search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sucide"

    • மனமுடைந்த ரதீஷ் தான் தங்கியிருந்த லாட்ஜின் 3-வது மாடிக்கு ஏறி சென்று குதித்து தற்கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.
    • போலீசரும், தீயணைக்கும் படையினரும் மீட்டு கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த 50 பேர் ஒரு பஸ்சில் கன்னியாகுமரிக்கு நேற்று இரவு சுற்றுலா வந்தனர். அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் ரதீஷ் (வயது 30) என்பவர் அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி மது குடிப்பதற்கு அவருக்கு பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த ரதீஷ் தான் தங்கியிருந்த லாட்ஜின் 3-வது மாடிக்கு ஏறி சென்று குதித்து தற்கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். இதைபார்த்த அந்த லாட்ஜில் தங்கி இருந்த அவருடன் வந்த மற்றவர்கள் இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசாரும் தீயணைக்கும் படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3-வது மாடியில் இருந்த அவரை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 3-வது மாடியில் இருந்த அவர் முதல் மாடிக்கு இறங்கி வந்தார். அங்கு இருந்த படியும் அவர் கீழே குதித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். கடைசியாக முதல் மடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் முறிந்தது. உடனே அவரை போலீசரும், தீயணைக்கும் படையினரும் மீட்டு கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி கன்னியாகுமரி போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஜெயஸ்ரீ கடந்த ஒரு ஆண்டாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
    • இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    கோவை:

    கோவை மதுக்கரை மார்க்கெட்டை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 22). லேப் டெக்னீசியன். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக ஜெயஸ்ரீ கடந்த ஒரு ஆண்டாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்தநிலையில் ஜெயஸ்ரீக்கு, நம்புகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர். ஜெயஸ்ரீயும், நம்புகுமாரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    நம்புகுமார் தினமும் மது குடித்து விட்டு ஜெயஸ்ரீயிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ஜெயஸ்ரீ வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
    • இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழையை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 42). விவசாயியான இவர் அவ்வப்போது மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக, அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜெய்சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • எடிசன் என்பவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவை சேர்ந்த கவுதமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
    • இந்நிலையில் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தை அடுத்த வாகைகுளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் எடிசன். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவை சேர்ந்த கவுதமி(வயது 22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

    தற்கொலை

    இந்நிலையில் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த கவுதமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சமீபத்தில் அவரை எடிசன் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், மீண்டும் அவர் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இதே பிரச்சினை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், கடந்த 19-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுதமி வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விசாரணை

    அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமணமாகி 10 மாதங்களே ஆவதால், சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் விசாரணை நடத்தி வருகிறார்.

    • விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 60). விவசாயி. இவருக்கு குடல் இறக்க நோய் ஏற்பட்டு வயது முதிர்வு காரணமாக குணப்படுத்த முடியவில்லையாம். நோயை குணப்படுத்த பல மருத்துவமனைகளில் காண்பித்தும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் மணமுடைந்த அசோகன் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த உறவினர்கள் அசோகனை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அசோகன் மகன் கோதண்டராமன் மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அசோகன் 2 திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது."

    • தனக்குத் தானே பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப் படுகிறது.
    • மரத்தில் தூக்கு போட்ட நிலையில் வாலிபர் ஒருவரது உடல் தொங்கியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள தெற்கு பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் சோனுசாமி(வயது 30) .பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 9- ந்தேதி அன்று மனைவி ரேவதியுடன் குடும்பத்ததகராறு ஏற்பட்டுள்ளது.

    பின்னர் வீட்டில் தனியே இருந்தவர், தனக்குத் தானே பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சோனுசாமி உயிரிழந்தார். இதையடுத்து அவரது தந்தை கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி - வேலம்பாளையம் ரோடு சந்திப்பில் உள்ள காட்டுப் பகுதியில் மரத்தில் தூக்கு போட்ட நிலையில் வாலிபர் ஒருவரது உடல் தொங்கியது. இது குறித்து அந்த வழியே சென்றவர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார். உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் காளிவேலம்பட்டி அருகே உள்ள ராசா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் விஜயகுமார்(28) என்பது தெரிய வந்தது.

    கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • சோமரசம்பேட்டை அருகே மது குடிக்க பணம் கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அருகேயுள்ள தாயனூர் மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார–ழகன் (வயது 38). கூலித் தொழிலாளியான இவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். தினமும் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த அவருக்கு கையிருப்பு கரைந்தது. இந்த நிலையில் மது குடிக்க பணம் இல்லாமல் தவித்தார்.

    நண்பர்களிடம் கடன் கேட்டும் யாரும் பணம் தரவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த குமாரழகன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தந்தை லிங்கம் பூசாரி சோமரசம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • மனைவியால் மனமுடைந்த கணவர் ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால் குடி அருகே உள்ள மாந்துரை நெடுஞ்சாலைகுடி பகுதி–யைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). இவர் கொத்த–னார் வேலை செய்து வந்தார். இவருக்கு திரு–மணமாகி நித்யா என்ற மனைவியும், ஏழு வயதில் ஒரு மகளும், ஐந்து வயதில் ஒரு உள்ளூரில் வேலை பார்த்து வந்த ராஜாவுக்கு குடும்ப வருமானம் போதா–ததால் அவ்வப்போது வெளியூர்களுக்கும் வேலைக்கு சென்று தங்கி–யிருப்பது வழக்கம். இதற்கி–டையே ராஜாவின் மனைவி நித்யாவுக்கு திருச்சி வடக்கு அரியாவூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள் ளக்காதல் ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் இந்த விஷயம் ராஜாவுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கடுமை–யாக கண்டித்தார். இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் உடனடியாக கள்ளக்கா–தலை கைவிடு–மாறு கூறியுள்ளார். ஆனா–லும், நித்யா திருத்திக் கொள்ளவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக ராஜா கொடுத்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தததால் மனமுடைந்த ராஜா, வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ள முடி–வெடுத்துள்ளார். இந்நிலை–யில் இன்று அதிகாலை தூங்கி எழுந்த ராஜா மேலவாளாடி ெரயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்டவாளத்தின் அருகில் நின்றார். அப்போது அந்த வழி–யாக வந்த ெரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன.

    இது தொடர்பாக தகவல் அறிந்த விருத்தாச்சலம் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு வந்த ெரயில்வே போலீசாரிடம் ராஜா தற்கொலைக்கு காரணமான ராஜாவின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் வடக்கு அரியாவூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என ராஜா உறவினர் ராஜாங்கம் கேட்டுக்கொண்டார்.

    • குளித்தலையில் அரளி விதையை அரைத்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

    கரூர்:

    குளித்தலை நகராட்சி, மலையப்பன் நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 42) இவர் கடந்த ஓராண்டாக உடல்நிலை சரியில்லாததால், மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.இந்நிலையில் உடல்நிலை மோசமா னதால், மனமுடைந்து அரளி விதையை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பழனியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் மாரியம்மாள் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.




    • கடன் பிரச்சனையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மனைவி வனிதா(வயது35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் வனிதா அவரது தந்தை கலியபெருமாளிடம் தனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள் எனக்கு கடன் தொல்லை அதிகம் இருப்பதால் தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து கலியபெருமாள் மருமகனிடம் இது குறித்து பேசியுள்ளார்.

    பின்னர் காலை வனிதா வீட்டின் தனி அறையில் சேலையில் தூக்கில் தொங்குவதை கண்டு சிவலிங்கம் அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீசார் வனிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இன்று காலை கடம்பூர் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நல்லசாமி சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    கயத்தாறு:

    கயத்தாறை அடுத்த கடம்பூர் அருகே உள்ள சிதம்பரபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 38). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் கடந்த சில மாதங்க ளாக அவர் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இன்று காலை கடம்பூர் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற அவர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து ெரயில்வே போலீசார் அங்கு வந்து நல்லசாமி உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • திருமணம் ஆன நாளில் இருந்தே மாரிராஜ் குடித்துவிட்டு வந்து ஜெயாதேவியிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • அவர் கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து சங்கரன்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைக்கு சென்றுவந்தார்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள வடமலைபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி புவியாள். இவர்களது மகள் ஜெயாதேவி(வயது 22).

    திருமணம்

    இவருக்கும், சங்கரன் கோவில் அருகே அச்சம்பட்டி வடக்கு தெருவில் வசிக்கும் மாரிராஜ்(25) என்பவ ருக்கும் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    திருமணம் ஆன நாளில் இருந்தே மாரிராஜ் குடித்துவிட்டு வந்து ஜெயாதேவியிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஜெயாதேவி வீட்டில் இருந்தபோது, சமையில் அறையில் சிலிண்டரை திறந்துவிட்டு கதவை பூட்டிவிட்டு மாரிராஜ் வெளியே சென்றுவிட்டார்.

    தற்கொலை

    இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்த ஜெயாதேவியை உறவினர்கள் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படை த்தனர். அதன்பின்னர் அவர் கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து சங்கரன்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைக்கு சென்றுவந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக அவர் கூறிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் அவர் தனது கணவர் மாரிராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஜெயா தேவியின் பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.

    விசாரணை

    உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலைக்கு சென்ற ஜெயாதேவி அச்சம் பட்டியில் உள்ள கணவர் வீட்டுக்கு எதற்காக சென் றார்? என்பது குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×