search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுகபாரதி"

    • அருளாளர்அருளிய வழிகளை நாமும் கடைபிடித்தல் வேண்டும். எவ்வுயிரையும் கொலைசெய்யக்கூடாது.
    • இந்நிகழ்ச்சியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ்க்கனவு என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி விஜயமங்கலம் சசூரி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை தாங்கினார். பாடலாசிரியர் யுகபாரதி வள்ளுவரும் வள்ளலாரும் என்ற தலைப்பில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டு பரப்புரையாற்றினார்.

    அவர் பேசுகையில்,திருக்குறளில் இருக்கும் சொற்களை புரிந்து படித்தால் உலகின் அனைத்தையும் தொகுத்து விளக்கும் அடிப்படையில் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு வாழ வேண்டும் என்று மிகத்தெளிவாகவும், தமிழின் பெருமிதத்தையும், மரபையும் எடுத்துரைக்கிறது.

    அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தையும், சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் வள்ளலார். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய கருணை மனம் இருக்க வேண்டும் எனவும் உனக்காக உண்ணாவிரதம் இருப்பதைவிட இன்னொருவருக்காக கொடுக்கும் உணவு மிகவும் பெரியது. பசி பிணியை போக்குவது தான் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை என்று வள்ளலார் எடுத்துரைத்துள்ளார்.

    வள்ளலார் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அருளாளர்அருளிய வழிகளை நாமும் கடைபிடித்தல் வேண்டும். எவ்வுயிரையும் கொலைசெய்யக்கூடாது. எல்லா உயிர்களையும் தன் உயிர் என எண்ண வேண்டும். மனிதநேயத்துடன் வாழ வேண்டும். ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களை காட்டிலும் சமூகத்தில் அதிகபடியான தரவுகள் உள்ளன. இதை மாணவர்களாகிய நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கையேடும், தமிழ்ப்பெருமிதம் என்கின்ற கையேடும் வழங்கப்பட்டது. இதில் தமிழ்ப் பெருமிதம் கைேயட்டில் உள்ள ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள தகவல் குறித்து ஒரு நிமிடத்தில் தங்களுடைய சிறப்பான கருத்துக்களை தெரிவித்த மாணவ, மாணவிகளை பாராட்டி பெருமித செல்வன் மற்றும் பெருமிதச்செல்வி என்கின்ற பட்டத்தோடு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்விவழிகாட்டு குறித்த கண்காட்சி, நான் முதல்வன் திட்டம் குறித்த கண்காட்சி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பிலும், இதர கடன் உதவிகள் தொடர்பான கண்காட்சி மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தாட்கோ நிறுவனத்தின் சார்பிலும், புத்தக அரங்குகள் மாவட்ட நூலகத்தின் சார்பிலும், சுயஉதவி குழுக்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி அரங்குகள் சார்பிலும் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, சசூரி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராம்குமார்,பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    பல படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி வரும் யுகபாரதி, என் வேலையை எளிதாக்கியது யார் என்று கூறியிருக்கிறார். #YugaBharathi #Seemaraja
    இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் மற்றும் டி.இமான் கூட்டணி என்றால் பாடலாசிரியர் யுகபாரதி எப்போதும் மிகப்பெரிய வெற்றிப் பாடல்களை இயல்பாகவே வழங்குகிறார். 'ரஜினி முருகன்' மற்றும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பாடல்களை கேட்டாலே எல்லோருக்கும் இது புரியும்.

    'சீமராஜாவிலும்' இந்த கூட்டணியின் மாயாஜாலம் தொடர்கிறது. இதுகுறித்து பாடலாசிரியர் யுகபாரதி கூறும்போது, "இதனை மாயாஜாலம் எனக் குறிப்பிடுவதை விட, இந்த குழுவில் எங்கள் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளதாகவே நான் கூறுவேன். சிவகார்த்திகேயன், பொன்ராம் மற்றும் டி இமான் உடனான என் பயணம் சீமராஜாவில் என் வேலையை மேலும் எளிதாக்கியிருக்கிறது.

    நாங்கள் எல்லோரும் இந்த படத்தில் ஒன்றாக ஒப்பந்தமான உடனே எங்கள் உடலில் திருவிழா அதிர்வு பரவியது. மேலும், சிவகார்த்திகேயனுடன் பழகிய பிறகு, அவரது இமேஜுக்கு ஏற்றவாறு வரிகளை சேர்ப்பதில் அது எனக்கு நிறைய உதவியது. 



    சீமராஜா ஆல்பம் வேடிக்கை, கொண்டாட்டம், உணர்வுகள் மற்றும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் உருவாகி மக்களை சிறப்பாக சென்றடைந்து இருக்கிறது. இதற்கு பாடல் வரிகள் மட்டும் காரணமல்ல, ரசிகர்களுக்கு பிடிக்கும் விதத்தில் இமான் சார் கொடுத்த இசையும் காரணம். பாலசுப்ரமணியம் சாரின் வண்ணமயமான ஒளிப்பதிவும், நடன இயக்குனர்களின் உழைப்பும் கூடுதலாக கவர்ந்திருக்கிறது" என்றார்.
    ×