மதுக்கரையில் கணவரை பிரிந்து வேறு வாலிபருடன் வாழ்ந்த இளம்பெண் தற்கொலை

ஜெயஸ்ரீ கடந்த ஒரு ஆண்டாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
மதுக்கரையில் கணவரை பிரிந்து வேறு வாலிபருடன் வாழ்ந்த இளம்பெண் தற்கொலை
Published on

கோவை:

கோவை மதுக்கரை மார்க்கெட்டை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 22). லேப் டெக்னீசியன். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக ஜெயஸ்ரீ கடந்த ஒரு ஆண்டாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் ஜெயஸ்ரீக்கு, நம்புகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர். ஜெயஸ்ரீயும், நம்புகுமாரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

நம்புகுமார் தினமும் மது குடித்து விட்டு ஜெயஸ்ரீயிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ஜெயஸ்ரீ வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com