search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stuart Broad"

    இந்தியாவிற்கு எதிராக அலஸ்டைர் குக் 294 ரன்கள் அடித்ததே எனக்கு மிகவும் பிடித்தமான இன்னிங்ஸ் என ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். #AlastairCook
    இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக் ஓவல் டெஸ்டோடு ஓய்வு பெற இருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைத்த குக், 12 வருட ஆட்டத்திற்குப் பிறகு ஓய்வு பெறுகிறார்.

    குக் அறிமுகமான ஓராண்டிற்குப் பிறகு அறிமுகமானவர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். குக் 161 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிராட் 123 போட்டிகளில் விளையாடியுள்ளார். 123 போட்டிகளிலும் குக் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

    அலஸ்டைர் குக் அடித்த சதத்திலேயே இந்தியாவிற்கு எதிராக 294 ரன்கள் அடித்ததுடன் எனக்கு மிகவும் பிடித்தமான ஆட்டம் என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பிராட் கூறுகையில் ‘‘எனக்கு மிகவும் பிடித்தமான சதம் எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவிற்கு எதிராக 2011-ல் அடித்த 294 ரன்களாகும். ஏனென்றால், அவரது சதம் எங்களுடைய பந்து வீச்சாளர்களுக்கு இரண்டரை நாட்கள் ஓய்வை கொடுத்தது.

    ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வருடம் ஓவலில் நடைபெற்ற போட்டியில் அவர் பேட்டிங் செய்ததை மிகவும் ரசித்து பார்த்தேன்’’ என்றார்.
    245 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 46 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார்.



    புஜாராவை 5 ரன்னிலும், ஷிகர் தவானை 17 ரன்னிலும் வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதனால் இந்தியா 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்தியா 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் அடித்துள்ளது. விராட் கோலி 10 ரன்னுடனும், ரகானே 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 199 ரன்கள் தேவை.
    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விதி மீறிய காரணத்தால் இங்கிலாந்து வீரர் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. #ENGvIND #INDvENG #StuartBroad
    டிரண்ட் பிரிட்ஜ்:

    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    முதலில் விளையாடிய இந்திய அணி விராட் கோலி, ரகானேவின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் சர்வதேச விதிகளை மீறி நடந்து கொண்ட இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்டத்தின் இரண்டாவது நாளில் பிராடு வீசிய பந்தில் ரிஷப் பந்த் ஆட்டம்
    இழந்தார். அப்போது, பிராடு அவரை நோக்கி தகாத முறையில் சத்தம் போட்டு நடந்து கொண்டதாக தெரிகிறது. இது விதிமுறைகளை மீறியது.

    இதனால், இங்கிலாந்து வீரர் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND #INDvENG #StuartBroad
    முதல் இரண்டு டெஸ்டில் 250 ஓவர்கள் வீசினால், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது நடைமுறைக்கு ஒத்து வராதது என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளைமறுநாள் புதன்கிழமை (ஆகஸ்ட்-1) தொடங்குகிறது. ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 42 நாட்களில் நடக்கிறது.

    42 நாட்களில் (6 வாரம்) ஐந்து டெஸ்ட் என்பது அடுத்தடுத்து விளையாடுவதற்கு சமம் என்று வீரர்கள் கருதுகிறார்கள். இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

    அதேவேளையில் 36 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 வாரங்கள் விளையாடாமல் இருந்தார். 32 வயதாகும் ஸ்டூவர்ட் பிராட் மூட்டு வலி காரணமாக சிகிச்சை மேற்கொண்டார். தற்போது இந்திய தொடருக்காக தயாராகி வருகிறார்கள்.

    பந்து வீச்சு பளு காரணமாக நீண்ட தொடரான இதில் இரண்டு பேருக்கும் சுழற்சி (rotated) முறையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இரண்டு டெஸ்டில் தலா 250 ஓவர்கள் வீசப்பட்டால் ஐந்து டெஸ்டில் விளையாடுவது சாத்தியமற்றது என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் ‘‘நாங்கள் தொடர்ந்து விளையாடுவது போட்டியின் டாஸ், ஆடுகளம் மற்றும் வேலைப்பளு ஆகியவற்றைச் சார்ந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தலா 250 ஓவர்கள் வீசப்பட்டால், வேகப்பந்து வீச்சாளர்கள் 6 வாரத்தில் ஐந்து போட்டிகளில் விளையாடுவார்கள் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது.

    ஆனால், ஒரு டெஸ்டில் 80 அல்லது 60 ஓவர்களில் ஆல்அவுட் ஆக்கிவிட்டால், அதன்பின் பந்து வீச்சாளர்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்படும்.

    ஆடுகளம் அதிக அளவில் டர்ன் ஆனால் ஸ்பின்னர்கள் அதிக அளவிலான ஓவர்களை வீசுவார்கள். அப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் ஓவர்கள் வீச வேண்டிய நிலை ஏற்படாது. அதேவேளையில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது என்றால் வேகப்பந்து வீச்சுக்கு அதிக வேலை இருக்கும்’’ என்றார்.
    இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் இந்தியா தொடருக்கு தயாராகி விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது.

    பின்னர் முக்கியத்தும் வாய்ந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இந்த பேட்ஸ்மேனுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் கவுன்ட்டி போட்டியில் விளையாடும்போது பிராட்டிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் தயாராகி விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பிராட் கூறுகையில் ‘‘தலைசிறந்த ஸ்பெஷலிஸ்ட் மற்றும் பல்வேறு ஸ்கேன் பரிசோதனைகளுக்குப் பிறகு முழங்காலில் ஏற்பட்டுள்ள தசைநார் பிரச்சினைக்கு சில ஊசிகள் போட்டுள்ளேன். எனக்கு ஐந்து நாட்கள் ஓய்வு தேவை. அதன்பிறகு ஓட திட்டமிட்டுள்ளேன். 22-வந்தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.

    ஒருவேளை கவுன்ட்டி போட்டியில் மீண்டும் காயம் ஏற்பட்டால் இந்திய தொடரில் பிராட் விளையாடுவது சிக்கலை ஏற்படுத்தும்.
    இந்தியாவிற்கு எதிராக 42 நாட்களில் 5 டெஸ்டில் விளையாடும் வகையிலான அட்டவணை தயாரிப்பு கேலிக் கூத்தானது என்று ஆண்டர்சன் கூறியுள்ளார். #ENGvIND
    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டி20 தொடரும், அதன்பின் ஒருநாள் தொடரும், கடைசியாக டெஸ்ட் தொடரும் நடைபெற இருக்கிறது. டி20 தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது. 6-ந்தேதி 2-வது ஆட்டமும், 8-ந்தேதி 3-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது.

    ஒருநாள் தொடர் ஜூலை 12-ந்தேதி தொடங்குகிறது. 2-வது ஆட்டம் 14-ந்தேதியும், 3-வது ஆட்டம் 17-ந்தேதியும் நடக்கிறது.

    அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. 1-ந்தேதி டெஸ்டும், 9-ந்தேதி 2-வது டெஸ்டும், 18-ந்தேதி 3-வது டெஸ்டும், 4-வது டெஸ்ட் 30-ந்தேதியும், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் செப்டம்பர் 9-ந்தேதியும் தொடங்குகிறது.

    ஐந்து டெஸ்டுகளும் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரைக்குள் 42 நாட்களில் நடக்கிறது. இடைவெளி இல்லாமல் மிகவும் நெருக்கடியான நிலையில் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர் முழுவதும் முழு ஃபிட் உடன் விளையாட வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ ஆண்டர்சனுக்கு 6 வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் கவுன்ட்டி போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 42 நாட்களுக்குள் ஐந்து டெஸ்ட் என்பது கேலிக்கூத்தானது என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘கடந்த இரண்டு வருடங்களாக என்னுடைய தோள்பட்டை காயம் பிரச்சனை இருந்து வருகிறது. என்னால் சிறந்த வழியில் அதை பார்த்துக் கொள்ள முடியும். நான் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்ற தோள்பட்டையை வலுவாக்குவது அவசியம்.

    42 நாட்களுக்குள் ஐந்து டெஸ்ட் என்பது கேலிக்கூத்தானது. இது ஏராளமான வகையில் மன ஆழுத்தத்தை கொடுக்கும். இந்த அட்டவணையால் நான் லன்காஷைர் அணிக்கான சில போட்டிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
    லீட்ஸில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் 68 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் திணறி வருகிறது. #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இமாம் உல் ஹக் ரன்ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மந்தமாக விளையாடினார்கள். 10-வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

    5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்துள்ளது. 68 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து திணறி வரும் பாகிஸ்தான், 5-வது விக்கெட்டை விரைவில் இழந்தால், முதல் இன்னிங்சில் குறைவாக ரன்னுக்குள் ஆல்அவுட் ஆக வாய்ப்புள்ளது.
    இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஸ்வான், இந்தியாவிற்கு இந்த தொடர் சிறந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கிரேம் ஸ்வான். இவர் இங்கிலாந்து அணிக்காக 60 டெஸ்டில் 255 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது இவர் மற்றும் மோன்டி பெனாசர் ஆகியோரின் பந்து வீச்சால் முதன்முறையாக இந்த மண்ணில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

    இந்தியா இதற்கு முன் இங்கிலாந்து சென்று விளையாடும்போது 0-4, 1-3 எனத் தொடரை இழந்துள்ளது. ஆனால் ஜூன் மாதம் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று ஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்வான் கூறுகையில் ‘‘இந்திய அணிக்கு இது சிறந்த தொடராக இருக்கும் என நினைக்கிறேன். இங்கிலாந்தில் இந்தியா மோசமாக விளையாடியுள்ளது என்பது பற்றி நாம் பேசிக் கொண்டிருக்க முடியாது. பாகிஸ்தான் இங்கிலாந்து வந்தபோது, அந்த அணியை விட இந்தியா சிறந்த அணியாக இருந்தது. ஆனால், யாசீர் ஷாவால் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது.. ஆனால் பேட்டிங்கில் இந்தியா சிறந்த அணியாக இருக்கிறது.



    கடந்த முறை ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இந்தியாவை துவம்சம் செய்தனர். அதேபோல் மொயீன் அலி சிறப்பாக பந்து வீசினார். தற்போது, இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பிராட் உள்ளனர். தற்போதும் அவர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் மொயீன் அலி பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இதனால் ஸ்பின்னர் பகுதியில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

    விராட் கோலியை ஆண்டர்சனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதில்தான் எல்லாமே உள்ளது. கடந்த முறை விராட் கோலியை தொடர்ச்சியாக வெளியேற்றினார். தற்போது விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார். அவர் சிறப்பாக சென்றால், இந்த அணிக்கு உத்வேகமாக இருக்கும்’’ என்றார்.
    ×