search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surrender"

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சண்முகம் என்பவரின் உடல், மறுபிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். அவர்களில் 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்ப‌ட்டது. கோர்ட்டு உத்தரவின்பேரில் அந்த உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே, சுட்டு கொல்லப்பட்டவர்களின் உடலை பொதுமக்கள் தரப்பிலான தனியார் மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதனை வீடியோ பதிவுசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரது உடல்களை தடயவியல் நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸ் அல்லது ஜிப்மர், திருவனந்தபுரம் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அடங்கிய குழு முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த உடல்களை அவர்களின் உறவினர்கள் கேட்கும் பட்சத்தில் ஒப்படைக்கலாம். பிரேத பரிசோதனையின் போது குண்டடிபட்ட இடங்களை கண்டிப்பாக புகைப்படம், வீடியோ மற்றும் எக்ஸ்ரே எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 7 பேர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், திருவனந்தபுரம் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. 

    இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் பலியான சண்முகம் என்பவரது உடலை மருத்துவர்கள் அடங்கிய குழு இன்று மறு பிரேத பரிசோதனை செய்தது. மறு பிரேத பரிசோதனை முடிந்ததும், சண்முகத்தின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டது. 

    பலியானவர்களில் மற்ற இருவர் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும், துப்பாக்கிசூடு நடத்திய போலீசாரை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #ThoothukudiShooting
    இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மதுரை கோர்ட்டில் 5 பேர் சரணடைந்தனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே ஆவரங்காட்டில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

    இதையடுத்து அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் கொலை தொடர்பாக பழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய சுமன், அருண்குமார், அக்கினி, ராஜேஷ், அஜய் தேவன் ஆகிய 5 பேர் இன்று மதுரை மாவட்ட ஜே.எம்.(எண்.4) கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து நீதிபதி கவுதமன், 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். #tamilnews
    சித்தூர் அருகே இரட்டை கொலை வழக்கில் சென்னையை சேர்ந்த 5 பேர் சித்தூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
    சித்தூர்:

    கடந்த 10-ந் தேதி சித்தூர் குடிபாலா, நரஹரிபேட்டை செக்போஸ்ட் அருகே அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

    இது குறித்து, குடிபாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அவர்களில் ஒருவர் சென்னை கே.கே.நகரை சேர்ந்த அசோக்குமார் என்றும், மற்றொருவர் குன்றத்தூரை சேர்ந்த கோபி என தெரிந்தது.

    இது குறித்து, 3 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கசித்தூர் போலீஸ் நிலையத்தில் 5 பேர் சரண் அடைந்தனர்.

    விசாரணையில், அவர்கள் சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரமேஷ் (எ) குட்டி (வயது 35), தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக் (23), குன்றத்தூரை சேர்ந்த குழந்தைவேல் (23), சிவா (26), நந்தம்பாக்கம் சுமேஷ் (32) என்பது தெரியவந்தது.

    சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் சீசிங் ராஜா, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர். இவருக்கும் அசோக்குமாருக்கு நட்பு ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சனைக்குரிய நிலம் ஒன்று அசோக்குமாரிடம் விற்பனைக்கு வந்தது. அவர் சீசிங் ராஜாவிற்கு தெரிவித்து, இருவரும் சேர்ந்து ரூ.3 கோடிக்கு அந்த நிலத்தை வாங்கி உள்ளனர். பின்னர், அந்த நிலத்தை அசோக்குமார் கடந்த மாதம் ரூ.10 கோடிக்கு வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். சீசிங் ராஜாவுக்கு பங்கு தொகை வழங்காமல் ஏமாற்றி உள்ளார்.

    இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீசிங் ராஜா, அசோக்குமாரை கொலை செய்யதிட்டமிட்டார்.

    கடந்த 9-ந் தேதி அசோக்குமார், சீசிங் ராஜா, அசோக்குமாரின் நண்பர் கோபி உட்பட 7 பேர் ஒரு கொலை வழக்கில் திருவள்ளூர் கோர்ட்டுக்கு சென்றனர். பின்னர், அனைவரும் சேர்ந்து மது குடித்தனர். இரவு 11 மணியளவில் ஆந்திர மாநில எல்லைப்பகுதிக்கு வந்த அவர்கள் அசோக்குமாரிடம் பணம் தருமாறு கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த அசோக்குமாரின் நண்பர் கோபி, சீசிங் ராஜாவிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

    சீசிங் ராஜா மீது சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது, அவர் தான் செய்த குற்றங்களை மறைக்க போலியான ஆட்களை சரணடைய வைத்து தப்பி வருவதும் தெரியவந்தது.

    முக்கிய குற்றவாளியான சீசிங் ராஜாவை கைது செய்ததால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும்.

    இந்த வழக்கை விசாரிப்பதற்காக சென்னை சென்ற ஆந்திரா போலீசாரை தமிழக போலீசார் அலைக்கழித்துள்ளனர்.

    சீசிங் ராஜா குறித்து விசாரித்த போது அதற்கு போலீசார் சரியாக பதில் அளிக்காமல் தட்டி கழித்துள்ளனர். தலைமறைவாக உள்ள சீசிங் ராஜாவை பிடிக்க முயன்ற போது, அவர் சில போலீசாரின் உதவியால் தப்பி செல்வது தெரியவந்தது என சித்தூர் குற்றவியல் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார்.#tamilnews
    ×