என் மலர்

  சினிமா

  பெண் இயக்குனர் படத்தில் சமந்தா
  X

  பெண் இயக்குனர் படத்தில் சமந்தா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீமராஜா, யு டர்ன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக பிரபல பெண் இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். #Samantha
  சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான யு டர்ன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கச்சிதமான திரைக்கதையும், பட உருவாக்கமும் படத்தை வெற்றிபெறச் செய்தன. பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சமந்தா இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருவதும் வெற்றிக்கான முக்கிய காரணமாக உள்ளது. 

  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த சீமராஜா திரைப்படமும் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகின்றன. திருமணத்திற்குப் பின் நடிப்பைக் கைவிட்ட நடிகைகள் மத்தியில் சமந்தா தன் வேகத்தை குறைத்துக் கொள்ளாமல் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து ஒரு படம் மட்டுமே வெளிவந்துள்ளது.

  சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்துப் படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. தற்போது இவர் நடிக்க உள்ள அடுத்த படத்தை பி.வி.நந்தினி இயக்க உள்ளார். 2013ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஜபார்தஸ்த்’ படத்தை இவர் இயக்கி உள்ளார்.

  நந்தினி தனது திரைக்கதையை சமந்தாவிடம் கூற, அவரை திரைக்கதையின் சுவாரஸ்யம் மிகவும் ஈர்த்துள்ளது. உடனே படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இது தவிர சமந்தா நடிப்பில் தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தயாராகிவருகிறது. தெலுங்கில் அவரது கணவர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.
  Next Story
  ×