என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சங்கரன்கோவில் அருகே தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தற்கொலை
  X

  சங்கரன்கோவில் அருகே தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமணம் ஆன நாளில் இருந்தே மாரிராஜ் குடித்துவிட்டு வந்து ஜெயாதேவியிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
  • அவர் கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து சங்கரன்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைக்கு சென்றுவந்தார்.

  நெல்லை:

  சங்கரன்கோவில் அருகே உள்ள வடமலைபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி புவியாள். இவர்களது மகள் ஜெயாதேவி(வயது 22).

  திருமணம்

  இவருக்கும், சங்கரன் கோவில் அருகே அச்சம்பட்டி வடக்கு தெருவில் வசிக்கும் மாரிராஜ்(25) என்பவ ருக்கும் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

  திருமணம் ஆன நாளில் இருந்தே மாரிராஜ் குடித்துவிட்டு வந்து ஜெயாதேவியிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஜெயாதேவி வீட்டில் இருந்தபோது, சமையில் அறையில் சிலிண்டரை திறந்துவிட்டு கதவை பூட்டிவிட்டு மாரிராஜ் வெளியே சென்றுவிட்டார்.

  தற்கொலை

  இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்த ஜெயாதேவியை உறவினர்கள் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படை த்தனர். அதன்பின்னர் அவர் கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து சங்கரன்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைக்கு சென்றுவந்தார்.

  இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக அவர் கூறிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் அவர் தனது கணவர் மாரிராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஜெயா தேவியின் பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.

  விசாரணை

  உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலைக்கு சென்ற ஜெயாதேவி அச்சம் பட்டியில் உள்ள கணவர் வீட்டுக்கு எதற்காக சென் றார்? என்பது குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×