என் மலர்
சினிமா

சமந்தாவை கிண்டல் செய்த மாமனார்
சமந்தா நடிப்பில் ‘யு டர்ன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற நாகர்ஜுனா, சமந்தா கின்னஸ் சாதனைக்கு முயற்சிப்பதாக கிண்டல் செய்தார். #UTurn #Samantha
சமந்தா நடிப்பில் ‘யு டர்ன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்களும் அவரது கணவர் நாகசைதன்யா நடிப்பில் ‘சைலஜா அல்லுடு ரெட்டி’ என்ற தெலுங்கு படமும் ஒரே தேதியில் வெளியாகி யுள்ளது.
தெலுங்கு யூ டர்ன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனா, “ஒரே குடும்பத்தினரின் மூன்று படங்கள் வெளியாகின்றன. சமந்தா ஏதேனும் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்கிறார்” என கிண்டல் செய்துள்ளார்.
மேலும் “பவன் குமார் இயக்கத்தில் சுயாதீன படமாக உருவான ‘லூசியா’ கன்னடத்தில் வெற்றி பெற்றது. அதனையடுத்து மிகப்பெரும் வெற்றியாக ‘யு டர்ன்’ அமைந்தது. அதன் டிரெய்லர் பார்த்து வியந்தேன்.

இந்தப் படத்தின் கதையை சமந்தா என்னிடம் சொல்லும்போது ரொம்ப திரில்லிங்காக இருந்தது. அந்தக் கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் திருப்புமுனையான காட்சிகள் என்னை வியக்கவைத்தன. திரைத்துறையில் இது போன்று புதிய முயற்சிகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற முயற்சிகள் வெற்றியும் பெற வேண்டும்” என்று வாழ்த்தி உள்ளார். #UTurn #Samantha #Nagarjuna
Next Story






