என் மலர்

  நீங்கள் தேடியது "U Turn"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை சமந்தா, சினிமா துறையில் உள்ள கருப்பு ஆடுகளால்தான் அந்த பிரச்சனை ஏற்படுகிறது என்று கூறியிருக்கிறார். #Samantha
  சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான யு டர்ன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கச்சிதமான திரைக்கதையும், பட உருவாக்கமும் படத்தை வெற்றிபெறச் செய்தன. பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சமந்தா இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருவதும் வெற்றிக்கான முக்கிய காரணமாக உள்ளது. 

  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த சீமராஜா திரைப்படமும் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகின்றன. திருமணத்திற்குப் பின் நடிப்பைக் கைவிட்ட நடிகைகள் மத்தியில் சமந்தா தன் வேகத்தை குறைத்துக் கொள்ளாமல் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

  இந்நிலையில், மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சமந்தா, ‘நான் திரைத்துறையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன். ஒரு நடிகரைத்தான் திருமணம் செய்திருக்கிறேன். சினிமாதான் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது. அதை நான் கடவுளாக மதிக்கிறேன்.   எனக்கு பாலியல் தொந்தரவு இருந்ததில்லை. நல்ல நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்கள் படங்களில் இரண்டு மூன்று முறை தொடர்ந்து நடித்திருக்கிறேன். எல்லாத்துறைகளிலும் ஒரு கருப்பு ஆடு இருக்கிறார்கள். அவர்களால் அந்த துறையே கெட்டுப் போகிறது. அதுபோல் சினிமாத்துறையிலும் இருக்கிறார்கள். அவர்களால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீமராஜா, யு டர்ன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக பிரபல பெண் இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். #Samantha
  சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான யு டர்ன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கச்சிதமான திரைக்கதையும், பட உருவாக்கமும் படத்தை வெற்றிபெறச் செய்தன. பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சமந்தா இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருவதும் வெற்றிக்கான முக்கிய காரணமாக உள்ளது. 

  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த சீமராஜா திரைப்படமும் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகின்றன. திருமணத்திற்குப் பின் நடிப்பைக் கைவிட்ட நடிகைகள் மத்தியில் சமந்தா தன் வேகத்தை குறைத்துக் கொள்ளாமல் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து ஒரு படம் மட்டுமே வெளிவந்துள்ளது.

  சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்துப் படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. தற்போது இவர் நடிக்க உள்ள அடுத்த படத்தை பி.வி.நந்தினி இயக்க உள்ளார். 2013ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஜபார்தஸ்த்’ படத்தை இவர் இயக்கி உள்ளார்.

  நந்தினி தனது திரைக்கதையை சமந்தாவிடம் கூற, அவரை திரைக்கதையின் சுவாரஸ்யம் மிகவும் ஈர்த்துள்ளது. உடனே படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இது தவிர சமந்தா நடிப்பில் தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தயாராகிவருகிறது. தெலுங்கில் அவரது கணவர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்கு நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Samantha
  தெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்த சமந்தா தொடர்ந்து, தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்தார். அப்படி ஒப்புக்கொண்ட படங்கள் எல்லாம் வரிசையாக வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறவே தொடர்ந்து புதிய படங்களிலும் நடித்துவருகிறார்.

  சமந்தா நடிப்பில் சீமராஜா, யூ டர்ன் ஆகிய படங்கள் கடந்த வாரம் வெளியானது. சீமராஜாவை விட சமந்தா லீட் ரோலில் நடித்த யூடர்ன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வரும் சமந்தா, சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளார். தற்காலிக ஓய்வுக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பார் என கணவர் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பை சமந்தா வெளியிடாமல் நாகசைதன்யா வெளியிட்டுள்ளதால் ஒருவேளை சமந்தா நடிப்பதற்கு அவரது கணவர் வீட்டில் தடை போடுகிறார்களா? என்ற கேள்வி சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தன்னுடைய கணவர் நாக சைதன்யாவிற்கு சிறப்பு பரிசு ஒன்றை அளிக்க இருக்கிறார். #Samantha
  சமந்தாவுக்கு கறுப்பு நிற கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இதுபற்றி கூறும்போது ‘ஆமாம். அது மட்டுமல்ல. அதுல கண்டிப்பா சின்னதா தலையணை இருக்கணும். எனக்கு கார் ஓட்டத் தெரியாது. ஆனால் நாக சைதன்யா கார் ஓட்டுறதை ரசிக்கப் பிடிக்கும். 

  நேரம் கிடைத்தால் அவருடன் பயணம் செய்ய கிளம்பிவிடுவேன். கல்யாணத்துக்கு முன்னாடி நாகசைதன்யாவுக்கு பைக் பரிசாக அளித்தேன். இப்போது அவருக்கு எனக்கு பிடித்த கறுப்பு நிறத்தில் ஒரு கார் பரிசளிக்கப்போறேன்’ என்று கூறி உள்ளார்.   ஒரு பேட்டியில் சமந்தாவிடம் விஜய், அஜித்திடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன? என்று கேட்டதற்கு விஜய்யிடம் இளமையின் ரகசியத்தையும் அஜித்திடம் எல்லோருக்கும் உங்களை பிடிப்பதற்கான காரணம் என்ன என்றும் கேட்க விரும்புவதாக கூறி உள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமந்தா நடிப்பில் ‘யு டர்ன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற நாகர்ஜுனா, சமந்தா கின்னஸ் சாதனைக்கு முயற்சிப்பதாக கிண்டல் செய்தார். #UTurn #Samantha
  சமந்தா நடிப்பில் ‘யு டர்ன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்களும் அவரது கணவர் நாகசைதன்யா நடிப்பில் ‘சைலஜா அல்லுடு ரெட்டி’ என்ற தெலுங்கு படமும் ஒரே தேதியில் வெளியாகி யுள்ளது.

  தெலுங்கு யூ டர்ன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனா, “ஒரே குடும்பத்தினரின் மூன்று படங்கள் வெளியாகின்றன. சமந்தா ஏதேனும் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்கிறார்” என கிண்டல் செய்துள்ளார்.

  மேலும் “பவன் குமார் இயக்கத்தில் சுயாதீன படமாக உருவான ‘லூசியா’ கன்னடத்தில் வெற்றி பெற்றது. அதனையடுத்து மிகப்பெரும் வெற்றியாக ‘யு டர்ன்’ அமைந்தது. அதன் டிரெய்லர் பார்த்து வியந்தேன்.  இந்தப் படத்தின் கதையை சமந்தா என்னிடம் சொல்லும்போது ரொம்ப திரில்லிங்காக இருந்தது. அந்தக் கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் திருப்புமுனையான காட்சிகள் என்னை வியக்கவைத்தன. திரைத்துறையில் இது போன்று புதிய முயற்சிகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற முயற்சிகள் வெற்றியும் பெற வேண்டும்” என்று வாழ்த்தி உள்ளார். #UTurn #Samantha #Nagarjuna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பவன்குமார் இயக்கத்தில் சமந்தா - ஆதி, நரேன், ராகுல் ரவீந்திரன், பூமிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `யு டர்ன்' படத்தின் விமர்சனம். #UTurnReview #Samantha
  இன்ஜினியரிங் முடித்துவிட்டு பிரபல பத்திரிகை ஒன்றில் நிருபராக சேர்கிறார் சமந்தா. தனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலையில், வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுகிறார். வேளச்சேரி மேம்பாலத்தில் சாலையை கடக்கக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை நகர்த்திவிட்டு சாலையை கடப்பவர்களை தேர்வு செய்து அவர்களை பேட்டி எடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதற்காக சாலை விதிகளை மீறுபவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார்.

  ஒருநாள் தனது லிஸ்டில் இருக்கும் பெயர்களில் ஒன்றை தேர்வு செய்து, அவரை பேட்டி காண செல்கிறார். ஆனால் குறிப்பிட்ட அந்த நபரை சந்திக்க முடியாமல் திரும்பி விடுகிறார். இந்த நிலையில், சமந்தா பேட்டி காண சென்ற நபர், மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். அதில் மரணத்தில் சமந்தாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் போலீசார் சமந்தாவை கைது செய்கின்றனர்.

  இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியான ஆதி, சமந்தாவிடம் கொலை பற்றி விசாரிக்க தான் அந்த கொலையை செய்யவில்லை என்றும், கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறுகிறார். ஆனால் சமந்தா சென்ற நேரத்தில் தான் கொலை நடந்ததாக போலீசார் கூற, தான் ஒரு பத்திரிகை நிருபர் என்பதையும், அங்கு சென்றதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.  சமந்தாவின் பேச்சில் உண்மை இருப்பதாக உணரும் ஆதி, சமந்தாவை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடிவு செய்கிறார். அதேநேரத்தில் சமந்தாவிடம் உள்ள அனைவரின் தகவல்களையும் வாங்கி தனது விசாரணையை தொடங்குகிறார். அதில் சமந்தா சேகரித்த பட்டியலில் உள்ள அனைவருமே இறந்து விடுகின்றனர். 

  இந்த மரணங்களில் இருக்கும் ஆதியும், அந்தமும் புரியாமல் தவிக்கும் ஆதி இந்த மரணங்களுக்கான காரணங்களை கண்டுபிடித்தாரா? சமந்தாவின் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் இறக்க காரணம் என்ன? சமந்தா இந்த வழக்கில் இருந்து எப்படி தப்பித்தார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

  ஒரு இளம் பத்திரிகை நிருபராக, என்னவென்றே புரியாத ஒரு வழக்கில் சிக்கித் தவித்தும், அதை சமாளிக்க போராடும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிப்பு அபாரமாக இருக்கிறது, பாராட்டுக்களை வாங்கியிருக்கிறார். போலீஸ் அதிகாரியான ஆதி திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்த தவறவில்லை. அவரது கதாபாத்திரம் படத்தின் முக்கிய அங்கமாக பயணிக்கிறது. எப்போதுமே வித்தியாசமாக கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்கும் நரேனின் கதாபாத்திரம் படத்திற்கு அச்சாணியாக விளங்குகிறது. பூமிகா இந்த படத்தில் வலுவான கதாபாத்திரத்தை ஏற்று, அதை சிறப்பாகவே நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.   சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனின் கதாபாத்திரமும் ரசிக்கும்படியாகவே வந்துள்ளது. மற்றபடி ஆடுகளம் நரேன், ரவி பிரகாஷ், கீதா ரவிசங்கர் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் விறுவிறுப்புக்கு துணையாக இருந்துள்ளனர்.

  கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற யு டர்ன் படத்தின் ரீமேக் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலுவான அச்சாணியை போட்டியிருக்கிறார் இயக்குநர் பவண் குமார். படம் ஆரம்பிக்கும் நிமிடம் முதல் இறுதி வரை படத்தை விறுவிறுப்பாகவே கொண்டு செல்வதே இயக்குநரின் பலம். அடுத்ததடுத்த காட்சிகள் வேககமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்வது ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கிறது. இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

  அனிருத், பூர்ணசந்திரா தேஜஸ்வியின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

  மொத்தத்தில் `யு டர்ன்' விறுவிறுப்பு. #UTurnReview #Samantha #Aadhi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பவன்குமார் இயக்கத்தில் சமந்தா - ஆதி, நரேன், ராகுல் ரவீந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் `யு டர்ன்' படத்தின் முன்னோட்டம். #UTurn #Samantha

  பி.ஆர்.8 கிரியேஷன்ஸ், ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் மற்றும் விஒய் கம்பைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் `யு டர்ன்'.

  நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடித்திருக்கிறார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆதி, நரேன், பூமிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

  ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி, இசை - அனிருத், பூர்ணசந்திரா தேஜஸ்வி, எடிட்டிங் - சுரேஷ் ஆறுமுகம், பாடல்கள் - சுபு, கலை - ராமன்ஜனேயலு, ஏ.எஸ்.பிரகாஷ், லதா தருண் தாஸ்யம், சண்டைப்பயிற்சி - சேத்தன் டி சவுசா, ஆடை வடிவமைப்பு - பல்லவி சிங், தயாரிப்பு - ராம்பாபு பந்தாரு, ஸ்ரீனிவாச சித்தூரி, வசனம் - கவின் பாலா, இணை இயக்குநர் - கவின் பாலா, சூரி ரவி, திரைக்கதை, இயக்கம் - பவன்குமார்.  தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் செப்டம்பர் 13-ஆம் தேதி (நாளை) ரிலீசாக இருக்கிறது. அதேநாளில் தான் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள சீமராஜா படமும் ரிலீசாக இருக்கிறது. 

  இதுபற்றி சமந்தாவிடம் கேட்டபோது, ‘2 படங்களுமே வேறு வேறு வகையை சேர்ந்தவை. சீமராஜா கிராமத்து படமாகவும், யு டர்ன் ஒரு கொலை சம்பவத்தின் பின்னணியிலும் உருவாகி இருக்கின்றன. இரண்டையுமே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ என்று கூறி உள்ளார். #UTurn #Samantha

  யு டர்ன் படத்தின் டிரைலர்:


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யுடர்ன் மற்றும் சீமராஜா படத்தை தொடர்ந்து அடுத்ததாக சமந்தா, தேசிய விருது வாங்க வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். #Samantha
  சமந்தா நடிப்பில் யு டர்ன், சீமராஜா 2 படங்களும் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த படங்களைத் தொடர்ந்து சமந்தா பேன்டசி காமெடி படம் ஒன்றில் 70 வயது மூதாட்டியாக நடிக்க இருக்கிறார்.

  2014-ம் ஆண்டு வெளிவந்து சர்வதேச அளவில் பெரும் வெற்றிபெற்ற ‘மிஸ் கிரானி’ படத்தின் ரீமேக்தான் இப்படம். பிரபல தெலுங்குப் பெண் இயக்குனரான நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்குகிறார்.   திருமணத்துக்கு பின்னும் கூட தனது படங்கள் வெற்றி பெறுவதால் தன்னுடைய கதாபாத்திர தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறார். முக்கியமாக தனக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடிக்கிறார். 70 வயது மூதாட்டியாக நடிக்க சம்மதித்து இருப்பது தேசிய விருது வாங்க வேண்டும் என்ற ஆசையில் தான் என கூறுகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தாவை ட்விட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 70 லட்சமாக உயர்ந்துள்ளது. #SamanthaAkkineni
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். 

  சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்வதிலும், ரசிகர்களுடன் உரையாடுவதிலும் ஆர்வம் காட்டி வரும் சமந்தாவை ட்விட்டரில்  பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 மில்லியனாக (70 லட்சம்) உயர்ந்துள்ளது. தென்னிந்திய நடிகைகளில் சுருதிஹாசனை சுமார் 72 லட்சம் பேரும், திரிஷாவை 48 லட்சம் பேரும், ஹன்சிகாவை 43 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  சமந்தா நடிப்பில் இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியான ரங்கஸ்தலம், இரும்புத்திரை, நடிகையர் திலகம் உள்ளிட்ட மூன்று படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள சீமராஜா வருகிற 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் பத்திரிகை நிருபராக சமந்தா நடித்திருக்கும் யு டர்ன் படமும் அதே நாளில் ரிலீசாகிறது. 

  விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார். #SamanthaAkkineni

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமந்தா நடிப்பில் யு டர்ன் மற்றும் சீமராஜா படங்கள் வருகிற 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், நாக சைதன்யா படமும் அதே நாளில் ரிலீசாவதால், கணவர் படம் வெற்றி பெறவே ஆசை என்று சமந்தா கூறினார். #Samantha #UTurn #Seemaraja
  சமந்தா நடிப்பில் வரும் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் யு டர்ன். கன்னடத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற யு டர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பு இது. இதில் பத்திரிகையாளராக சமந்தா நடித்துள்ளார்.

  இந்த படத்துக்காக அவர் பேட்டி அளித்தபோது இதே நாளில் உங்கள் கணவர் நாக சைதன்யாவின் படமும் வெளியாகிறது. எது வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுவீர்கள் என்று கேட்டதற்கு என்ன இருந்தாலும் நான் முதலில் அவருக்கு மனைவி.  எனவே கணவர் ஜெயிக்க வேண்டும் என்று வேண்டுவேன். இருவரது படங்களுமே வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது. காரணம் இரண்டுமே வெவ்வேறு வகை படங்கள்’ என்று கூறினார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள சீமராஜா படமும் அதேநாளில் தான் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Samantha #UTurn #Seemaraja

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாக சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்ட சமந்தா, தற்போது அவருக்கு போட்டியாக களமிறங்க இருக்கிறார். #Samantha #NagaChaitanya
  சமந்தா - நாக சைதன்யா திருமணம் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்றது. அதன் பின் இப்போது வரை சமந்தா நடிப்பில் ஐந்து படங்கள் வெளியாகியுள்ளன.

  தமிழில் மெர்சல், இரும்புத்திரை ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் வெற்றிப்படங்களாகவும் அமைந்தன. சமந்தா பிரதான வேடம் ஏற்று நடித்துள்ள யூ டர்ன் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் அதே நாளில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள சீமராஜா படமும் வெளியாகிறது.  இந்நிலையில் அதே நாளில் நாகசைதன்யா நடித்துள்ள ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ படமும் வெளியாக உள்ளது. திருமணத்திற்குப் பின் அவர் கதாநாயகனாக நடித்து வெளியாகும் முதல் படம் இதுவாகும். மகாநடி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதுதவிர சமந்தா நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் தயாராகி வருகிறது. முன்னதாக சமந்தா தனது கணவரின் படத்துக்காக தனது பட ரிலீசை தள்ளிவைப்பார் என்று செய்தி வந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணத்திற்கு முன்னும், பின்னும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா நடித்துள்ள 3 படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருப்பதால் தென்னிந்திய சினிமாவில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. #Samantha #Seemaraja
  சமந்தா நடித்த 3 படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது. நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, திருமணத்துக்கு பின்னும் முன்னணி நடிகையாகவே திகழ்கிறார். 

  அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான `இரும்புத்திரை', `நடிகையர் திலகம்' ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் வெளியானது. அதுபோல சமந்தா நடித்த 3 படங்கள் அடுத்த மாதம் ஒரே நாளில் ரிலீசாக இருக்கிறது.  சமந்தா சிவகார்த்திகேயனுடன் நடித்த `சீமராஜா' படம் செப்டம்பர் 13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு ரிலீசாக இருக்கிறது. அதே நாளில் சமந்தா முதன்மை வேடத்தில் நடித்த `யு டர்ன்' படமும் வெளியாகிறது. இந்த பட்டியலில் இப்போது நெஞ்சமெல்லாம் பல வண்ணம் படம் சேர்ந்து இருக்கிறது.  சமந்தா, மகேஷ்பாபு, வெங்கடேஷ், அஞ்சலி நடித்த `சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லெ செட்டு' என்ற படம் தமிழில் டப் ஆகிறது. படத்தை ரோல்ஸ் பிரைட் நிறுவனம் சார்பில் மெகபூ பாஷா தயாரித்து இருக்கிறார். ஆக, தென் இந்திய நடிகைகளில் முதன்முறையாக ஒரு நடிகையின் 3 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கின்றன. சமந்தா இந்த அரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். #Samantha #Seemaraja #UTurn #NenhamellamPalaVannam