search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன்"

    • தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • இந்த கோவிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    சர்வதேச சுற்றுலா தலமாகவும், கோடை வாசஸ்தலமாகவும் விளங்கும் கொடைக்கானலில், ஆனந்தகிரி முதல் தெருவில் பிரசித்திபெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கொடைக்கானல் மலைப்பகுதி பக்தர்கள் மட்டுமின்றி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவோரும் அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். வரங்களை அள்ளிதரும் கொடை வள்ளலாக கொடைக்கானல் மாரியம்மன் இருக்கிறார்.

    இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதுதவிர தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சுமார் 15 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவில் கொடைக்கானல் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள மலைக்கிராம மக்கள், தேனி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பங்கேற்பார்கள். திருவிழாவின்போது அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சிகள், கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த திருவிழாவில் முதல் நாளில் போலீசார் சார்பில் முதல் மண்டகப்படி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாதி, மத பேதமின்றி ஒன்றாக கொண்டாடும் திருவிழாவாகவும் இது உள்ளது.

    இதற்கிடையே கோவிலில் கடந்த 1978-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 1996-ம் ஆண்டும், மீண்டும் கடந்த 2010-ம் ஆண்டும் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆகமவிதிப்படி கொடைக்கானல் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

    இந்தநிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    • 6-ந்தேதி கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    கொடைக்கானல் ஆனந்தகிரி உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்தநிலையில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி கடந்த 6-ந்தேதி கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அப்போது கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மறுநாள் யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இந்தநிலையில் இன்று காலை 10.30 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் பல்வேறு பரிவார சாமிகளுக்கு பூஜைகள் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ம ற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

    • பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
    • இன்று முதல் தினமும் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே 100 ஆண்டு பழமையான பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 3-ந்தேதி முதற்கால யாக பூஜையுடன் தொடங்கியது.

    கோவிலில் புதிதாக தட்சணா மூர்த்தி, வாராகி அம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று காலை 6.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாகபூஜை மற்றும் திரவ்ய யாகம் நடந்தது.

    9 மணிக்கு மகா தீபாராதனைக்கு பின் கலச புறப்பாடு நடந்தது. பின்னர் காலை 9.45 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் சங்கர நராயணன், ரவி ஆகியோர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் 'ஓம் சக்தி... பராசக்தி' என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    கோவிலை சுற்றிலும் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பரிவாரம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் பிளேக் மாரியம்மனுக்கு மகாஅபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தச தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தென்னம்பாளையம் மார்க்கெட் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை தென்னம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் விழாக்கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று (வியாழக்கிழமை) முதல் தினமும் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    • இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
    • கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் முதற்கட்ட திருப்பணியாக நேற்று மாலை 4 மணியளவில் முதற்கால யாக பூஜைகள் தொடங்கியது. இதில் கணபதி வழிபாடு, யாகம் மற்றும் கொடி மரத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (புதன் கிழமை) காலை 9 மணியளவில் 2-ம் கால பூஜைகள் நடக்கிறது. இதில் கோவில் கொடி மரத்துக்கு பாலாயம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செய்துள்ளனர்.

    • நாளை ரக்‌ஷா பந்தனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெறுகிறது.
    • ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    ஓட்டப்பிடாரம் வட்டம் ஒட்டநத்தம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட விநாயகர், மாரியம்மன், காளியம்மன், துர்க்கையம்மன், பேச்சியம்மன், கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை உள்ளிட்டவையும், மாலை 5 மணிக்கு புனிதநீர் எடுத்து வருதல், விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி உள்ளிட்டவைகளும் நடக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) யாகசாலை பூஜை, பரிவார மூா்த்திகளுக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் தொடக்கம், கன்யாபூஜை, ரக்ஷா பந்தனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், கடம் எழுந்தருளல் நடக்கிறது. 7 மணி முதல் 8 மணிக்குள் விநாயகர், மாரியம்மன், காளியம்மன், துர்க்கையம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும், 10 மணி முதல் 11 மணிக்குள் பேச்சியம்மன், கருப்பசாமி, பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவில் அம்மன் சப்பரத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.

    • அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
    • பல்வேறு வகைகளில் தயாரான உணவுகள், பழங்கள் படையலிடப்பட்டது.

    கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கென்று தனி சன்னதி கிடையாது.ஆண்டு முழுவதும் அகல் விளக்கு தீபமாய் காட்சி தரும் அம்மனுக்கு வைகாசி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு விழா கடந்த மே மாதம் 26-ந் தேதி இரவு சமயபுரத்தில் இருந்து அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.

    தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக பெரிய திருவிழா நடந்தது. இதையொட்டி நாச்சியார் கோவில் முக்கிய வீதிகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டமாக நிரம்பி வழிந்தது. போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து தொட்டில் கட்டியும், பாடை காவடி எடுத்தும், அழகு காவடி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவின் இறுதி நிகழ்ச்சியாக விடையாற்றி விழா நடைபெற்றது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. பல்வேறு வகைகளில் தயாரான உணவுகள், பழங்கள் ஆகியவற்றை படையலிடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன் அறங்காவலர்கள் டாக்டர்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு ஆகியோர் செய்திருந்தனர்.

    • இரவு வாணவேடிக்கையும், அன்னதானமும் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் சின்ன மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் சின்ன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உற்சவ விழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சின்ன மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு மின் அலங்கார தேரில் அம்மன் உலா வந்தார்.

    விழாவில் நேற்று மேள வாத்தியங்கள் முழங்க 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி, பறவை காவடி எடுத்து மற்றும் பல்வேறு வேடங்கள் அணிந்தும் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் டிப்போ காளியம்மன் கோவிலில் தொடங்கி ஏரிச்சாலை, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்தது.

    இதனை தொடர்ந்து வண்ண வண்ண பூக்களால் சிறப்பு அலங்காரத்தில் சின்ன மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் இரவு வாணவேடிக்கையும், அன்னதானமும் நடைபெற்றது. இதில் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தினமும் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
    • விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது.

    புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாடிமேட்டூர் கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் சிகரநிகழ்ச்சியாக கடந்த 8-ந்தேதி காலை தேரோட்டம் நடைபெற்றது.

    மறுநாள் இரவு முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவில் ஆலம்பாடி, தங்கசாலை, செம்பியக்குடி, குலமாணிக்கம், ஆலம்பாக்கம், புதூர்பாளையம், வாணதிரையான்பாளையம், விரகாலூர், திண்ணகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் அவரவர் வீடுகளுக்கு முன்பு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு, விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மகாமாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சீர்காழி தென்பாதி மெயின் ரோட்டில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் இரவு அம்மன் கோவிலில் உட்புற வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து தீமிதி திருவிழாவை முன்னிட்டு உப்பனாற்று கரையிலிருந்து பால்குடம், பால்காவடி, அலகு காவடி, பறவை காவடி புறப்பாடு நடந்தது. முன்னதாக இந்த ஊர்வலம் மேல தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையோடு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் இரவு, கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு அம்மன் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கரகம், காவடி, பால்குடம் தீமிதி திருவிழா கடந்த 2-ம் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனைகள், செல்லியம்மன் கும்ப பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம், தீமிதி திருவிழா நடந்தது.

    முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் மறையூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வாண்வேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க கரகம், கூண்டு காவடி, அலகு காவடி, பால்குடம் எடுத்து கோவிலை வந்தடைந்தனர்.பின்னர் கோவிலின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மகாமாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மறையூர் கிராமவாசிகள், குலதெய்வத்தார்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இரவு அம்பாள் வீதி உலா காட்சியும் நடைபெற்றது.

    தமிழகத்தின் தன்னிகரில்லா தெய்வமாகவும், பழமையான கோவிலாகவும் அமையப் பெற்ற பெருமை கொண்ட இத்திருத்தலத்தில் உலக நாயகியாம் அன்னை சக்தி ஈசான மூலையை நோக்கி அமர்ந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள்.
    பழமையும், புகழும், வரலாற்று சிறப்பும் வணிகச் சிறப்பும், ஆன்மிக பெருமையும் கொண்ட நகரம் கரூர். இத்தகைய சீரும், சிறப்பும் பெற்ற கரூரின் முக்கிய திருவிழா கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா. ஏழை, பணக்காரர் பேதமின்றி, சாதி, சமய வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பி அன்போடு வணங்கப்படும் தெய்வமே கரூர் மாரியம்மன்.

    இக்கோவிலின் வரலாறு சுவாரஸ்யமானதாகும். கோவிலின் பரம்பரை அறங்காவலரின் கனவில் மாரியம்மன் சிறுமி வடிவில் தோன்றி, எனக்கு கரூரில் ஒரு குடிசை இல்லையே என்று ஏக்கத்தை வெளிப்படுத்தினாளாம். ஒன்றும் புரியாத அவர் விளக்கம் கேட்க குழந்தை மாரியம்மன் எதிர்கரையில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலுக்கு சென்று பார் புரியும் என்று சொல்லி மறைந்து விட்டாளாம்.

    அப்பெரியவர் அதன்படியே தாந்தோன்றி மலை கிராமத்திற்கு சென்றார். அங்கு ஊரே திருவிழா கோலம் பூண்டு கோலாகலமாக இருந்தது. விஷயம் புரிந்து கொண்ட பெரியவர் உடனே ஆதிமாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து கோவிலை கட்டினார். அது முதல் அவரது குடும்பத்தினர் கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து கோவிலை பராமரித்து வருகின்றனர்.

    தமிழகத்தின் தன்னிகரில்லா தெய்வமாகவும், பழமையான கோவிலாகவும் அமையப் பெற்ற பெருமை கொண்ட இத்திருத்தலத்தில் உலக நாயகியாம் அன்னை சக்தி ஈசான மூலையை நோக்கி அமர்ந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள். மாரியம்மன் விழாவின் போது வேப்ப மரத்தின் மூன்று கிளைகளை உடைய பகுதியை வெட்டி எடுத்து வந்து மஞ்சள் பூசி வேப்பிலையால் அலங்கரித்து பூஜை ஆராதனையுடன் அமராவதி ஆற்றில் இருந்து கம்பத்தை எடுத்து வருவார்கள்.

    ஆலயத்தில் பலி பீடத்தின் அருகில் நடப்படும் கம்பத்தை சுவாமியாக பக்தர்கள் கருதி வணங்குகிறார்கள். கம்பம் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கும் நாட்களில் அன்றாடம் மாலை சாயரட்ச பூஜை நடக்கும். அப்போது கம்பத்துடன் கோவிலின் உள்ளே அம்மனுடன் வைக்கப்பட்டுள்ள சக்தியையும் வைத்து பூஜை செய்வார்கள். கோவிலில் நடப்பட்ட கம்பத்திற்கு பக்தர்கள் ஈர ஆடையுடன் மஞ்சள் நீரை வேப்பிலையுடன் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள். கம்பம் ஆற்றுக்கு செல்லும் நாள் வரை பக்தர்கள் தினமும் மஞ்சள் நீர் ஊற்றி வணங்குவார்கள்.
    சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 36 அடி உயர தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 28-ந் தேதி வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
    கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்-விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்திருவிழா, கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தினசரி காலை, இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் வீதி உலா மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று முன்தினம் இரவில் மாரியம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சூலக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.

    இதையடுத்து நாளை மறுநாள்(புதன்கிழமை) காலை 6 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26, 27, 28-ந் தேதி மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26-ந் தேதி தேரோட்டம் என்பதால், கோவில் முன்பு தகர செட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட 36 அடி உயர தேர் வெளியே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து வர்ணம் பூசும் பணி உள்பட தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 15 அடி உயரம் கொண்ட விநாயகர் தேரையும் அலங்கரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 29-ந் தேதி மதியம் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் விநாயகர் கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான கருணாநிதி, சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    மகா மாரியம்மன் என்று மூலவர் அழைக்கப்பட்ட போதிலும் ஏழைகளின் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கும் அம்மன் கருணையின் வடிவானவளாக இருந்து காட்சி தருகிறார்.
    கருவூராக இருந்ததே காலப்போக்கில் கரூராக மருவியது. தமிழகத்தின் தற்போதைய தொழில் நகரங்களில் ஒன்றாக திகழும் கரூர் ஆன்மீகத்திலும் தழைத்தோங்கி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனை இன்றளவும் தனது பேரருளால் இவ்வுலகிற்கு நிரூபித்து அருள் பாலித்து வருகிறாள் கரூர் மாரியம்மன்.

    கரூர் நகரின் மையப்பகுதியில் கோவில் கொண்டுள்ளார் மாரியம்மன். மகா மாரியம்மன் என்று மூலவர் அழைக்கப்பட்ட போதிலும் ஏழைகளின் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கும் அம்மன் கருணையின் வடிவானவளாக இருந்து காட்சி தருகிறார்.

    தல சிறப்பு

    அருள்மிகு மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலித்து வருகிறாள். கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கோவிலில் பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களால் தற்சமயம் உள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற் போல உள்ள பெரியதொரு பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.

    இக்கோவிலில் விசேஷ அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது.    

    தல பெருமை    

    மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில், மறைவது பூமித்தாயின் வயிற் றில். எப்படித் தோன்றுகி றோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில் இந்த ஆலயத்தில் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.

    மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவத்தின் போது வேப்ப மரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் சொருகப்பட்டு, ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலி பீடத்தின் அருகில் கம்பம் நடப்படும். இதை சுவாமியாகக் கருதுகிறார்கள். இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.    
    வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.
    ×