சங்கரன்கோவில் அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை

எடிசன் என்பவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவை சேர்ந்த கவுதமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.இந்நிலையில் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தை அடுத்த வாகைகுளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் எடிசன். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவை சேர்ந்த கவுதமி(வயது 22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

தற்கொலை

இந்நிலையில் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த கவுதமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சமீபத்தில் அவரை எடிசன் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், மீண்டும் அவர் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதே பிரச்சினை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், கடந்த 19-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுதமி வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விசாரணை

அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருமணமாகி 10 மாதங்களே ஆவதால், சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com