search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sports Festival"

    • 7-ம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடந்தது.
    • ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கோகோ, கைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் வளையாடினார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 7-ம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை ஆகிய அணிகளாக பிரிக்கப்பட்டு 100, 400, 800, 1500 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கோகோ, கைப்பந்து, சதுரங்கம், கேரம் போன்ற விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் விைளயாடினார்–கள்.

    நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தலைவர் ஏ.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.லீலாவதி வரவேற்றார். 2022-23-ம் ஆண்டுக்கான விைளயாட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. விழாவில் திருப்பூர் போலீ்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பாரத்டையிங் நிர்வாக இயக்குனர் பி.முருகநாதன் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கோப்பை, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார். இதில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை மஞ்சள் அணி வென்றது. அதைத்தொடர்ந்து மாணவிகளின் சிறப்பு நிகழ்ச்சியாக சிலம்பம், டேக்வாண்டோ, யோகா நடைபெற்றது. கல்லூரி நிர்வாக அலுவலர் எஸ்.அசோக்குமார் நன்றி கூறினார்.

    • கீழக்கரை தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் 35-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
    • முன்னதாக கல்லூரியின் 3-ம் ஆண்டு உளவியல் துறை மாணவிபாத்திமா நவுரா வரவேற்றார்.

    கீழக்கரை

    கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 35-வது விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி தலைமை வகித்து கல்லூரி கொடியை ஏற்றினார்.

    ராமநாதபுரம் மாவட்ட கடற்படை நலன் மற்றும் ஆரோக்கிய சங்கத்தின் தலைவர் சேட்னா விக்ராந்த் ஷெப்னி தேசியக்கொடியையும், சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியின் முன்னாள் முதல்வர் ரோஷி பெர்னான்டோ, தாசிம்பீவி கல்லூரியின் முன்னாள் மாணவி ஜெய்னம்பு பாத்திமா ஆகியோர் ஒலிம்பிக் கொடியையும் ஏற்றினர்.

    கல்லூரி முதல்வர் சுமையா முன்னிலை வகித்தார். இதில் மாணவிகளின் அணிவகுப்பு நடந்து. ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து 100, 200, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள், சாகசங்கள், உடற்பயிற்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முன்னதாக கல்லூரியின் 3-ம் ஆண்டு உளவியல் துறை மாணவிபாத்திமா நவுரா வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி, ஆரோக்கிய சங்கத்தின் தலைவர் சேட்னா விக்ராந்த் ஷெப்னி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    முடிவில் மாணவி நூரூர் ருஸ்லா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுமையா, சீதக்காதி அறக்கட்டளையின் துணை பொது மேலாளர் சேக் தாவூத் கான் ஆலோசனையின் பேரில் பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கவுசானல் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    • இதில் சாம்பியன் பட்டத்தை வணிக மேலாண்மையியல் துறை மாணவர்கள் பெற்றனர்.

    கீழக்கரை

    பாளையங்கோட்டை திரு இருதய சபை சகோதரர்களால் நடத்தப்படும் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது விளையாட்டு விழா நடந்தது. உடற்கல்வி இயக்குநர் சுகந்தராஜ் வரவேற்றார். கல்லூரிச் செயலர் மரியசூசை அடைக்கலம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். முதல்வர் ஹேமலதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாளையங்கோட்டை திரு இருதய சபையின் ஆஞ்சலோ மாநில அதிபர் பாக்கியநாதன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.

    முத்துப்பேட்டை ஆஞ்சலோ இல்லத் தலைவர் அந்தோணி சகாயராஜ் வாழ்த்துரை வழங்கினார். இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வணிக மேலாண்மையியல் துறை மாணவர்கள் பெற்றனர். மாணவர்களின் அணிவகுப்பு, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்சிகள், மாணவர்களின் மனிதக் கோபுரம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. பேராசிரியச் செயலாளர் ஜெனிட்டா நன்றி கூறினார். ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் தமிமுல் சுல்த்தானா, கணினி அறிவியல் துறை மாணவி நம்பு கமலி, ஆங்கிலத்துறை மாணவி பிரதிபா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

    • சிறப்பு விருந்தினராக மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன் கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியேற்றினார்.
    • உடற்கல்வி இயக்குநர் உமாநாத் விளையாட்டு அறிக்கை வாசித்தார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12-வது விளையாட்டு விழா பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் விமர்சையாக நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன் கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றியும், அதனால் பெற்றோர்கள் மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் சிறப்புரை ஆற்றினார்.

    இதில் நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி மற்றும் நெல்லை விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயரத்னராஜன் கலந்துகொண்டனர்.

    பள்ளியின் தாளாளர் டாக்டர். திருமாறன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் முருகவேல், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர் உமாநாத் விளையாட்டு அறிக்கை வாசித்தார். தொடக்க நிகழ்ச்சியாக மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மாணவ- மாணவிகள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அனைவருக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன் பரிசு வழங்கி பாராட்டினார்.

    நீச்சல் பயிற்றுநர் கர்ணன் கலந்து கொண்டார். குறிஞ்சி அணியினர் 69 புள்ளிகள் பெற்று ஓட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர்.

    • ரூபி மெட்ரிக் பள்ளியில் வருகிற 4-ந்தேதி விளையாட்டு விழா நடக்கிறது.
    • மதுரா கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    மதுரை

    மதுரை பழங்காநத்தத்தில் ரூபி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி மற்றும் மாடக்குளத்தில் ரூபி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளிகளின் விளையாட்டு விழா வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) மதுரா கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவில் திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு பரிசு வழங்கி டி.எஸ்.பி. பேசுகிறார். இந்த விழாவில் பல்வேறு துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கின்றனர்.

    விளையாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி சாந்தா தேவி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    • கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 22-வது விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் பால முருகன் வரவேற்றார். தேசியக் கொடியை சிறப்பு விருந்தினர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவும், ஒலிம்பிக் கொடியை மற்றொரு சிறப்பு விருந்தினர்-விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறனும், கல்லூரிக் கொடியை கல்லூரிச் செயலர் அ.பா.செல்வராசனும் ஏற்றினர்.

    தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களின் அணி வகுப்பு நடந்தது. இளநிலை தகவல் தொழில்நுட்பவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் அபிஷேக் விளையாட்டு விழாவுக்கான உறுதிமொழி வாசித்தார்.

    100மீட்டர், 400மீட்டர் ஓட்டம், மாணவர் நடனம். மாணவிகளின் சிலம்பம். பிரமிடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் யோகசுவரன் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சென்னையை சேர்ந்த சர்வதேச 2-வது கிராண்ட் மாஸ்டர் குகேசின் பயிற்றுநர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.அவர் ேபசுகையில், ஒழுக்கம், காலம் தவறாமை ஆகிய 2-ம் வெற்றி பெறுவதற்கான வழிகள். மனதை எப்பொ ழுதும் அமைதியான சூழலில் வைத்திருக்க வேண்டும். எதற்கும் பதற்றப்படக் கூடாது.

    நம்முடைய எதிரிகள் மூலமே நமக்கு வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆகவே அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்றார்.மற்றொரு சிறப்பு விருந்தினரான விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்கள் பிரிவில் ராஜேந்திரன் மணி அணியும் பெண்கள் பிரிவில் ஸ்மிரிதி மந்தனா அணியும் ஒட்டு மொத்த புள்ளிகளை பெற்று முதல் இடத்தைப் பிடித்தன.

    உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் புனிதவதி நன்றி கூறினார்.

    • வாசுதேவநல்லூர், சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
    • டி.எஸ்.பி. அசோக் முன்னிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சமாதான புறா பறக்கவிடப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர், சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக புளியங்குடி போலீஸ் டி.எஸ்.பி. அசோக் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் முருகேசன், மரங்களின் காதலன் தலைமலை மற்றும் புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் இராஜகயல்விழி வரவேற்று பேசினார். பள்ளியின் சேர, சோழ, பாண்டியா மற்றும் பல்லவாஸ் அணிகளின் அணிவகுப்பு மரியாதையை டி.எஸ்.பி. அசோக் ஏற்றுக் கொண்டார்கள்.

    மேலும் நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு துறையின் சிறப்புகள் மற்றும் வாய்ப்புகள் பற்றி உரையாற்றினார்கள். தொடர்ச்சியாக டி.எஸ்.பி. அசோக் முன்னிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சமாதான புறா பறக்கவிடப்பட்டது. மாணவர்கள் பல வகையான வண்ண கலர்களுடன் கூடிய உபகரணங்களை வைத்து உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டி செய்து அசத்தினார்கள்.

    விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் , கேடயங்களும் , சான்றிதழும் வழங்கப்பட்டது. பெற்றோர்களுக்கு தனியாக விளையாட்டு போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கும் உடனடியாக பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவின் ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
    • மாணவர்களுக்கு பள்ளி பொருளாளர் சந்திரசேகர் மற்றும் பள்ளி உறுப்பினர் துரைராஜ் பரிசுகள் வழங்கி சிறப்பித்னர்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 32-வது விளையாட்டு விழாப்போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப் பேசினார். ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    ஊத்துக்குளி சபரி இன்டேன் நிறுவனர் சாவித்தரி பெரியசாமி ஒலிம்பிக் சுடரை ஏற்றி சிறப்பித்தார். விளையாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட இறகுப்பந்து சங்கத்தின் பொதுச்செயலாளரும் இந்திய இறகுப்பந்து அணியின் பயிற்சியாளருமான மோகன்குமார் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    பள்ளி உபதலைவர் கருப்புசாமி, தாளாளர் பாலசுப்பிரமணியம், செயலாளர் செநதில்நாதன், பெரியசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி பொருளாளர் சந்திரசேகர் மற்றும் பள்ளி உறுப்பினர் துரைராஜ் பரிசுகள் வழங்கி சிறப்பித்னர். முடிவில் தமிழாசிரியர் ராஜகுமார் நன்றி கூறினார்.

    • பள்ளி மாணவர்களால் ஒலிம்பிக் தீபம் கொண்டு வரப்பட்டு பள்ளி மைதானத்தில் ஏற்றப்பட்டது.
    • விளையாட்டுக்குழு செயலர் கவிதா நன்றி கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டியில் அமைந்துள்ள யங் இண்டியா பப்ளிக் ஸ்கூல் மைதானத்தில் வருடாந்திர விளையாட்டு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் டாக்டர் எம்.என்.பொன்னுசாமி தலைமை வகித்தார்.

    பள்ளி தலைவர் சி.பழனிச்சாமி,பள்ளிச்செயலர் டாக்டர். சிவசண்முகம் , ஏனைய பள்ளி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தொழில் முறை துப்பாக்கி சுடும் வீராங்கனை மற்றும் சர்வதேச பதக்கம் வென்ற ஸ்ரீநிதி அபிராமி கலந்துகொண்டார்.

    கவுரவ விருந்தினராக சாரண, சாரணியர் இயக்கத்தின் பல்லடம் மாவட்ட ஆணையர் பழனிசாமி பங்கேற்றார். 

    பள்ளி முதல்வர் அண்ணாமலை ,துணை முதல்வர்கள் நிஜிலா பானு, சசிகலா முன்னிலை வகித்தனர்.விழாவில் சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்து பள்ளி மாணவர்களால் ஒலிம்பிக் தீபம் கொண்டு வரப்பட்டு பள்ளி மைதானத்தில் ஏற்றப்பட்டது. அறிவியல் விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின், ஐசக் நியூட்டன், மைக்கேல் பாரடே அணிகளை சார்ந்த சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. உடற்கல்வி ஆசிரியர் யேசுராஜ் விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார்.

    பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சாம்பியன் கோப்பையும் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டது. விளையாட்டுக்குழு செயலர் கவிதா நன்றி கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். 

    • மகாலெட்சுமி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது
    • புறாக்கள் பறக்கவிடப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி அடுத்த துடையூர் மகாலெட்சுமி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி மாணவன் அக்‌ஷய் வரவேற்று பேசினார். புறாக்கள் பறக்கவிடப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. போட்டியினை மகாலெட்சுமி கல்வி குழும தாளாளர் ரவி கொடியசைக்க, மகாலெட்சுமி கல்வி குழும ஆலோசகர் ரோட்ே்டரியன் சீனிவாசன், துளசி பாலசுப்பிரமணியன், ராஜா ராம், ரூபினி, பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி முதல்வர் ெஜயசீலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.விழாவில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. மாணவர்களுக்கு 20 மீட்டர் ஓட்டபந்தயமும், 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டபந்தயமும், 3 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 60 மீட்டர் ஓட்டபந்தயமும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டபந்தயமும் நடைபெற்றது. பின்பு தடகள போட்டிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. எல்.கே.ஜி. முதல் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு பாராசூட் ட்ரில் நடைபெற்றது.3 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரமிடு மற்றும் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டுதொத்த சாம்பியன் கோப்பையினை பள்ளி எம்ரால்டு அணி ெவன்றது. முடிவில் மாணவன் தரணிதரன் நன்றி கூறினார். மகாலெட்சுமி குழும ஆலோசகர் ரோட்டேரியன் கே.சீனிவாசன் விழாவில் சிறப்பாக செயல்பட்ட அனைவரையும் வாழ்த்தி மாணவர்கள், பெற்றோர்களை பாராட்டி நன்றி தெரிவித்தார்.


    • உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைபள்ளி, புனிதமரியன்னை நடுநிலை பள்ளிகளில் விளையாட்டு விழா பள்ளியின் முன்னாள் மாணவரும் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியின் பேராசிரியருமான பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
    • விழாவில் மாணவர்கள் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீபம் வலம் வருதல், ஒலிம்பிக் கொடி ஏற்றுதல், விளையாட்டு உறுதிமொழி எடுத்தல் உள்ளிட்டவை நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைபள்ளி, புனிதமரியன்னை நடுநிலை பள்ளிகளில் விளையாட்டு விழா பள்ளியின் முன்னாள் மாணவரும் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியின் பேராசிரியருமான பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் லெரின் டிரோஸ் அடிகளார் வாழ்த்துரை வழங்கினார். பள்ளித்தலைமை ஆசிரியை பிளாரன்ஸ், புனித மரியன்னை நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியை எலிசா டிரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புனித யாகப்பர் ஆலய கமிட்டி தலைவர் திபுர்சியான், தூய ஆவி ஆலய கமிட்டி தலைவர்சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாணவர்கள் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீபம் வலம் வருதல், ஒலிம்பிக் கொடி ஏற்றுதல், விளையாட்டு உறுதிமொழி எடுத்தல் உள்ளிட்டவை நடைபெற்றது. ஆண்கள்4 அணியாகவும், பெண்கள் 4அணியாகவும் போட்டிகள் நடைபெற்றது. இதில் தாசன் அணி ஆண்களில் முதல் இடத்தையும், ரோச் அணி பெண்களில் முதல்இடத்தையும் பெற்றது.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விழாத்தலைவர் பரிசுகள் வழங்கினார்.உடற்கல்வி ஆசிரியை உஷா நன்றி கூறினார்.

    • அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
    • இந்த பள்ளி நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டிற்க்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டிற்க்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. உறவின்முறை தலைவர் காமராஜன் தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர் ரவீந்திரன், பள்ளி தலைவர் பாபு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஆனந்த ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பேசினார். விழாவில் அருப்புக்கோட்டை உட்கோட்டஉதவி காவல் கண்காணிப்பாளர் கரன்காரட் சமாதான புறாவை பறக்க விட்டார். எஸ்.பி.கே. கல்வி நிறுவன குழு தலைவர் ஜெயக்குமார் ஒலிம்பிக் கொடியேற்றினார். கவுரவ ஆலோசகர் மனோகரன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, கோவில் டிரஸ்டி ராஜேந்திரன், உறவின்முறை துணைச் செயலாளர் முத்துக்குமார், துணைத்தலைவர் சிவக்குமார் உள்பட உறவின்முறை நிர்வாகிகள், பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பள்ளிச்செயலாளர் மணிமுருகன் நன்றி கூறினார்.

    ×