search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seemaraja"

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘சீமராஜா’ திரைப்படம் ரசிகர்களுக்கு பண்டிகை விருந்தாக இருக்கும் என்று இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார். #Seemaraja
    இமான் இசையில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சீமராஜா’. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. குத்துபாடல், நாட்டுப்புற பாடல் மற்றும் மெல்லிசை பாடல் என சீமராஜா ஒரு ஹிட் ஆல்பமாக மாறியிருக்கிறது. "சீமராஜா திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு பண்டிகை விருந்தாக இருக்கும் என நம்பிக்கையோடு கூறுகிறார் இசையமைப்பாளர் டி.இமான். 

    "திரை இசையை பொறுத்தவரை இசையமைப்பாளர்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். முதல் வகையில், சில திரைப்படங்கள் மொத்த படப்பிடிப்பும் முடிந்த பிறகு, பின்னணி இசை கோர்ப்பில் இசையமைப்பாளர்களின் மாயாஜாலத்தால் படத்தை மேலும் மெறுகேற்ற அவர்களை சார்ந்திருப்பார்கள். இன்னொரு பிரிவில், படக்குழுவில் உள்ள மற்றவர்களின் உழைப்போடு போட்டி போட்டு தங்களை நிரூபிக்க இசையமைப்பாளர்கள் சிறப்பான இசையை வழங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். சீமராஜா இதில் இரண்டாவது வகையை சார்ந்தது. இந்த படத்தில் நடிகர்கள் முதல் அரங்க அமைப்பு, ஒளிப்பதிவு என அனைத்தும் என்னை வியக்க வைத்தது. நான் பின்னணி இசையமைப்பில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்காமல் போனால் நான் படத்தில் தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. மேலும், சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் சீமராஜா ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். அது தான் இசையில் மிகப்பெரிய விஷயங்களை செய்ய என்னை தூண்டியது" என்றார் டி.இமான்.



    பாடல்கள் படமாக்கப்பட்டதை பற்றி அவர் கூறும்போது, "சகோதரர் சிவகார்த்திகேயன் உடன் பல படங்களில் பணியாற்றியதால் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் உறுதியாக இருந்தேன். எனினும், நான் இறுதியாக பாடல்களை பார்த்தபோது, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்தின் அழகான ஒளிப்பதிவு மற்றும் நடன இயக்குனர் ஷோபியின் சிறப்பான நடன அசைவுகள் என பாடலை மேலும் மெறுகேற்றியதாக உணர்ந்தேன்" என்றார்.

    விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 13) அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் முன்பதிவு துவங்கி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து வருகின்றன. 24AM ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சூரி, சிம்ரன், லால் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘சீமராஜா’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Seemaraja #Sivakarthikeyan #Samantha
    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் (13-ந்தேதி) வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சீமராஜா படத்தை இணையதள சேவை நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 3,500 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட வாய்ப்பு உள்ளதாக அறிகிறேன். இதை அனுமதித்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். எனவே, சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.



    இந்த மனு நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இணையதள சேவை நிறுவனங்கள் சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் முன்னோட்டம். #Seemaraja #Sivakarthikeyan #Samantha
    24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘சீமராஜா’. 

    சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் முதல்முறையாக அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

    ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், இசை - டி.இமான், எடிட்டிங் - விவேக் ஹர்ஷன், பாடல்கள் - யுகபாரதி, கலை - முத்துராஜ், சண்டைப்பயிற்சி - அனல் அரசு, ஆடை வடிவமைப்பு - அனு பார்த்தசாரதி, எகா லஹானி, நிர்வாக தயாரிப்பு - மாலா மன்யன், தயாரிப்பு - ஆர்.டி.ராஜா, எழுத்து, இயக்கம் - பொன்ராம்.

    படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது,

    “ படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த யோசனை பற்றி பொன்ராமும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் அதிரடி காட்சிகளை குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். 



    காமெடியும் நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் ” என்றார்.

    பொன்ராம் - சிவகார்த்திகேயன் - சூரி - டி.இமான் - பாலசுப்ரமணியம் - விவேக் ஹர்ஷன் என அறுவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    விநாயகர் சதுர்த்தி அன்று நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்க இருக்கிறார். #Sivakarthikeyan #Seemaraja
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

    சமீபத்தில் படத்தை முடித்து சென்சாரில் யு சான்றிதழ் பெற்ற சீமராஜா, செப்டம்பர் மாதம் 13ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் சீமராஜா மற்றும் கடம்பவேல் ராஜா என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைய இருக்கிறது.

    கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.



    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha
    பல படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி வரும் யுகபாரதி, என் வேலையை எளிதாக்கியது யார் என்று கூறியிருக்கிறார். #YugaBharathi #Seemaraja
    இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் மற்றும் டி.இமான் கூட்டணி என்றால் பாடலாசிரியர் யுகபாரதி எப்போதும் மிகப்பெரிய வெற்றிப் பாடல்களை இயல்பாகவே வழங்குகிறார். 'ரஜினி முருகன்' மற்றும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பாடல்களை கேட்டாலே எல்லோருக்கும் இது புரியும்.

    'சீமராஜாவிலும்' இந்த கூட்டணியின் மாயாஜாலம் தொடர்கிறது. இதுகுறித்து பாடலாசிரியர் யுகபாரதி கூறும்போது, "இதனை மாயாஜாலம் எனக் குறிப்பிடுவதை விட, இந்த குழுவில் எங்கள் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளதாகவே நான் கூறுவேன். சிவகார்த்திகேயன், பொன்ராம் மற்றும் டி இமான் உடனான என் பயணம் சீமராஜாவில் என் வேலையை மேலும் எளிதாக்கியிருக்கிறது.

    நாங்கள் எல்லோரும் இந்த படத்தில் ஒன்றாக ஒப்பந்தமான உடனே எங்கள் உடலில் திருவிழா அதிர்வு பரவியது. மேலும், சிவகார்த்திகேயனுடன் பழகிய பிறகு, அவரது இமேஜுக்கு ஏற்றவாறு வரிகளை சேர்ப்பதில் அது எனக்கு நிறைய உதவியது. 



    சீமராஜா ஆல்பம் வேடிக்கை, கொண்டாட்டம், உணர்வுகள் மற்றும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் உருவாகி மக்களை சிறப்பாக சென்றடைந்து இருக்கிறது. இதற்கு பாடல் வரிகள் மட்டும் காரணமல்ல, ரசிகர்களுக்கு பிடிக்கும் விதத்தில் இமான் சார் கொடுத்த இசையும் காரணம். பாலசுப்ரமணியம் சாரின் வண்ணமயமான ஒளிப்பதிவும், நடன இயக்குனர்களின் உழைப்பும் கூடுதலாக கவர்ந்திருக்கிறது" என்றார்.
    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்ததாக கலை இயக்குநர் தெரிவித்துள்ளார். #Seemaraja #Sivakarthikeyan
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

    படம் பற்றி கலை இயக்குநர் முத்துராஜ் பேசும்போது,

    "சீமராஜா படத்தில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவு தான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் ரசித்தார். அவர் படப்பிடிப்புக்கு முன்பே வாட்ஸ்-ஆப்பில் என் பரிந்துரையையும் கேட்பார். இசையமைப்பாளர் டி.இமான் திருவிழா சூழலை தன் இசையால் உருவாக்கியிருக்கிறார்.



    பொதுவாக, ஒரு கிராமத்து படம் பண்ணும் போது அதன் தயாரிப்பாளருக்கு எங்கள் ஆர்ட் டிபார்ட்மெண்ட் மீது சில கட்டுப்பாடுகள் இருக்கும். பெரும்பாலும் எங்கள் வேலை கோயில் திருவிழா அல்லது மார்க்கெட் உருவாக்குவதோடு நின்று விடும். ஆனால் ஆர்.டி.ராஜா என் கற்பனை திறனை வெளிப்படுத்த எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். சில நேரங்களில், நான் செலவை மனதில் வைத்து சமரசம் செய்து கொண்டாலும், படம் நன்றாக வருவதற்கு என்னை ஊக்குவிப்பார். மேலும், பொன்ராம் சாரின் கிராமப்புற வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக வழங்கும் நோக்கம் என்னை இன்னும் பரிசோதனை செய்ய தூண்டியது. இயல்பாகவே ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு சீமராஜாவில் எனக்கு கிடைத்தது" என்றார். #Seemaraja #Sivakarthikeyan

    ‘சீமராஜா’ படப்பிடிப்பு குறித்து பேசிய சமந்தா, சிவகார்த்திகேயன் - சூரியை வீட்ல எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ என்று நினைத்து சிரிப்பேன் என்று கூறினார். #Seemaraja #Samantha
    சமந்தா திருமணத்துக்கு பின்னும் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சீமராஜா, யு டர்ன் என்று 2 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

    சீமராஜா படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, “சிவகார்த்திகேயன், சூரி ரெண்டுபேரும் செட்ல எதையாவது சொல்லி சிரிக்க வெச்சுக்கிட்டே இருப்பாங்க. அவங்களை பார்க்கும்போது காமெடி சேனல்தான் ஞாபகத்துக்கு வரும். வீட்ல இவங்களை எப்படித்தான் வெச்சுக்கிட்டு இருக்காங்களோனு நினைச்சு சிரிப்பேன்.



    சிவகார்த்திகேயனோட ரியாலிட்டி ஷோக்களை நான் பார்த்தது கிடையாது. அந்த காமெடி நிகழ்ச்சிகள்ல எந்த வேலை பண்ணிக்கிட்டு இருப்பாரோ, அதே வேலையைத் தான் செட்டுல பார்த்துட்டு இருப்பார். அதாவது, சரமாரியா காமெடி சொல்லி சிரிக்க வைப்பார். சிவகார்த்திகேயன் ஒரு நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர்!” என்று கூறி உள்ளார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தாவை ட்விட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 70 லட்சமாக உயர்ந்துள்ளது. #SamanthaAkkineni
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். 

    சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்வதிலும், ரசிகர்களுடன் உரையாடுவதிலும் ஆர்வம் காட்டி வரும் சமந்தாவை ட்விட்டரில்  பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 மில்லியனாக (70 லட்சம்) உயர்ந்துள்ளது. தென்னிந்திய நடிகைகளில் சுருதிஹாசனை சுமார் 72 லட்சம் பேரும், திரிஷாவை 48 லட்சம் பேரும், ஹன்சிகாவை 43 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    சமந்தா நடிப்பில் இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியான ரங்கஸ்தலம், இரும்புத்திரை, நடிகையர் திலகம் உள்ளிட்ட மூன்று படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள சீமராஜா வருகிற 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் பத்திரிகை நிருபராக சமந்தா நடித்திருக்கும் யு டர்ன் படமும் அதே நாளில் ரிலீசாகிறது. 

    விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார். #SamanthaAkkineni

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Seemaraja #Sivakarthikeyan
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

    24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
    சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

    டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    நடிகர் அருண் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் வந்த பதிவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. #ArunVijay #Sivakarthikeyan #SeemaRaja
    அதிரடி சண்டைகளுடன் சிவகார்த்திகேயனின் சீமராஜா டிரெய்லர் வெளிவந்துள்ளது. டிரெய்லரை பார்த்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயனின் சண்டையை பாராட்டி பேசி வருகிறார்கள். 

    இந்த நிலையில் நடிகர் அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில்  "நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள்" என்ற வாசகங்கள் அடங்கிய பதிவு அதில் இருந்தது. 

    இது சிவகார்த்திகேயன் டிரெய்லரை விமர்சிக்கும் வகையில் அந்த பதிவு இருந்ததாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதைத்தொடர்ந்து அருண்விஜய் இன்னொரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டார். அதில் எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது. சற்றுமுன்புதான் அது சரி செய்யப்பட்டது. எனவே இதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார். 

    இந்த  நிலையில்  பிறகு நேற்று ட்வீட் செய்த அவர், கணக்கில் ஏற்பட்ட பிரச்சனை சரியாகிவிட்டது. நிலைமையை புரிந்து கொண்டு செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள் என தெரிவித்தார்.



    மேலும், இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் எனக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு தெரியும். இங்கு பெரியவர்கள் சிறியவர்கள் என யாரும் கிடையாது. நான் திறமைக்கு மரியாதை கொடுப்பவன். நான் யாரையும் இழிவு படுத்தியதும் கிடையாது, படுத்த நினைத்ததும் கிடையாது. நடிகர்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை திசை திருப்பாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியன்றில் சிவகார்த்திகேயன், நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. யாரை பார்த்தும் பயப்படுவதும் இல்லை. எனது அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் என்று பரபரப்பாக பேசினார்.
    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் தான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை என்றார். #Seemaraja #Sivakarthikeyan
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

    “சீமராஜா படத்தின் டிரெய்லரில் கடைசி 3 காட்சிகளை பார்த்து சமூக வலைத்தளங்களில் சிலர் பாகுபலி மாதிரி இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். அது எங்களுக்கும், எங்கள் உழைப்புக்கும் கிடைத்த பெருமை. இந்த படத்தை விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்டிரைக் வந்தது.



    அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுகள். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த யோசனை பற்றி பொன்ராமும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் அதிரடி காட்சிகளை குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். 

    காமெடியும் நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன்”. இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    சிவகார்த்திகேயன் பேசிய வீடியோவை பார்க்க:


    சீமராஜா டிரைலர் பார்க்க:

    சமந்தா நடிப்பில் யு டர்ன் மற்றும் சீமராஜா படங்கள் வருகிற 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், நாக சைதன்யா படமும் அதே நாளில் ரிலீசாவதால், கணவர் படம் வெற்றி பெறவே ஆசை என்று சமந்தா கூறினார். #Samantha #UTurn #Seemaraja
    சமந்தா நடிப்பில் வரும் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் யு டர்ன். கன்னடத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற யு டர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பு இது. இதில் பத்திரிகையாளராக சமந்தா நடித்துள்ளார்.

    இந்த படத்துக்காக அவர் பேட்டி அளித்தபோது இதே நாளில் உங்கள் கணவர் நாக சைதன்யாவின் படமும் வெளியாகிறது. எது வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுவீர்கள் என்று கேட்டதற்கு என்ன இருந்தாலும் நான் முதலில் அவருக்கு மனைவி.



    எனவே கணவர் ஜெயிக்க வேண்டும் என்று வேண்டுவேன். இருவரது படங்களுமே வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது. காரணம் இரண்டுமே வெவ்வேறு வகை படங்கள்’ என்று கூறினார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள சீமராஜா படமும் அதேநாளில் தான் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Samantha #UTurn #Seemaraja

    ×