search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுக்கரை"

    • ஜெயஸ்ரீ கடந்த ஒரு ஆண்டாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
    • இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    கோவை:

    கோவை மதுக்கரை மார்க்கெட்டை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 22). லேப் டெக்னீசியன். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக ஜெயஸ்ரீ கடந்த ஒரு ஆண்டாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்தநிலையில் ஜெயஸ்ரீக்கு, நம்புகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர். ஜெயஸ்ரீயும், நம்புகுமாரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    நம்புகுமார் தினமும் மது குடித்து விட்டு ஜெயஸ்ரீயிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ஜெயஸ்ரீ வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்று மாலை ஏற்றப்படுகிறது.
    • 3 நாட்கள் தீபம் எரிவதற்காக பக்தர்கள் பசு நெய் வழங்கி வருகின்றனர்.

    குனியமுத்தூர்

    கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் அடுத்த மதுக்கரையில் பழமை வாய்ந்த தர்ம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று மாலை 6 மணி அளவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதில் கிட்டத்தட்ட 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதாமாதம் பவுர்ணமி தினத்தன்று கிரிவலத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழக்கமாக கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் நாளை பகல் கிரிவலம் நடைபெறுகிறது. வருடம் தோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று ஒரு லட்சம் பக்தர்கள் வருவது வழக்கம். மேலும் மகா சிவராத்திரியும் இக்கோவிலில் விமர்சையாக நடைபெறும். பிரதோஷ வழிபாடுகளும் சிறப்பாக நடக்கும்.1000 படிகள் ஏறி உச்சியில் சென்று தர்மர் சிவனை வழிபட்டார் என்பது வரலாறு. அந்த சமயத்தில் பீமன் கீழே காவல் காத்ததாகவும், மற்ற தம்பிகள் பாதுகாப்பாக கிரிவலம் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. தர்மர் வழிபட்ட காரணத்தால் தர்ம லிங்கேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    300 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது பசுமாட்டை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தார். அப்போது மலை உச்சியில் சுயம்புலிங்கத்திற்கு மாடு பால் சொரிந்து கொண்டு இருந்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் தான் இந்த தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு கிராம மக்கள் படையெடுக்க தொடங்கினர். மேலும் கோவிலின் பின்புறத்தில் செல்லும் பாதை வழியாக சேர, சோழ மன்னர்களும் இங்கு வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.இக்கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீப விழா,கார்த்திகை மாதம் 16-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை 20-ந் தேதியான இன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. 4.30 மணிக்கு தர்ம லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    இன்று மாலை 6 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. நாளை காலை 4.30 மணி அளவில் தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு இரண்டாம் நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு மூன்றாம் நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 3 நாட்கள் தொடர்ந்து மலை உச்சியில் தீபம் எரிவதற்காக பக்தர்கள் பசு நெய் கோவிலுக்கு வழங்கி வருகின்றனர்.

    • தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
    • மர்மநபர்கள், தாங்கள் வைத்திருந்த பீர்பாட்டிலால் சரவணகுமாரை சரமாரியாக தாக்கினர்.

    கோவை:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சரவணகுமார். இவர் கோவை மதுக்கரையில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் தங்கி தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து சீராபாளையம் நோக்கி நடந்து சென்றார். அப்போது அவரை மர்மநபர்கள் சிலர் வழிமறித்தனர். அவர்களிடம் எதற்காக என்னை மறிக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு மர்மநபர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், தாங்கள் வைத்திருந்த பீர்பாட்டிலால் சரவணகுமாரை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.

    சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று வாலிபரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்து சரவணகுமாரின் தந்தை செல்வராஜ் கோவை வந்து, மதுக்கரை போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை தாக்கியவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக தாக்கினார்கள் ? முன்விரோதத்தில் தாக்கினரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குரும்பபாளையத்தில், ரூ25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையமும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
    • கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது.

    செட்டிபாளையம் :

    கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். கோவை மதுக்கரையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தொடர்ந்து ஏ.சி.சி. டிரஸ்ட் சார்பில் மதுக்கரை அடுத்த குரும்பபாளையத்தில், ரூ25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையமும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களையும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில், மருத்துவ முகாம் நடைபெற்றது. அதை பார்வையிட்ட அமைச்சர், வரும் முன் காப்போம், மக்களை தேடி மருத்துவத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் சமீரன், துணை இயக்குநர் அருணா, பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம், ஏசிசி நிர்வாக இயக்குநர் எஸ்ஆர்.டிரிக்கி, கோவை புறநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது.இதில் அமைச்சர் மா.சுப்பி ரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்க ளை வழங்குகிறார். இதில் டீன் ரவீந்திரன், கண்கா ணிப்பாளர் ரவிக்குமார் உள்பட பலர்

    பங்கேற்கின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நாகராஜின் வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.
    • பொதுமக்கள் மடக்கி பிடித்த வாலிபரை தர்ம அடி கொடுத்து மதுக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை :

    கோவை மதுக்கரை அறிவொளி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர் புதியதாக வீடு கட்டி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் தனது சகோதரர் கார்த்திக் என்பவருடன் புதிய வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நாகராஜின் வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.

    அங்கு அந்த வாலிபர்கள் தூங்கி கொண்டு இருந்த நாகராஜ் மற்றும் கார்த்திக்கின் செல்போனை திருடினர். ஏதோ சத்தம் வருவதை கேட்டு நாகராஜ் எழுந்தார்.

    அப்போது அங்கு 2 வாலிபர்கள் செல்போனை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். மக்கள் வருவதை கண்டு மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

    பொதுமக்கள் மடக்கி பிடித்த வாலிபரை தர்ம அடி கொடுத்து மதுக்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் தஞ்சாவூரை சேர்ந்த ஷபிக் அகமது (23) என்பதும், தப்பி ஓடியவர் அவரது நண்பர் ரியாஷ் என்பதும், தஞ்சாவூரில் இருந்து கோவை வந்து ரியாசுடன் தங்கி இருந்த போது திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் ஷபிக் அகமதை கைது செய்தனர்.

    பொதுமக்கள் தாக்கியதில் அவர் காயம் அடைந்ததால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார், கல்லூரி மாணவரான தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து இளம்பெண்ணின் கணவரை தாக்கினார்.

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்த 29 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு தனது தாயுடன் சென்றார். பின்னர் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் சதீஸ்குமார் (47) என்பவர் இளம்பெண்ணை உல்லாசமாக இருக்கலாம் வா என அழைத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றார்.

    அங்கு நின்று கொண்டு இருந்த சதீஸ்குமாரிடம் தனது மனைவியை உல்லாசத்துக்கு அழைத்து குறித்து தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார், கல்லூரி மாணவரான தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து இளம்பெண்ணின் கணவரை தாக்கினார். இதனை பார்த்த இளம்பெண் தடுக்க சென்றார். அவரையும் 2 பேரும் சேர்ந்து தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணின் கணவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து இளம்பெண் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை உல்லாசத்துக்கும் அழைத்த சதீஸ்குமாரை கைதுசெய்தனர்.

    அவர் மீது பெண்கள் வன்ெகாடுமை தடுப்பு சட்டம், தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவர் பிரவீன்குமாரை தேடி வருகிறார்கள். 

    ×