search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nenjamellam Pala Vannam"

    திருமணத்திற்கு முன்னும், பின்னும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா நடித்துள்ள 3 படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருப்பதால் தென்னிந்திய சினிமாவில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. #Samantha #Seemaraja
    சமந்தா நடித்த 3 படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது. நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, திருமணத்துக்கு பின்னும் முன்னணி நடிகையாகவே திகழ்கிறார். 

    அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான `இரும்புத்திரை', `நடிகையர் திலகம்' ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் வெளியானது. அதுபோல சமந்தா நடித்த 3 படங்கள் அடுத்த மாதம் ஒரே நாளில் ரிலீசாக இருக்கிறது.



    சமந்தா சிவகார்த்திகேயனுடன் நடித்த `சீமராஜா' படம் செப்டம்பர் 13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு ரிலீசாக இருக்கிறது. அதே நாளில் சமந்தா முதன்மை வேடத்தில் நடித்த `யு டர்ன்' படமும் வெளியாகிறது. இந்த பட்டியலில் இப்போது நெஞ்சமெல்லாம் பல வண்ணம் படம் சேர்ந்து இருக்கிறது.



    சமந்தா, மகேஷ்பாபு, வெங்கடேஷ், அஞ்சலி நடித்த `சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லெ செட்டு' என்ற படம் தமிழில் டப் ஆகிறது. படத்தை ரோல்ஸ் பிரைட் நிறுவனம் சார்பில் மெகபூ பாஷா தயாரித்து இருக்கிறார். ஆக, தென் இந்திய நடிகைகளில் முதன்முறையாக ஒரு நடிகையின் 3 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கின்றன. சமந்தா இந்த அரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். #Samantha #Seemaraja #UTurn #NenhamellamPalaVannam

    தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு, தற்போது ‘நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’ படத்தில் கடைக்குட்டி சிங்கமாக நடித்திருக்கிறார். #MaheshBabu
    மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா (பி.லிட்) படநிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்திருக்கும் படம் ‘நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.

    தெலுங்கில் “சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்த படமான இது ஆந்திர திரையுலகினரே அதிசயிக்கும் விதமான படமானது. இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே புதுமுகங்களை வைத்து இயக்கிய “கொத்த பங்காரு லோகம்” அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஏ.ஆர்.கே.ராஜராஜா இப்படம் குறித்து இவர் கூறும்போது, ‘இந்த படம் தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட் பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை தகர்த்தெரிந்துள்ளது.



    முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர். கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அதே போலவே இந்த படத்தில் மகேஷ்பாபு கடைக்குட்டியாக நடித்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் செல்வந்தன் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக இந்த நெஞ்சமெல்லாம் பல வண்ணம் இருக்கும். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது’ என்றார்.
    ×