search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Solution"

    • சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • நீதிபதி வீ.ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.

    அரியலூர்:

    தேசிய அளவில் நுகர்வோர் வழக்குகளை தீர்க்க சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள், நுகர்வோர் ஆணையங்களில் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நீதிபதி வீ.ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் விசாரிக்கப்பட்ட 2 புகார்களில், விற்கப்பட்ட பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனையாளர்கள் வசூலித்து உள்ளது தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் கூடுதலாக பெறப்பட்ட தொகை மற்றும் இழப்பீடாக ரூ.1 லட்சம் தருவதற்கு மக்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.

    மற்றொரு வழக்கில் உற்பத்தி குறைபாடுள்ள செல்போனை விற்பனை செய்த கடைக்காரர் அதனை மாற்றி புதிய செல்போனை வழங்க மக்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு தீர்வு ஏற்பட்டது. சூரிய மின்சக்தி உபகரணத்தின் குறைபாடு ஏற்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் அதனை வழங்கிய நிறுவனத்தினர் உபகரணத்தின் குறைபாடுள்ள பகுதிகளை மாற்றி இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக ஒப்புக்கொண்டனர்.

    மேலும் வீடு தீப்பற்றியதால் ஏற்பட்ட இழப்புகளுக்கு கொடுக்க வேண்டிய காப்பீட்டுத்தொகையை கொடுக்கவில்லை என்று காப்பீட்டு நிறுவனம் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், உயரதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று இரண்டு வார காலத்திற்குள் ரூ.5 லட்சத்தை புகார்தாரருக்கு வழங்க காப்பீட்டு நிறுவன மேலாளர், மக்கள் நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளார்.

    மேலும் சேவை குறைபாடு, கூடுதல் தொகை பெற்றது, நியாயமற்ற வணிக நடைமுறை, உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் குறைபாடு தொடர்புடைய 55 நுகர்வோர் புகார்கள் சமரசப் பேச்சுவார்த்தைக்கு மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த மக்கள் நீதிமன்ற அமர்வில் உறுப்பினராக வீரம் லாவண்யா பங்கேற்றார். இதில் அரசு வக்கீல் கதிரவன் உள்ளிட்ட வக்கீல்களும், புகார்தாரர்களும், எதிர் தரப்பினரும் என பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு குறைதீர் முகாம்களில் 57 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    • நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நேற்று நடந்தன. இதில் பெரம்பலூர் தாலுகாவில் எளம்பலூரிலும், வேப்பந்தட்டை தாலுகாவில் தொண்டமாந்துறையிலும் (கிழக்கு), குன்னம் தாலுகாவில் புதுவேட்டக்குடியிலும், ஆலத்தூர் தாலுகாவில் மேலமாத்தூரிலும் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்தன. முகாம்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 57 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • தாலுக்கா அலுவலகம் முன்பு சமைத்து உண்டு உறங்கி தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
    • ஆர்.டி.ஓ லதா தலைமையிலும், தாசில்தார் பூங்கொடி முன்னிலையிலும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுக்கா அலுவலகம் முன்பு சமைத்து உண்டு உறங்கி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

    இது குறித்து கும்பகோணம் ஆர்.டி.ஓ லதா தலைமையிலும், தாசில்தார் பூங்கொடி முன்னிலையிலும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பண்டாரவாடை மற்றும் அரையபுரம் வடிகால் நீர்வளத் துறையின் சார்பில் வாய்க்கால் விரைவில் தூர்வாரும்பனிகள் மேற்கொள்ளப்படும், விவசாயிகளுக்கு முறையாக நிவாரணம் வழங்கிட வேளாண்மை துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்,

    கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படும், பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் கழிவறை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உட்பட 15 அம்ச கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் தீர்வு மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள், போராட்ட குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுமூக தீர்வு காணப்பட்டதால் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

    • பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு கோப்புகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:

    பட்டுக்கோட்டை வருவாய் கோ ட்டாட்சியர் அலுவலகத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது .

    மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர், பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், தாசில்தார் ராமச்சந்திரன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் சங்கர், துணைத் தலைவர் முருகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நீதிபதிகள் ஏக்னஸ் ஜெபகிருபா, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்
    • இது போன்று மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    நீதிபதிகள் ஏக்னஸ் ஜெபகிருபா, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். இதில் குற்ற வழக்குகள் 54 மற்றும் உரிமையியல் வழக்குகள் 7 ஆகியவற்றுக்கு வழக்காடிகளின் சமரசத்தின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.

    இது போன்று மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் திரளான வழக்காடிகளும், வக்கீல்களும் கலந்து கொண்டார்கள்.

    • திண்டிவனத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில் 454 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
    • ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்விற்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    திண்டிவனம்:

    திண்டிவனம்வட்ட த்துக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களுக்கான கணக்கு சரிபார்த்தல் (ஜமாபந்தி) வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் மொத்தமாக 1034 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    இவற்றில் 79மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 501 மனுக்கள் பரிசீலனையில் (நிலுவையில்) உள்ளது. 454 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ஜமா பந்தி நிறைவு நாள் நிகழ்விற்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித்தொகைகோரி மனு அளித்து ஏற்றுக்கொள்ள ப்பட்ட தகுதியுடைய 454 பயனாளிகளுக்கு அவற்றிக்கான சான்றிதழ் ஆணையினை வழங்கினார்.

    மேலும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தன் சொந்த செலவில் பயனாளிகளுக்கு அரிசி வழங்கினார்.இதில் சப்-கலெக்டர் அமித்,வருவாய் தீர்வாயம் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிக்குமார், சிவகுமார்எம்.எல்.ஏ. ,மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ஷிலா தேவி சேரன், யூனியன் தலைவர்கள் சொக்க லிங்கம், யோகேஸ்வரி ,மணி மாறன்,துணைத் தலைவர் பழனி,திண்டிவனம் நகர மன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ண ன்,வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பங்கேற்றனர்.

    • மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • நீதிமன்றத்தில் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கடலட்சுமி ஆகியோர் உரிமை யியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரணைசெய்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்ட தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை உத்தரவுபடி தேசிய மக்கள் நீதிமன்றம் வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.

    இந்த நீதிமன்றத் தில் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கடலட்சுமி ஆகியோர் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரணைசெய்தனர்.

    உரிமையியல் வழக்குகள் வாடகை பிரச்சினை, கொடுக்கல் வாங்கல், குடும்ப பிரச்சினை உள்ளிட்ட வழக்குகள் சமரசமாக பேசியும், குற்றவியல் வழக்குகளில் மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, காசோலை மோசடி வழக்கு உள்பட வழக்குகளை உடனடியாக விசாரணை செய்தும் அபராத தொகை விதித் தும் மொத்தம் 117 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    இதில் உரிமையியல் வழக்கு மற்றும் குற்றவியல் வழக்குகளில் ரூ.21 லட்சத்து 13 ஆயிரத்து 241 பெறப்பட்டது.

    • எம்.பி., சுப்பராயன் இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் 25வது மாநில மாநாடு திருப்பூரில் நடத்துவது குறித்தும் பேசினார்.
    • பஞ்சு பதுக்கல் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 5வது மாவட்ட மாநாடு தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சி துவக்கமாக காளியப்பன் கொடியேற்றினார்.பழனிசாமி, செந்தில்குமார், சசிகலா தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் ரவி, இசாக், ராமசாமி உள்ளிட்டோர் பேசினர்.இதில், மாநகர் மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட செயலாளராக இசாக் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.எம்.பி., சுப்பராயன் இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் 25வது மாநில மாநாடு திருப்பூரில் நடத்துவது குறித்தும் பேசினார்.

    திருப்பூரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பாலம் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். சேதமான ரோடுகள் சீரமைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும், தினமும் குடிநீர் வழங்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில்வழியில் உரிய வசதிகளுடன் நவீன பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.தொழில்துறையை பாதுகாக்கும் வகையில்,நூல் விலை உயர்வு, பஞ்சு பதுக்கல் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச பிரச்சினைகளே காரணம் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக மத்திய அரசும், பா.ஜனதாவும் கூறியுள்ளன.

    டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், இது தொடர்பாக மேலும் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் தோல்வியடைந்து விட்டது. இதற்கு மக்களிடம் ஆதரவு கிடைக்காததால், போராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்காக வேறு வழிகளை கையாண்டனர். பாரத் பந்த் என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும், அராஜக சம்பவங்களும் வேதனையை ஏற்படுத்தி உள்ளன.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்து மோடி அரசுக்கும் நன்கு தெரியும். இதற்கு ஒரு தீர்வு காண்பதற்காக தொடர்ந்து முயன்று வருகிறோம். இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    வெனிசூலாவில் அரசியல் நிலைத்தன்மை இல்லாமை, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது போன்ற காரணிகளால், எண்ணெய் உற்பத்தி செய்யும் இந்த நாடுகள் உற்பத்திக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அமெரிக்காவின் ஷேல் கியாஸ் உற்பத்தி இன்னும் தொடங்கவில்லை.

    எண்ணெய் இறக்குமதியை சார்ந்து வாழும் நாடு இந்தியா. ஆனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், தங்கள் சொந்த பிரச்சினைகளால் உற்பத்திக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. எண்ணெய் வளக்குறைவு காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் உற்பத்தி சரிந்துள்ளது.

    இத்தகைய சர்வதேச பிரச்சினைகளே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கூட 2008-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. அப்படி இது ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஆனால் இதற்கான தீர்வு எங்கள் கைகளில் இல்லை.

    இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

    இதற்கிடையே பாரத் பந்த் மூலம் நாட்டில் குழப்பத்தையும், வதந்தியையும் பரப்ப முயல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது பா.ஜனதா புகார் கூறியுள்ளது. காங்கிரஸ் ஒரு ஊழல் நிறைந்த கப்பல் எனவும், அதனுடன் இணையும் கட்சிகளும் காங்கிரசுடன் சேர்ந்து மூழ்கும் என்றும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.  #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #RaviShankarPrasad
    ×