search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chittoor"

    • மாலை ஊஞ்சல் சேவை நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    சித்தூர்:

    சித்தூர் குருவப்பநாயுடு தெரு பெத்தவீதியில் உள்ள சுயம்பு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மகாளய அமாவாசையையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.

    நேற்று காலை மூலவர் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, புஷ்பம் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம், சிறப்புப் பூஜைகள், ஆராதனை செய்யப்பட்டது. மாலை ஊஞ்சல் சேவை நடந்தது.

    அதன் பிறகு உற்சவர் அங்காள பரமேஸ்வரியம்மன், லட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மஞ்சள் அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை உற்சவர் அம்மன், காசி விசாலாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    • வள்ளியூர் அருகே உள்ள கண்ணனூர் கிராமம் நம்பி ஆற்றின் கரையில் அய்யப்பனின் அவதாரம் என்று அழைக்கப்படும் சித்தூர் தென்கரை மகா ராசேசுவரர் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள கண்ணனூர் கிராமம் நம்பி ஆற்றின் கரையில் அய்யப்பனின் அவதாரம் என்று அழைக்கப்படும் சித்தூர் தென்கரை மகா ராசேசுவரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் திருவிழா வான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. மகாராசேசு வரர் சுவாமி தேரில் எழுந் தருளினார். பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை தொடர்ந்து வில்வனம்பு தூர், கண்ண நல்லூர், தங்கையம், இளங்குளம் தலைவர்மார் சமுதாயத்தின் குதிரை ஓட்டமும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு கும்பாபி ஷேகம் மற்றும் ஆராதனை களும், இரவு சுவாமி புலி வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது.

    இன்று இரவு சுவாமி ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும், 7-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன், இரவு கொடியிறக்கம் நடைபெறும்.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் கோபாலன், தக்கார் லதா, செயல் அலுவலர் பொன்னி மற்றும் கண்ணநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மகா ராசன்செய்துள்ளனர்.

    வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஸ்குமார், இன்ஸ் பெக்டர் சாகுல் ஹமீது பாதுகாப்பு பணிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

    சித்தூரில் பைக்-டிராக்டர் மோதலில் தமிழக வாலிபர்கள் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டை சேர்ந்தவர்கள் முரளி, திருமலை, விஜேஷ். இவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சொக்கமடுகில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இரவு பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். பள்ளிப்பட்டு சித்தூர் சாலையில் சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மோதியது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்த எஸ்.ஆர்.புரம் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எஸ்.ஆர்.புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    சித்தூர் அருகே பெண் வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருமலை:

    சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவரது மனைவி நாகஜோதி. 2 பேரும் வக்கீலாக பணியாற்றி வந்தனர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நாகஜோதி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    நாகஜோதி நேற்று மாலை மதனப்பள்ளி கோர்ட்டிலிருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கை வழி மறித்த சிலர் நாகஜோதியை கத்தியால் குத்தினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதன பள்ளி போலீசார் நாகஜோதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகஜோதியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சித்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#tamilnews
    சித்தூர் மாவட்டத்தில் ஆண் குழந்தை இல்லாததால் 2-வது திருமணத்துக்கு முயன்ற கணவரை மனைவி வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சிவாஜிகணேசன் (வயது 40), வியாபாரி. இவர், வீட்டுக்கு அருகில் மளிகைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மாதவிராணி (35).

    சாத்விகா (13), பூமிகா (7) என்ற இரு மகள்கள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லாததால், சிவாஜிகணேசன் மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்யப்போவதாக கூறி வந்தார். இதனால் அவர், தனது மனைவி மாதவிராணியை அடித்து, உதைத்துக் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மாதவிராணி வீட்டில் காய்கறிகளை வெட்டும் கத்தியை எடுத்து சிவாஜிகணேசனை வெட்டிக்கொலை செய்தார். தான் கணவரை கொலை செய்த விவரத்தை, செல்போன் மூலமாக ரால்லபூடுகூருவில் உள்ள தன்னுடைய உறவினர்களுக்கு தெரிவித்தார்.

    பின்னர் மாதவிராணி ரால்லபூடுகூரு போலீசில் சரணடைந்தார். அவர், கணவரை கொலை செய்த தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், மாதவிராணியை கைது செய்தனர்.

    ஆண் குழந்தை இல்லாததால் என்னுடைய கணவர் சிவாஜிகணேசன் தினமும் என்னை அடித்து உதைத்து, துன்புறுத்தி வந்தார். என் நடத்தையின் மீதும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் காய்கறிகள் வெட்டும் கத்தியால் கணவரை வெட்டிக்கொலை செய்தேன், என்றார்.

    ஆனால் சிவாஜிகணேசனின் உறவினர்கள், போலீசில் பல்வேறு சந்தேகங்களைத் தெரிவித்துள்ளனர். மாதவிராணி கணவருக்கு தெரியாமல் பல முறை பங்காருபாளையம் பகுதிக்குச் சென்று வந்துள்ளார். அவர், யாரோ சிலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார், எனத் தெரிவித்தனர்.

    இதுபற்றி ரால்லபூடுகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவாஜிகணேசனின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவி, கத்தியால் வெட்டி கணவரை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    சித்தூர் அருகே 12 வயது சிறுமியை 3 மாதங்களாக மிரட்டி கற்பழித்த சிறுவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சித்தூர்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த புங்கனுர் பகத்சிங் நகரை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் அந்த சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

    பின்னர் இது குறித்து தனது நண்பர்களிடத்தில் கூறி அவர்களையும் அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக அந்த சிறுமியை 5 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று சிறுமியை மிரட்டியுள்ளனர். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 5 பேரையும் தேடி சென்றனர். புங்கலூர் பஸ் நிலையம் அருகே இருந்த 2 சிறுவர்களை பிடித்து அடித்து உதைத்தனர்.

    டி.எஸ்.பி. சவுடேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 சிறுவர்களையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அவர்கள் கூறியதின் பேரின் மேலும் 3 சிறுவர்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சித்தூர் அருகே இரட்டை கொலை வழக்கில் சென்னையை சேர்ந்த 5 பேர் சித்தூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
    சித்தூர்:

    கடந்த 10-ந் தேதி சித்தூர் குடிபாலா, நரஹரிபேட்டை செக்போஸ்ட் அருகே அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

    இது குறித்து, குடிபாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அவர்களில் ஒருவர் சென்னை கே.கே.நகரை சேர்ந்த அசோக்குமார் என்றும், மற்றொருவர் குன்றத்தூரை சேர்ந்த கோபி என தெரிந்தது.

    இது குறித்து, 3 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கசித்தூர் போலீஸ் நிலையத்தில் 5 பேர் சரண் அடைந்தனர்.

    விசாரணையில், அவர்கள் சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரமேஷ் (எ) குட்டி (வயது 35), தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக் (23), குன்றத்தூரை சேர்ந்த குழந்தைவேல் (23), சிவா (26), நந்தம்பாக்கம் சுமேஷ் (32) என்பது தெரியவந்தது.

    சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் சீசிங் ராஜா, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர். இவருக்கும் அசோக்குமாருக்கு நட்பு ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சனைக்குரிய நிலம் ஒன்று அசோக்குமாரிடம் விற்பனைக்கு வந்தது. அவர் சீசிங் ராஜாவிற்கு தெரிவித்து, இருவரும் சேர்ந்து ரூ.3 கோடிக்கு அந்த நிலத்தை வாங்கி உள்ளனர். பின்னர், அந்த நிலத்தை அசோக்குமார் கடந்த மாதம் ரூ.10 கோடிக்கு வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். சீசிங் ராஜாவுக்கு பங்கு தொகை வழங்காமல் ஏமாற்றி உள்ளார்.

    இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீசிங் ராஜா, அசோக்குமாரை கொலை செய்யதிட்டமிட்டார்.

    கடந்த 9-ந் தேதி அசோக்குமார், சீசிங் ராஜா, அசோக்குமாரின் நண்பர் கோபி உட்பட 7 பேர் ஒரு கொலை வழக்கில் திருவள்ளூர் கோர்ட்டுக்கு சென்றனர். பின்னர், அனைவரும் சேர்ந்து மது குடித்தனர். இரவு 11 மணியளவில் ஆந்திர மாநில எல்லைப்பகுதிக்கு வந்த அவர்கள் அசோக்குமாரிடம் பணம் தருமாறு கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த அசோக்குமாரின் நண்பர் கோபி, சீசிங் ராஜாவிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

    சீசிங் ராஜா மீது சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது, அவர் தான் செய்த குற்றங்களை மறைக்க போலியான ஆட்களை சரணடைய வைத்து தப்பி வருவதும் தெரியவந்தது.

    முக்கிய குற்றவாளியான சீசிங் ராஜாவை கைது செய்ததால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும்.

    இந்த வழக்கை விசாரிப்பதற்காக சென்னை சென்ற ஆந்திரா போலீசாரை தமிழக போலீசார் அலைக்கழித்துள்ளனர்.

    சீசிங் ராஜா குறித்து விசாரித்த போது அதற்கு போலீசார் சரியாக பதில் அளிக்காமல் தட்டி கழித்துள்ளனர். தலைமறைவாக உள்ள சீசிங் ராஜாவை பிடிக்க முயன்ற போது, அவர் சில போலீசாரின் உதவியால் தப்பி செல்வது தெரியவந்தது என சித்தூர் குற்றவியல் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார்.#tamilnews
    ×