என் மலர்
சினிமா

சமந்தா பின்னணியில் 70 லட்சம் பேர்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தாவை ட்விட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 70 லட்சமாக உயர்ந்துள்ளது. #SamanthaAkkineni
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்வதிலும், ரசிகர்களுடன் உரையாடுவதிலும் ஆர்வம் காட்டி வரும் சமந்தாவை ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 மில்லியனாக (70 லட்சம்) உயர்ந்துள்ளது. தென்னிந்திய நடிகைகளில் சுருதிஹாசனை சுமார் 72 லட்சம் பேரும், திரிஷாவை 48 லட்சம் பேரும், ஹன்சிகாவை 43 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா நடிப்பில் இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியான ரங்கஸ்தலம், இரும்புத்திரை, நடிகையர் திலகம் உள்ளிட்ட மூன்று படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள சீமராஜா வருகிற 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் பத்திரிகை நிருபராக சமந்தா நடித்திருக்கும் யு டர்ன் படமும் அதே நாளில் ரிலீசாகிறது.
விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார். #SamanthaAkkineni
Next Story