search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேதம்"

    • காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.
    • வீட்டில் இருந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை சிவன்தெற்கு வீதியை சேர்ந்தவர் அருள்வாசகம். இவர் குத்தாலம் பேரூராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அருள் வாசகம் பணிக்கு சென்ற நிலையில், மனைவி மங்கையர்கரசியும் வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடைக்கு சென்று விட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அருள் வாசகம் வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ மளமள வென பரவியது.

    இது குறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இருந்தும் வீட்டிலிருந்த பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் நில பத்திரம், ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.

    மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டி ருக்கலாம் என்று கூறப்படு கிறது. இது குறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதி
    • சுசீந்திரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நல்லூர் பகுதியில் ரோட்டில் உள்ள பாலம் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அந்த பாலத்தை மாற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பாலப்பணிகள் தொடங்கப் பட்டதையடுத்து சுசீந்தி ரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு சென்ற பஸ்கள் அனைத்தும் வழுக்கம்பாறை, மயிலாடி வழியாக மருங்கூருக்கு இயக்கப்பட்டது. இந்த சாலை வழியாக பொது மக்கள் இருசக்கர வாக னங்களில் மற்றும் ஆட்டோக் களை செல்லும் வகையில் தற்காலிக பாலம் அமைக் கப்பட்டு இருந்தது. தற்காலிக பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் சென்று வந்தனர்.

    பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கும் இந்த பாலம் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக தற்காலிகமாக அமைக்கப் பட்ட பாலம் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மருங்கூரிலிருந்து சுசீந்திரத்திற்கு பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். மருங்கூரிலிருந்து மயிலாடி, வழக்கம்பாறை வழியாக சுசீந்திரத்திற்கு வந்தனர். தற்காலிக பாலம் சேதமடைந் துள்ளதையடுத்து அந்த பகுதியில் முற்றிலுமாக போக்குவரத்து தடை பட்டுள்ளது. பொதுமக்கள் நலன்கருதி தற்பொழுது நடைபெற்று வரும் பாலப்பணியை துரிதமாக முடித்து பஸ் போக்கு வரத்தை தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் சேதம் அடைந்த தற்காலிக பாலத்தை உடனடி யாக சீரமைத்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறி னார்கள். இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகா ரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் கூரை வீட்டில் வசித்து வருபவர் கருப்பையன் (வயது 65). கூலி தொழிலாளி. இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், முனீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில், அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அன்று இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. மின்னல் தாக்கியதில் அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. மேலும், வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனமும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாதுரை எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அடிப்படை உபகரணங்கள் வழங்கினார்.

    • பாபநாசத்தில் இருந்து சென்ற லாரி சாலையில் உள்ள மின் கம்பத்தில் மோதியது.
    • சாலையில் சாய்ந்த மின்கம்பத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் ரயில் நிலையம் அருகில் பாபநாசத்தில் இருந்து வேகமாக சென்ற லாரி சாலையில் உள்ள மின் கம்பத்தில் மோதியது.

    இதில் அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் முறிந்து சாய்ந்ததில் சேதம் ஏற்பட்டது.

    சாலையில் சாய்ந்த மின்கம்பத்தால் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாபநாசம் மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் கருணாகரன், இளமின் பொறியாளர் ஷாஜாதி, மின்பாதை ஆக்க முகவர் ராஜகோபால் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து, சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தி பின்பு போக்குவரத்து சீரமைத்தனர்.

    பின்பு மின்வாரிய ஊழியர்கள் தடைப்பட்ட மின்சாரத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மின் இணைப்பு தரப்பட்டது.

    இது குறித்து பாபநா சம்மின்வாரிய இளமின் பொறியாளர் ஷாஜாதி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் கலை வாணி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை வீட்டின் பின்புறமிருந்து கரும்புகை வந்துள்ளது.
    • குளிர்சாதனப்பெட்டி முற்றிலும் எரிந்து சேதமானது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி புதுநகரை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 59). வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோகராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு, சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு பணிக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை வீட்டின் பின்புறமிருந்து கரும்புகை வந்துள்ளது. இது தொடர்பாக சீனுவாசனிடம் தகவல் கொடுத்துவிட்டு, பக்கத்து வீட்டுக்காரர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சமையலறையில் இருந்த குளிர்சாதனப்பெட்டி எரிந்து கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதில் குளிர்சாதனப்பெட்டி முற்றிலும் எரிந்து சேதமானது. மின்அழுத்தம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூரை வீட்டில் உள்ள மின்மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
    • ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள திம்மகுடி கிராமத்தில் அருள்ஜோதி தெருவில் வசிப்பவர் வந்தியத்தேவன் (வயது55). லாரி டிரைவர்.இவரது கூரை வீட்டில் உள்ள மின்மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து நாசமடைந்தது.

    இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    • காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன.
    • நெல் விதைத்த நாற்றங்காலை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளன.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, திருவையாத்துக்குடி பகுதியில் தற்போது சம்பா நடவுக்காக நாற்றாங்கால் அமைத்து விதை தெளிப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன இப்பகுதி விவசாயி அரவிந்த் மற்றும் சில விவசாயிகள் பல ஏக்கர் நெல் நடவுக்காக பாய் நாற்றங்கால் அமைத்து நெல் விதைத்திருந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு காட்டு பன்றிகள் கூட்டமாக வந்து நெல் விதைத்த நாற்றங்காலை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளன காலையில் விவசாயிகள் வயலுக்கு சென்று நாற்றங்காலை பார்த்த போது காட்டு பன்றிகளால் நாற்றாங்கால் சேதம் படுத்தப்பட்டுள்ளது.

    கண்டு அதிர்ச்சி அடைந்தனர் விளைநிலங்களை சேதப்படுததும் காட்டு பன்றிகளை உடனடியாக பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தண்ணீர் வாய்க்காலில் புகுந்து வயல்களில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
    • நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சி தென்கரை வழியாக தென்கரை பாசன வாய்க்கால் வடக்கு புத்தாறு ஆற்றில் இருந்து பிரிந்து செல்கிறது.இந்த வாய்க்காலின் மூலம் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.

    இந்த நிலையில் தென்கரை பாசன வாய்க்காலில் தலைப்பில் உள்ள மதகில் உள்ள கதவனை சேதமடைந்து உள்ளது.இதனால் விவசாயத்திற்கு தேவையான நேரத்தில் தண்ணீரை திறந்து தேவையற்ற நேரத்தில் அடைத்து வைக்க முடியாத நிலை உள்ளது.மேலும் மழை வெள்ள காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களிலும் தண்ணீர் வாய்க்காலில் புகுந்து வயல்களில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.

    இதனால் விவசாய நிலங்கள் பாதிப்பு க்குள்ளாகும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த வாய்க்கால் கதவணையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமையான இன்று மனுக்கள் அளிப்பதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் குவிந்து இருந்தனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக 3-வது தளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் பொருட்கள் பாதுகாப்பு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தை பார்த்தவுடன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்பட்டு, அலுவலக தரைத்தளம் உள்ளிட்ட மூன்று தளங்களில் இருந்த அனைவரும் பாதுகாப்பு கருதி அலுவலகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

    விரைந்து வந்து நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

    தீ விபத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் அலுவலக சேமிப்பு கிடங்கு அறையில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த சுமார் 5000 செட்டாப் பாக்ஸ் கருவிகள் பெரும்பாலானவை எரிந்து நாசமானது.

    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அலுவலகத்தை பூட்டிவிட்டு ஓடிய அதிகாரிகளும், மனு அளிக்கவந்த பொதுமக்களும் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. இது குறித்து ேபாலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • திருச்சியில் வக்கீல் அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • கோட்டை போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் அன்புச்செல்வன் (47). பிரபல வழக்கறிஞரான இவர் திருச்சி பெரியகடை வீதியில் அலுவலகம் வைத்துள்ளார். அங்கு வந்த ஐந்து பேர் சிசிடிவி கேமரா மற்றும் பொருள்களை சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வக்கீல் அன்புச்செல்வன் கொடுத்த புகாரின் பெயரில் கோட்டை போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்கம்பிகள் சீரமைக்கபடாமல் மிகவும் தாழ்வான நிலையில் செல்கின்றன.
    • போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி,மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இந்த மழையில் திட்டச்சேரி, திருமருகல்,போலகம்,இடையாத்தங்குடி,ஏனங்குடி,கருப்பூர்,வடகரை,திருப்புகலூர், கணபதிபுரம்,நெய்குப்பை, மருங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் அருந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதமடைந்தது.

    இதனால் ஒன்றிய பகுதிகளில் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சேதம் அடைந்த மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    ஆனால் ஒன்றிய பகுதிகளில் பல இடங்களில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் சீரமைக்க ப்படாமலும், மின்கம்பிகள் முழுவதுமாக சீரமைக்காமல் மிகவும் தாழ்வாகவும் உள்ளன.

    இதனால் காற்று சற்று வேகமாக வீசும்போது மின்கம்பிகள் அறுந்து கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நேரிடுகிறது.

    இதனால் மனிதர்கள் உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடி க்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்க ளை சீரமைப்பதுடன், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயரத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாலிகண்டபுரத்தில் பா.ஜ.க. கொடிக்கம்ப கல்வெட்டு சேதமடைந்துள்ளது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா கொடி மற்றும் கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து மஙகமேடு அருகேயள்ள வாலிகண்டபுரத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பா.ஜனதா கட்சியின் 30 அடி உயர கொடிக்கம்பம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை மர்ம ஆசாமிகள் கழட்டி சென்றதுடன், டிஜிட்டல் பேனர் மற்றும் கல்வெட்டுகளையும் சேதப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா கொடி மற்றும் கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


    ×