரும்பி வராததும் பதிவாகியிருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கேசவமூர்த்தியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரித்ததில், அசோக்ராஜ்க்கு வீரியமிக்க மருந்து கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அவரை கொலை செய்ததை ஓப்புக்கொண்டார். மேலும் உடலை வெட்டி நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை மசாலா சேர்த்து சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கேசவமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டையும் தோண்டி பார்த்தபோது அசோக்ராஜன் உடல் பாகங்களில் சில மட்டும் கிடைத்தது. அதனை மீட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மனித தாடை எலும்பு கண்டெடுக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அனஸ் என்பவர் மாயமாகி இதுவரை வீடு திரும்பவில்லை.

    எனவே அவரது எலும்பு தாடையாக இருக்கலாமோ என போலீசார் சந்தேகித்தனர். அவரையும் இதுபோன்று போதை மருந்து கொடுத்து கொன்று புதைத்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கைப்பற்றப்பட்ட மனித தாடை எலும்பு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு டி.என்.ஏ. உள்ளிட்ட சோதனை நடந்து வருகிறது. அதன் அறிக்கை வந்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.

    இந்நிலையில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் மற்றும் போலீசார், வருவாய்துறை, தயடவியல் நிபுணர்கள் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கேசவமூர்த்தியின் வீட்டின் பின்புறத்தில் நிலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. அப்போது 3 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்ட தோண்ட சிறிய அளவிலும், நொறுங்கிய நிலையிலும் 25-க்கும் மேற்பட்ட எலும்பு துண்டுகள் தென்ப்பட்டன. அவைகளை பெட்டிகளில் சேகரித்து சோதனைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த எலும்பு துண்டுகள் மனித எலும்புகளா ? அப்படி இருந்தால் அவர் யாரையெல்லாம் கொலை செய்து புதைத்திருந்தார் ? அதில் மாயமான அனஸ் உடலின் எலும்புகள் இருந்தனவா ? அல்லது வேறு ஏதேனும் எலும்புகளா ? என்பது குறித்த முழு விவரமும் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும்.

    மேலும் வீட்டில் நடந்த சோதனையில் ஆண்மைக்கான மூலிகை மாத்திரைகள், மூலிகைகளால் செய்யப்பட்ட பொடிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இது தவிர கைப்பற்றபட்ட டைரியில் பெயர்களுடன் செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்களையும் போலீசார் தொடர்பு கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிந்த பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி, தன்னை நாடி வந்தவர்களில் எத்தனை பேரை மூலிகை மருந்து கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அவர்களை கொன்று புதைத்த விவரமும் விசாரணை, பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும்.

    தொடர்ந்து கேசவமூர்த்தி வீட்டை சுற்றி இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு
    • தினமும் யானையை டாக்டர் குழுவினர் கண் காணித்து வருகிறார்கள்.

    கேரளா எல்லை பகுதி களிலும், தேனி மாவட்டத்திலும் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறை யினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வன சரக்கத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது. காட்டுக்குள் விடப்பட்ட அரிசி கொம் பன் யானை குடியிருப்பு பகுதியில் வரக்கூடும் என்பதால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அரிசி கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர்கருவி பொருத்தப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. அப்பர் கோதையாறு பகுதியில் அரிசி கொம்பன் யானைக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைத்து வருவதால் அந்த பகுதியிலேயே யானை சுற்றி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகளுடன் சுற்றித்திரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இது யானை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அரிசி கொம்பன் யானை மூணாறு பகுதியில் பிறந்தது. அதன் பிறகு தேனி பகுதியில் இருந்து தற்போது அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ளது.

    அப்பர் கோதையாறு பகுதியில் யானைக்கு தேவையான தண்ணீர், உணவு வகைகள் கிடைக் கிறது. தினமும் யானையை டாக்டர் குழுவினர் கண் காணித்து வருகிறார்கள். தினமும் யானை சாப்பிடும் உணவு போன்றவையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானையின் சாணத்தையும் டாக்டர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். யானை ஏற்கனவே இருந்த சீதோ சண நிலையில் இருந்து தற்பொழுது புதிய சீதோ சண நிலைக்கு வந்துள்ளது காரணமாக அதன் உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.

    அதை டாக்டர் குழு வினர் கண்காணித்து அதற் கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள். கடந்த 14 நாட்களாக 5 கிலோ மீட்டர் சுற்றள விலேயே யானை சுற்றி வரு கிறது. அரிசி கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்கு வரும் என மக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்பொழுது கடல் மட்டத் திலிருந்து 1350 மீட்டர் மேல் உள்ள கோதை ஆற்றின் பிறப்பிடம் அருகே வனப் பகுதியில் தான் அரிசி கொம்பன் யானை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யானை இறந்து 90 முதல் 120 நாட்களுக்கு மேலாக இருக்கலாம்.
    • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனசரகத்திற்குட்பட்ட நரசீபுரம் பிரிவு, ரத்தப் பாறை வனப்பகுதியில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு இறந்த ஆண் யானையின் மண்டையோடு, 2 தந்தங்கள் மற்றும் எலும்புகள் கிடந்தது. இதை பார்த்த வன ஊழியர்கள் சம்பவம் குறித்து வனத்துைற உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து இன்று காலை 10 மணியளவில் கோவை வனக்கோட்ட வன விரிவாக்க அலுவலர் தலைமையில் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில் ஆனைமலை புலிகள் காப்பக வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் இறந்த ஆண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

    பிரேத பரிசோதனையில் இறந்தது ஆண் காட்டு யானை என்பதும், 5 முதல் 6 வயது வரை இருக்கலாம். மேலும் இந்த யானை இறந்து 90 முதல் 120 நாட்களுக்கு மேலாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்செந்தூர் சாலை விரிவாக்கப்பணிக்காக கொங்கராயக்குறிச்சி கிராமம் வழியாக சாலை அமைக்க முதற்கட்ட வேலைகள் நடந்து வருகிறது.
    • சாலை பணிக்காக அப்பகுதியில் உள்ள வாய்க்காலின் நீரோட்டத்தை திருப்பி விடுவதற்காக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே பொருநையின் கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். தன் பெயரிலே ஆதியை தாங்கி நிற்கும் இவ்வூருக்கு அடையாளம் கொடுத்தவர் தொல்லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா.

    கடந்த 1899-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்திய இவருக்கு பல அரிய தொல்பொருட்கள் கிடைத்தது. இதனை முறையான ஆய்வுக்கு உட்படுத்தி ஆதிச்சநல்லூரின் தொன்மையை ஆய்வு அறிக்கையாக வெளியிட்டார். மேலும், பொருநையின் கரையில் அமைந்துள்ள பல்வேறு ஊர்களில் சிறிய ஆய்வுகளை நடத்தி 37 தொல்லியல் களங்களையும் கண்டறிந்தார்.

    இவற்றில் ஒன்றுதான் பொருநையின் வடகரையில் அமைந்துள்ள கொங்கராயக்குறிச்சி. இதனை உறுதிப்படுத்தும் விதமாக முதுகோனூர் என்ற பழம்பெயர் கொண்ட இவ்வூரின் காடு, திரடு போன்ற இடங்களில் தொல் பொருட்கள் கிடைத்து வருகிறது.

    எனவே, தாழிக்காட்டில் புதைந்த மனிதர்கள் வாழ்ந்த இடமாக இவ்வூர் இருந்திருக்க வேண்டும் என்ற அலெக்சாண்டர் ரியாவின் கருத்தை முன்னிறுத்தி கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது திருச்செந்தூர் சாலை விரிவாக்கப்பணிக்காக கொங்கராயக்குறிச்சி கிராமம் வழியாக சாலை அமைக்க முதற்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. இதனால் இவ்வூரில் உள்ள திரடுகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த திரடானது இவ்வூரின் கீழத்தெருவில் அமைந்துள்ளது. சுமார் 50 அடி உயரம் கொண்ட இந்த திரட்டில் பழமையான திருவாளிப் பெருமாள் மற்றும் சுயம்பு பத்திரகாளி அம்மன் கோவில்கள் உள்ளது. ஒரு காலத்தில் இங்குதான் குடியிருப்புகளை அமைத்து மக்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சாலை பணிக்காக அப்பகுதியில் உள்ள வாய்க்காலின் நீரோட்டத்தை திருப்பி விடுவதற்காக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் புதைந்திருந்த தொல்பொருட்கள் சிதைவடைந்த நிலையில் அந்த இடம் முழுக்க பரவி காணப்படுகிறது. மேலும், குவியல் குவியலாக எலும்புகளும் உள்ளது. இது மனிதனின் கால், முதுகு, முட்டெலும்பு போன்று உள்ளதால், சாலை அமைக்கும் முன்பு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து இப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×