search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுக்கரையில் வீடு புகுந்து செல்போன் திருடிய கொள்ளையன்
    X

    மதுக்கரையில் வீடு புகுந்து செல்போன் திருடிய கொள்ளையன்

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நாகராஜின் வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.
    • பொதுமக்கள் மடக்கி பிடித்த வாலிபரை தர்ம அடி கொடுத்து மதுக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை :

    கோவை மதுக்கரை அறிவொளி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர் புதியதாக வீடு கட்டி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் தனது சகோதரர் கார்த்திக் என்பவருடன் புதிய வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நாகராஜின் வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.

    அங்கு அந்த வாலிபர்கள் தூங்கி கொண்டு இருந்த நாகராஜ் மற்றும் கார்த்திக்கின் செல்போனை திருடினர். ஏதோ சத்தம் வருவதை கேட்டு நாகராஜ் எழுந்தார்.

    அப்போது அங்கு 2 வாலிபர்கள் செல்போனை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். மக்கள் வருவதை கண்டு மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

    பொதுமக்கள் மடக்கி பிடித்த வாலிபரை தர்ம அடி கொடுத்து மதுக்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் தஞ்சாவூரை சேர்ந்த ஷபிக் அகமது (23) என்பதும், தப்பி ஓடியவர் அவரது நண்பர் ரியாஷ் என்பதும், தஞ்சாவூரில் இருந்து கோவை வந்து ரியாசுடன் தங்கி இருந்த போது திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் ஷபிக் அகமதை கைது செய்தனர்.

    பொதுமக்கள் தாக்கியதில் அவர் காயம் அடைந்ததால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×