search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Su Venkatesan"

    • மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது.
    • இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

    சென்னை:

    மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது.

    இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

    எங்கள் எய்ம்ஸ் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    இப்பதிவுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடிக்கு அடிக்கல் நாட்டிய செய்தி வெளியான நாளிதழ் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

    • கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.
    • இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு "மதச்சார்பின்மை" என்ற கோட்பாடு.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இந்த விழாவில், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 8 ஆயிரம் பேர் முக்கிய விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

    இதற்கிடையே, இது ராமர் கோவில் விழா அல்ல அரசியல் விழா, பாஜக அரசு விழா என பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

    இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் அரசியல் சாசனம் குறித்து பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    உயிருள்ள உடலுக்கு மூச்சுக்காற்று போல இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு "மதச்சார்பின்மை" என்ற கோட்பாடு.

    "இந்தியர்களாகிய நாங்கள்" என்கிற மகத்தான சொற்களோடு துவங்கும் அரசியல் சாசனத்தின் முகவுரையை இன்றைய நாளில் மறுபடியும் நினைவுகூறுவோம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்" என நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.
    • கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை "தமிழும் திமிலும்" எமது பேரடையாளம்.

    சென்னை:

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்.

    "தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்" என நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.

    உலகம் அதிர உரக்கச்சொல்வோம்...

    கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை "தமிழும் திமிலும்" எமது பேரடையாளம் என கூறியுள்ளார்.

    • சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 9 நடைமேடைகள் உள்ளன.
    • ரெயில் பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்காக தெற்கு ரெயில்வே கடமைப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரெயில், பயணிகள் வந்து ஏறுவதற்கு வசதியாக எழும்பூர் ரெயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் வழக்கமாக நிறுத்தப்படும்.

    நேற்று முன்தினம் இரவு, ரெயில்வே வாரிய உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர், ராமேசுவரத்துக்கு ஆய்வுக்கு செல்லவிருந்த சிறப்பு ரெயில் 4-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டதால், பாண்டியன் விரைவு ரெயில் 5-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டது.

    இதனால், அந்த ரெயிலில் பயணம் செய்ய வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்குமங்குமாக அலைந்து படிக்கட்டில் ஏறி அடுத்த நடைமேடைக்கு சென்றனர். குறிப்பாக, வயதானவர்கள், கைக்குழந்தையோடு வந்த தாய்மார்கள் எல்லாம் பரிதவித்தனர்.

     இதுகுறித்து, மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், "ரெயில் நிலைய கட்டுமானப் பணி, தண்டவாள பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது என்றால் வேறு நடைமேடைக்கு ரெயில்கள் மாற்றப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு அதிகாரிக்காக பாண்டியன் விரைவு வண்டியை அடுத்த நடைமேடையில் நிறுத்தி மக்களை அலைக்கழித்துள்ளனர். இதற்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 9 நடைமேடைகள் உள்ளன. இதில், முதல் 3 நடைமேடைகள் குறைந்த நீளம் கொண்டவை. 4வது நடைமேடை மட்டுமே நீளம் கொண்டது. அத்துடன், பீக் ஹவர் நேரங்களில் நீண்ட தூர விரைவு ரெயில்களை கையாள்வதற்கு 4-வது நடைமேடை வசதியாக உள்ளது.

    கடந்த 11-ந்தேதி சார்மினார், முத்துநகர் மற்றும் பொதிகை ஆகிய விரைவு ரெயில்கள் மாலை 6 மணி முதல் இரவு 8.40 மணி வரை 4-வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டன. எழும்பூருக்கு மாலை 6.20 மணிக்கு வந்து சேரும் சோழன் விரைவு ரெயில் தான் மீண்டும் பாண்டியன் விரைவு ரெயிலாக இரவு 9.40 மணிக்கு மதுரைக்கு இயக்கப்படுகிறது. அன்றைய தினம் இந்த ரெயில் 5-வது நடைமேடையில் வந்து நின்றது. பாண்டியன் விரைவு ரெயில் பல நாட்கள் 5-வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே வாரிய உறுப்பினர் செல்வதற்கான சிறப்பு ஆய்வு ரெயில், சென்னை சென்ட்ரலில் இருந்து 8.40 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலைய 4வது நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பாண்டியன் விரைவு ரெயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரமே இருந்ததால் மீண்டும் நடைமேடை மாற்றி நிறுத்தினால் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என கருதி 5-வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க நிர்வாக காரணம்தான்.

    ரெயில் பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்காக தெற்கு ரெயில்வே கடமைப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தவும், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை.
    • ரெயில்வே இதற்கு பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என வெங்கடேசன் எம்.பி. பதிவிட்டுள்ளார்.

    மதுரை:

    ரெயில்வே அதிகாரியான ரூப் நாராயண் ஷங்கர் நேற்று மதுரையில் இருந்து வெளியூர் செல்ல பயணம் மேற்கொண்டார். அப்போது

    அவர பயணிக்க வேண்டிய ரெயில் ஐந்தாம் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது.

    அதிகாரி என்பதால், ரெயில்வே நிர்வாகம் 4ம் பிளாட்பாரத்தில் அவர் பயணிக்க தனி ரெயிலை இயக்கியது. அத்துடன், 5வது பிளாட்பாரத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பயணிகளை 5வது பிளாட்பாரத்துக்கு அலைக்கழித்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ரெயில்வே நிர்வாகம் விளக்கம் உரிய அளிக்க வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், ஒரு அதிகாரி பயணிக்க தனி ரயில். அவர் அடுத்த நடைமேடைக்கு ஏறி இறங்காமல் வசதியாக பயணிக்க 1000 பயணிகளை அடுத்த நடைமேடைக்கு அலைகழிக்க வைத்த கொடுமை.

    மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை. ரெயில்வே இதற்கு பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.
    • சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை விமான நிலையம் வந்த வயதான தனது பெற்றோரின் உடைமையை சி.ஐ.எஸ்.எப் வீரர்கள், சோதனை செய்ததாக கூறியுள்ளார்.


    சித்தார்த் பதிவு

    அப்போது அவரது பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டபோது, தங்களிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதாகவும், கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் இருபது நிமிடங்கள் வரை தனது பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


    சு. வெங்கடேசன்

    சித்தார்த்தின் இந்த பதிவு பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் சித்தார்த் பதிவிற்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது இணையப் பக்கத்தில், "மதுரை விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.



    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதிக்கு சென்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பார்வையிட்டார்.
    • மருத்துவமனைக்கான பணிகள் ஒரு சதவீதம் கூட நிறைவடையவில்லை என குற்றச்சாட்டு

    மதுரை:

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் கூற்றுப்படி, 95 சதவீத பணிகள் நிறைவுபெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே? என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துமவனையின் கட்டுமானத்திற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்றார். இது தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.

    நட்டாவின் பேச்சைத் தொடர்ந்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நேற்றே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுடன் சென்று, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிறைவடைந்த பணிகளை பார்க்கப் போவதாகவும், அதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட உள்ளதாகவும் கூறியிருந்தார்.

    அதன்படி, மதுரை எம்பி சு.வெங்கடேசனுடன் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூர் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அங்கு மருத்துவமனைக்கான எந்த கட்டுமான பணியும் நடக்கவில்லை. சுற்றிலும் சுவர்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தது. காலியாக உள்ள அந்த இடத்தில் இருவரும் நடந்து செல்லும் புகைப்படங்களை மாணிக்கம் தாகூர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

    அதில், 'அன்பிற்குரிய நட்டா அவர்களுக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவீத பணிகளை முடித்தமைக்கு நன்றி. நானும் மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் தோப்பூர் வளாகத்தில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள்' என கூறி நட்டாவை டேக் செய்துள்ளார். அத்துடன் 95 சதவீதம் வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? என்ற கேள்வியுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    'பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் மாணிக்கம் தாகூர் எம்.பி.யும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்' என சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.

    உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    இங்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் ஒரு சதவீதம் கூட நிறைவடையவில்லை. நிதி ஒதுக்கீட்டிலும் குளறுபடிகள் உள்ளன என எம்.பி.க்கள் இருவரும் குற்றம்சாட்டினர்.

    ×